
மின்சார நாற்காலிக்குப் பயமில்லையென மகிந்த ராஜபக்ஷவும், ஐநா எம்மை ஏற்காவிட்டால் ரஷ்யா, சீனாவின் பக்கம் சார்ந்து விடுவோமென கோத்தபாய ராஜபக்ஷவும், இவ்வறிக்கையானது உண்மைத் தன்மையை அறியாது தயாரிக்கப்பட்டுள்ளதென சிங்களப் பேரினவாதிகளில் பலரும் கூக்குரலிட்டுக் கொண்டே இருக்கின்றனர், இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் விதி விலக்கின்றி படை தரப்பை பாதுகாக்க முயன்றதைச் செய்வோமென அறிக்கை விட்டுள்ளனர்.

படைகளின் அச்சுறுத்தலில் அணி திரட்டப்படும் அப்பாவி கிழக்கு மக்களின் கரங்களில் எதிப்பு கோசங்களை ஏந்த வைத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களின் பேரணி எனக் கூறி, ஊடகங்களுக்கு சாட்சி சொல்ல நினைப்பது கருணாவுக்கு இது புதிதல்ல, விடுதலைப் புலிகளுடன் இருந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் துப்பாக்கிக் குழாய் வழியாக மக்களை ஒன்று திரட்டி அரசாங்கத்துக்கு எதிரான சாத்வீகப் போராட்டமென போலியாக மக்களை அடக்கி, ஊடகங்களுக்குக் காட்டுவதில் வெற்றி கண்டவர் கருணா அம்மான், அப்படியானவருக்கு தனது நாற்காலி தொடர வேண்டுமானால் தமிழ் மக்களை வேரோடு சிங்களப் பேரினவாதம் அழித்தாலும் கவலையில்லை என்பது வெளிப்படை.
வன்னி யுத்தத்தில் தமிழ் மக்களை ஸ்ரீலங்கா அரச படை தாக்கி அழிக்கவில்லை எனவும், வைத்தியசாலை ஈறாக அகதிகள் முகாம்களுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தப்படவில்லையெனவும், உலகுக்குப் பொய் கூறி வந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் உண்மைத் தன்மையினை அல்.ஜஸீரா தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் தெளிவாக்கியுள்ளார்.
இவ்வளவு கொடுமையும் நடந்து முடிந்து விட்ட பின்பாவது, தமிழர்களை நேர்கண் கொண்டு பார்க்க ஸ்ரீலங்கா அரசாங்கம் தவறுவதை சர்வதேசமே ஏற்றுக் கொண்டுள்ள இன்றைய நிலையில் கருணா உணரத் தவறி அரசாங்கத்துக்காக முதலைக் கண்ணீர் வடிப்பது வேதனையாகவுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.