யாழ்ப்பாணதிலுள்ள சைவ ஆலயங்கள் சிலவற்றில் மிருக வேள்வி நடைபெறுவதாக சில ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது, பந்நெடுங்காலமாக இலங்கையின் உள்ள சைவ ஆலயங்களில் பாரம்பரியமாக மிருக வேள்வி செய்யக் கூடியதென ஒதுக்கப்பட்ட சில ஆலயங்களில் மட்டுமே மிருக வேள்வி செய்யப்பட்டன.
மிருக வேள்வி தடை செய்யப்பட வேண்டுமென புத்திஜீவிகள் பலர் எடுத்த முயற்சியின் பயனாக கடந்த இரு தசாப்தமாக ஆலயங்களின் உயிர்ப்பலி தடை செய்யப்பட்டு இருந்தது, இதனை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் ஆலயங்களில் நிகழ்த்தப்படும் உயிர்ப்பலி வதைக்கான தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
கடந்த ஆண்டு சிலாபம் முன்னேஸ்வர காளியம்மன் கோவிலில் நிகழவிருந்த ஆயிரக்கணக்கான ஆடு, கோழிகளில் உயிர்ப்பலி பௌத்த துறவிகளின் தேசிய பிக்குகள் சம்மேளனத்தின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது, இந்த நிலையில் இலங்கையின் ஒரு பகுதியாகக் கருதப்படும் யாழ்ப்பாணத்தில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட மிருக வேள்வியானது தடை செய்யப்படாமல் போனதற்கான காரணத்தினை அரசாங்க எந்திரமும், யாழ்ப்பாணத்தில் அரசியல் நடாத்துபர்களுமே கூற வேண்டும்.
இலங்கை அரசாங்கம் பௌத்த மதக் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதாயின் கௌதமர் காட்டிய பஞ்சசீலம் இங்கு ஏன் மரணித்தது, யாழ்ப்பாணத்தின் பல முடுக்குகளிலும் ஸ்ரீலங்கா படைகளும், புலனாய்வாளர்களும் கால் பதித்துள்ள நிலையில் இவ் மிருக வேள்வி பொலிஸாரின் முன்னிலையில் நிகழ்ந்ததானது புத்தரின் பஞ்சசீலக் கொள்கை யாழ்ப்பாணத்தில் மரணித்து விட்டது என்பதை திட்டவட்டமாக எடுத்துக் காட்டுகின்றது.
பஞ்ச சீலமாவது:
1. உயிரினங்களைக் கொல்லாமல் தீங்கு செய்யாமல் அவற்றினிடம் அன்பாக இருத்தல்.
2. பிறர் பொருளை இச்சிக்காமலும் களவு செய்யாமலும் இருத்தல்.
3. கற்புநெறியில் சிற்றின்பம் துய்த்தல்; அதாவது, முறை தவறிய சிற்றின்பத்தை நீக்குதல்.
4. உண்மை பேசுதல், பொய் பேசாதிருத்தல்.
5. மயக்கத்தையும் சோம்பலையும் உண்டாக்குகிற மதுபானங்களை உட்கொள்ளாமை.
இனிவரும் காலங்களின் ஆலயங்களில் மிருக வதைகள் இடம்பெறாமல் பாதுகாப்பது எல்லோரினதும் கடமை.
எச்சரிக்கை: கோரமான மிருக வேள்வியான வீடியோ பதிவு மனப் பாதிப்பை ஏற்படுத்தும் என நினைப்பவர்கள் தயவு செய்து வீடியோ பதிவைப் பார்க்க வேண்டாம்.
மேலதிக தகவல்களுக்கு : www.newjaffna.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.