தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின்னர் துப்பாக்கிக் கலாசாரம் இலங்கையில் முற்றுப் பெற்றுவிட்டது என அரசாங்கம் மார்தட்டிக் கொள்ளும் இந்த 2011 ஆம் ஆண்டில் துப்பாக்கிக் கலாசாரம் மீண்டும் தளிர்க்கின்றது என்பது போல யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அருகாமையில் உள்ள ஆனைவிழுந்தான் பகுதியில் ஓர் இளைஞன் இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி கிழக்குப் பிரதேச அமைப்பாளரான இரத்தினசிங்கம் சதீஸ் துப்பாக்கிதாரிகளினால் துல்லியமாக இலக்கு வைக்கப்பட்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது கொல்லப்பட்டுள்ளார்.
ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவிலடி, ஆனைவிழுந்தான், முள்ளி, துன்னாலை, வடமராட்சி கிழக்குப் பிரதான வீதி அடங்கலாக சுமார் பன்னிரண்டுக்கும் அதிகமான இராணுவச் சாவடிகள் நிலை கொண்டுள்ள பகுதியில் இக் கொலைச் சம்பவம் இடம்பெற்றதானது எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது.
கொலைக் கலாசாரம் முற்றுப் பெற வேண்டுமென எல்லோரும் அவாக் கொண்டுள்ள தருணத்தில் இப்படியான வேண்டத்தகாத சம்பவங்கள் நடப்பதானது மக்களை மீண்டும் யுத்த பீதிக்குள் தள்ளுவதாகவே உணர முடிகின்றது.
"யாழ் இராணுவத் தளபதி டக்ளசிற்கு எச்சரிக்கை" எனும் மகுடமிட்டு இலங்கைநெற் இணையம் செய்தியைத் தரவேற்றியுள்ள இந்தவேளையில் இக் கொலை இடம்பெற்றதானது பல கோணத்தில் அலச வேண்டிய தேவையை உணர்த்தி நிற்கின்றது.
ஈபிடிபி நியூஸ் இணையத்தில் தோழர் சதீஸ் அகால மரணமென ஈபிடிபி இக் கொலையை மூடிவிட முற்படுவதானது அடக்கி வாசிக்க வேண்டிய நிர்ப்பந்தமோவென எண்ணத் தோன்றுகின்றது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிலையில் கொலைக் கலாசாரம் உருவெடுப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
எது எப்படி இருப்பினும் மழை விட்டும் தூவானம் விடாமல் இருப்பது போன்று துப்பாக்கிக் கலாசாரம் தொடர்வது கண்டிக்கத் தக்கதே!
பின் இணைப்பு: இறுதியாகக் கிடைக்கப்பெற்ற தகவலின்படி ஈபிடிபி உறுப்பினர் சதீஸ் வீதி விபத்திலே இறந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
puli alinthuviddathaaka umakku nyaar sonnathu vila vila eluvom
பதிலளிநீக்கு