வட மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் இன்று 11.10.2013 காலை வீரசிங்கம் மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். இந் நிகழ்வுக்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் சமூகம் கொடுக்காமல் தங்களது எதிர்ப்பைக் காட்டினர், இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் ஏற்பட்டுள்ள பாரிய பிழவு வெளிச்சத்துக்கு வந்தது.
பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனின் தம்பி கந்தையா சர்வேஸ்வரனுக்கு வட மாகாண அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை என்பதைக் காரணம் காட்டி சுரேஸ் பிரேமச்சந்திரன் ஊதிப் பெருப்பித்த தீயே தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பாரிய பிழவு ஏற்பட காரணமாகியது.
ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து சத்தியப் பிரமாண நிகழ்வில் கலந்து கொண்ட போதிலும், நாடாளுமன்மற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.எல்.ஆர்.எப்.பில் அங்கம் வகிக்கும் 5 உறுப்பினர்களும் சித்தார்த்தன் தலைமையிலான புளொட்டில் அங்கம் வகிக்கும் 2 உறுப்பினர்களும் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோவில் அங்கம் வகிக்கும் இருவரும் இப்பதவி பிரமாண நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.
வடமாகாண சபையின் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர் ஆறுமுகம் கந்தையா சர்வேஸ்வரன், சிவப்பிரகாசம் சிவமோகன், எம்.தியாகராஜா, மயில்வாகனம் இந்திரராஜா, ஆறுமுகம் சின்னத்துரை துரைராஜா ரவிகரன், புளொட் அமைப்பின் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், கந்தர் தமோதரம்பிள்ளை லிங்கநாதன், ரெலோ அமைப்பின் கனகலிங்கம் சிவாஜிலிங்கம், மன்னார் உறுப்பினரான குணசீலன் ஆகியோர் இப் பதவியேற்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.