இந்தோனேஷியா, கிழக்கு திமோர் போன்ற நாடுகளில் மலாய் மொழிக்கொத்த "பஹாசா இந்தோனேஷியா" எனும் மொழியே கோலோச்சி வருவதால் 17 மில்லியன் பேர் பாடசாலைக் கல்வி தொடக்கம் அரச நிர்வாகம் வரை "பஹாசா" மொழியைப் பின்பற்றுகின்றனர்.
எல்லோரும் பஹாசா மொழியைப் பின்பற்றுவதனால் காலம்காலமாக பபுவா மாகாணத்தில் பேசப்பட்டு வந்த "டஸ்னர்" எனும் மொழி இல்லாது போகும் நிலையை எட்டியுள்ளது.
இம் மொழி தெரிந்த பலர் இயற்கை அனர்த்தம், மற்றும் வேறு இடர்களில் அழிந்து போக எஞ்சியோர் அரச மொழியில் நாட்டம் செலுத்திக் கொண்டதனால் அப்பகுதியின் மீன்பிடிக் கிராமத்தில் வாழும் 60 வயதுக்கும் மேற்பட்ட மூவர் மாத்திரமே இம்மொழியைத் தெரிந்தவர்களாக காணப்படுகின்றனர், இம் மூவருடன் இந்த "டஸ்னர்மொழி" அஸ்தமனமாக இருப்பதை கடந்த வருடமே ஆராட்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
"டஸ்னர்" மொழி அழிந்து போகும் சாத்தியங்கள் மிகவும் அதிகமாக இருப்பதனால் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் அம்மொழியைப் பதிவுசெய்வதற்காக இந்தோனேஷியாவின் பபுவா தீவுப் பகுதிக்கு தற்போது சென்றுள்ளனர்.
உலகின் 6000 மொழிகளில் 50 வீதமானவை இந்நூற்றாண்டில் மறைந்து போவதற்கான வாய்ப்புகளே அதிகம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் அவர்கள் சென்றுள்ள நாடுகளில் இருந்து கொண்டே தமிழர் இராச்சியத்துக்கான போராட்டத்தை நேசிக்கின்றார்களே தவிர தமிழ்மொழியின் வளர்ச்சி பற்றிச் சிந்திப்பதாக இல்லை, அனேகமானோர் அந்தந்த நாட்டு மொழியிலேயே பாண்டித்தியம் பெற நினைத்து, தங்களது பிள்ளைகளுக்கும் தமிழ்மொழிக்கான கற்றலைக் குறைத்து வருகின்றனர், சிலர் தமிழ்மொழி பேசுவதை தலைகுனிவாக நினைக்கின்றனர்.
எமது மொழிக்கும், டஸ்னர்மொழிக்கு ஏற்பட்ட துரதிஷ்ட நிலை ஏற்படக்கூடாதெனில் எல்லோரும் தமிழ்மொழி பயில வேண்டியது அவசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.