வியாழன், 10 அக்டோபர், 2013

ஶ்ரீ லங்காவின் புதிய பிரதியமைச்சர்களும் வட மாகாண அமைச்சரவையும் ஒரே பார்வையில்!

ஶ்ரீ லங்கா புதிய பிரதியமைச்சர்களாக இன்று (10.10.2013)ஒன்பது பேர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதிவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

அத்துடன் நீண்ட இழுபாடுகளுக்கு மத்தியிலான வட மாகாணசபைக்கான அமைச்சரவை விபரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.


புதிய பிரதி அமைச்சர்கள் விபரம் :
1. சனத் ஜயசூரிய (மாத்தறை) – தபால் சேவைகள் பிரதி அமைச்சர்,
2. லக்ஷ்மன் வசந்த பெரேரா (மாத்தளை) – கைத்தொழில் வர்த்தக பிரதி அமைச்சர்,
3. அன்டனி விக்டர் பெரேரா (புத்தளம்) – தெங்கு அபிவிருத்தி மற்றும் தோட்ட அபிவிருத்தி பிரதி அமைச்சர்,
4. சரத் வீரசேகர (அம்பாறை) – தொழில் விவகார மற்றும் தொழிலாளர் உறவுகள் பிரதி அமைச்சர்,
5. மொஹான் லால் கிரேரோ (கொழும்பு) – பிரதி கல்வி அமைச்சர்,
6. நிஷாந்த முத்துஹெட்டிகம (காலி) – சிறு ஏற்றுமதி அபிவிருத்தி பிரதி அமைச்சர்,
7. வை.ஜி.பத்மசிறி – விவசாயத் துறை பிரதி அமைச்சர்,
8. ஹேமால் குணசேகர – கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக பிரதி அமைச்சர்
9. சரத் முத்துகுமாரன - புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சர்

வட மாகாணசபை அமைச்சரவை விபரம்:

தவிசாளர் - சி.வீ. கந்தையா சிவஞானம்

பிரதி தவிசாளர் - அன்ரன் ஜெயநாதன்

முதலமைச்சர் - நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்

கல்வி அமைச்சர்  -  தம்பிராஜா குருகுலராஜா (இதஅக, கிளிநொச்சி)

சுகாதார அமைச்சர் - பத்மநாதன் சத்தியலிங்கம் (இதஅக, வவுனியா)

விவசாய அமைச்சர் -  பொன்னுத்துரை ஐங்கரநேசன் (ஈபிஆர்எல்எவ், யாழ்ப்பாணம்)

உள்ளூராட்சி அமைச்சர் -  பாலசுப்பிரமணியம் டெனீஸ்வரன்  (ரெலோ, மன்னார்)

வட மாகாணசபை தேர்தலின் பின் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் அதிகரித்த அதிகாரப் பூசலில் அமைச்சரவை தெரிவு சிக்கலுக்குள்ளாகியிருந்தது, விவசாய அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஐங்கரநேசனை நியமிக்க வேண்டாமென ஈபிஆர்எல்எவ் தலைமை கூட்டமைப்பு தலைமைப் பீடத்துக்கு அறிவித்துள்ளது, ஆனால் இவரே இக் கட்சியில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர்
- கந்தசாமி கமலேந்திரன் (ஈபிடிபி)






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----