தாண்டிக்குளத்திலிருந்து ஓமந்தை வரையிலான புகையிரதப் பயணம் 2011.05.27 ஆம் திகதியான இன்று 21 வருடங்களுக்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்டது, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த யாழ்தேவி புகையிரதம் நண்பகல் வேளையில் தாண்டிக்குளம் ஊடாக ஓமந்தையைச் சென்றடைந்தது.ஓமந்தை புகையிரத நிலைய திறப்பு விழாவில் இலங்கைப் போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கம, பிரதி அமைச்சர் றோகண குமாரதிசாநாயக்க மற்றும் இலங்கப் புகையிரத பொது முகாமையாளர் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
ஓமந்தையில் இருந்து பளை வரையிலான புகையிரதப் பாதையின் புனரமைப்பினை இந்திய நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.