யாழ் மாநகரசபையின் எதிர்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினருமான சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுமைக்குட்பட்ட யாழ் மாநகரசபையின் தரப்புக்கு மாறியுள்ளதாக யாழ் மாநகரசபை முதல்வர் திருமதி.யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன.
ஆளும்கட்சி தாவாமல் மாநகரசபையின் எதிர்கால திட்டங்களில் ஆளும் கட்சி தீர்மானங்களுக்கு ஆதரவளிக்க உள்ளதுடன், மாநகரசபையின் மாதாந்த கூட்டங்களிலும் தொடர்ந்து கலந்து கொள்ள இருப்தாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.
சபையின் ஆளும் தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் அமைப்பாளர்கள் 2011.06.04 ஆம் திகதி நடத்திய கூட்டத்தில் சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸ் கலந்து கொண்டதுடன் ஆளும் தரப்பு உறுப்பினர் சுவீகரன் நிஷாந்தனுக்கு எதிரான ஒழுங்காற்று நடவடிக்கைத் தீர்மானத்திலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ் மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸ், யாழ் மாநகரசபையின் ஆளும் தரப்புக்கு மாறிய விடயமாக எந்தவித உத்தியோகபூர்வ அறிவித்தலும் கிடைக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
கட்சி மாறியது சம்பந்தமாக அவர் சார்ந்த கட்சியோ அல்லது சட்டத்தரணி றெமிடியாஸோ எந்தவித அறிக்கையும் இதுவரை விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.