ஈழ விடுதலைப் போராட்டம் எனக் கூறிப் புறப்பட்டவர்கள், இத் தேச மக்களின் விடுதலைக்காக செய்தவை என்ன, இதற்கான விடையை மனம் திறந்து உரத்துக் கூற முடியுமா? ஈழ விடுதலை என நாமமிட்ட இயக்கங்கள் முதற்கொண்டு தமிழீழ விடுதலை என பெயரிட்ட இயக்கங்கள் வரை துப்பாக்கி ஏந்திய போராட்டத்தை ஆரம்பித்து எமது இனத்தை அழித்ததே வரலாறு!ஒன்றும் அறியாத அப்பாவி இளைஞர்களை விடுதலைப் போராட்டம் எனும் பெயரில் அணி திரட்டி அழிவுப் பாதைக்கு கொண்டு சென்றது தான் இந்த விடுதலை இயக்கங்கள் செய்த காரியமாகும்.
ஈழப் புரட்சி அமைப்பு, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எனப் பெயரிட்டு இயக்கங்களை உருவாக்கியவர்கள் எமது மக்களின் வளர்ச்சிக்காக செய்த நல்ல காரியங்கள் எதுவுமே இல்லை.
இந்த விடுதலை இயக்கங்களின் உறுப்பினர்களுக்காவது குறைந்த பட்சம் எதாவது செய்து கொடுக்க இவர்களால் முடிந்ததா, இயக்க இலட்சியத்துக்காக உழைத்து மரணித்துப் போன போராளிகளின் குடும்பங்கள் நாளாந்த உணவுக்காகப் போராட வேண்டிய சூழ்நிலை இன்றும் உள்ளது, இயக்கத் தலைமையோ தங்களையும் தங்களது குடும்பத்தையும் பாதுகாத்துக் கொண்டதுடன் வழங்களையும் சுருட்டிக் கொண்டதே வரலாறு, இதில் சற்று வித்தியாசமாக விடுதலைப் புலிகள் தாங்களும் அழிந்து தம்மைச் சார்ந்த சமூகத்தையும் அழித்துச் சென்றது.
பாரிஸில் மாநாடு நடத்தும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மக்களுக்காக இது வரை செய்த நல்ல காரியம் எதுவும் இல்லை, இயக்கச் சொத்துக்களை பாகப் பிரிவினை செய்து கொண்ட சுரேஸ் முதல் வரதர் வரை தங்களது சட்டைப் பைகளை நிரப்பிக் கொண்டார்களே தவிர மக்களின் நலனுக்காக எதுவுமே செய்யவில்லை.
வடக்கு கிழக்கில் இருந்து இந்திய இராணுவம் பின்வாங்கிச் சென்ற போது அவர்களின் பின்னால் ஓடிய வரதராஜப்பெருமாள் வட இந்தியாவில் சொத்துக்களை வாங்கி மனைவி, பிள்ளைகளுடன் சுகபோகம் அனுபவித்தார், இவர் சார்ந்த இயக்கத்தின் இலட்சியத்துக்காகப் போராடிய போராளிகள் விடுதலைப் புலிகளால் துரோகிகளாக்கப்பட்டு தெருத் தெருவாகச் சுட்டுக் கொல்லப்பட்ட போது அந்தகனாக வாழ்ந்த வரதருக்கு இன்று எதற்காக மீண்டும் இயக்கப் புனரமைப்பு.
சந்தற்பவாத தலைமைத்துவம் நடாத்தும் நாடகங்களுக்கு முகம் கொடுக்காமலும், இன்னும் இன்னும் எமது இனத்தை அழிவு பாதைக்குக் கொண்டு செல்ல வரதராஜப்பெருமாள் போன்றோர் எடுக்கும் முயற்சிக்கு விலை போகாமலும் புலம் பெயர்ந்த சமூகம் இருப்பதே எஞ்சியுள்ள தமிழினத்தைப் பாதுக்காக்கச் சிறந்த வழியாகும்.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.