2012 ஆம் ஆண்டை வரவேற்பதற்காக கொழும்பு காலிமுகத் திடலுக்கு முன்னால் உள்ள ரமாடா நட்சத்திர விடுதியில் ஏற்பாடாகியிருந்த களியாட்ட நிகழ்வில் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கேணல் கருணா அம்மான் பிரத்தியேக செயலாளருடன் கலந்து சிறப்பித்தார். ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதித் தலைவரும், மீள் குடியேற்ற பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் நிகழ்வில் இசைக்கேற்ப யுவதிகளுடன் குத்தாட்டத்தில் ஈடுபட்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது என கூடவே கலந்து கொண்ட அதிதி ஒருவர் தெரிவித்தார்.
கருணா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருணா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 4 ஜனவரி, 2012
புத்தாண்டு வரவேற்பில் பிரதியமைச்சர் கருணா அம்மான் காதலியுடன் குத்தாட்டம் - படங்களுடன்!
2012 ஆம் ஆண்டை வரவேற்பதற்காக கொழும்பு காலிமுகத் திடலுக்கு முன்னால் உள்ள ரமாடா நட்சத்திர விடுதியில் ஏற்பாடாகியிருந்த களியாட்ட நிகழ்வில் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கேணல் கருணா அம்மான் பிரத்தியேக செயலாளருடன் கலந்து சிறப்பித்தார். ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதித் தலைவரும், மீள் குடியேற்ற பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் நிகழ்வில் இசைக்கேற்ப யுவதிகளுடன் குத்தாட்டத்தில் ஈடுபட்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது என கூடவே கலந்து கொண்ட அதிதி ஒருவர் தெரிவித்தார்.
ஞாயிறு, 10 ஜூலை, 2011
பாராளுமன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முகத்திரையைக் கிழிக்க முனைந்த பிரதியமைச்சர் கருணா! - வீடியோ இணைப்பு
கடந்த 2011 ஜூன் 07 ஆம் திகதி பிற்பகல் 2.05 மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இராஜவரோதயம் சம்பந்தனால் பாராளுமன்றத்தில் பிரேரிக்கப்பட்ட ஒத்திவைப்பு பிரேரணையின் உரையைத் தொடர்ந்து மாலை 7.25 மணியளவில் உரையாற்றிய பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சந்தர்ப்பவாதப் போக்கினைக் குறிப்பிட்டு உரையாற்றினார்.
சனி, 23 ஏப்ரல், 2011
ஐநா நிபுணர் குழு அறிக்கையும் கருணாவின் முதலைக் கண்ணீரும்!
ஸ்ரீலங்கா அரசாங்க, படைத்தரப்பு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் மீது நடாத்திய போர்க் குற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு சமர்ப்பித்த அறிக்கையின் முன்னோட்டம் கசிந்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா அரச உயர்நிலையாளர்களும், அவர்களை ஒட்டி அரசியற்பிழைப்பு நடத்தும் சிலரும் கதிகலங்கிப் போயுள்ளமை அனைவரும் அறிந்ததே!சனி, 18 செப்டம்பர், 2010
கேணலாக இருந்து கோமாளியாகிய கருணா!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் கட்டளைத் தளபதி, கேணல் போன்ற தரத்தில் இருந்து பல சாகசங்களைப் புரிந்ததுடன் ஏதுமறியாத அப்பாவிப் பிள்ளைகளை கட்டாயத்தின் பேரில் போர்க்களத்துக்கு அனுப்பி மாவீரராக்கி சொகுசு வாழ்வைத் தேடியவர் இப்போதைய சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவரும், பிரதியமைச்சருமாகவிருக்கும் கருணா.
ஆரம்ப காலத்தில் இருந்தே பதவியாசையும் இவருடன் கூடவே ஒட்டியே இருந்ததால், அதற்கான சந்தர்ப்பங்களை தேடியே வடிவமைத்து வந்தவர். மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தின் பொறுப்பாளராக இருந்த கண்ணனைக் கொலை செய்து விட்டு இம் மாவட்டங்களுக்கான பொறுப்பை தன் வசம் அமைத்துக் கொண்டவர், இவரைப் பற்றிய பல தகவல்களை காலச்சுவடு எடுத்துக் கூறுகின்றது.
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து வந்து தனது பிரதேசவாதத்தின் மூலம் தனிக் கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அமைப்பை ஏற்படுத்தி அதன் தலைமைப் பொறுப்பை தனதாக்கிக் கொண்டார், ஆனால் தமிழீழம் எனும் சொல்லை ஜீரணிக்க முடியாத பெரும்பான்மைச் சிங்களவருடன் கூட்டுறவாடிய கருணாவால் அந்தப் பெயரில் இயக்கத்தைக் கொண்டு நடத்த முடியாமல் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளென மாற்றியமைத்தார், அந்தவேளையில் விடுதலைப் புலிகள் அமைப்பை உடைத்தமைக்காக அரசினால் கிடைக்கப்பட்ட அளவுக்கதிகமான நிதியை முறைகேடாக உபயோகித்த காரணத்தினால் அமைப்பினுள் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து நாட்டை விட்டு பிரித்தானியாவுக்கு தப்பியோடி, அங்கு குடிவரவு அதிகாரிகளினால் கைதாகி குற்றவாளியென சிறைத் தண்டனையை அனுபவித்தார்.
தண்டனை முடிவுற்றும் பிரித்தானியாவில் தொடர்ந்து தங்கி வாழ முடியாத காரணத்தினால் இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டார், வந்ததும் அப்போதைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவராக பிள்ளையான் தலைமையேற்று கிழக்கு மாகாண சபை முதலமைச்சராகவும் இருந்தார்.வாகனங்களுக்கான உதிரிப்பாகங்களைச் சேகரிக்கும் கருணாவின் உதவியாளனாக இருந்த பிள்ளையானின் முன்னேற்றம் கண்டு பொறாமை கொண்டார், பதவி ஆசை மீண்டும் வெளிவர ஆரம்பித்தது, இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மகிந்த ராஜபக்ஸ கருணாவை வைத்து சதுரங்க ஆட்டம் ஆட முற்பட்டார், அதன் விளைவே கருணாவுக்கு பிரதியமைச்சர் பதவியும், கட்சியின் இணைத் தலைமையும்.
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில் கேணல் எனும் கௌரவத்துடன் மதிக்கப்பட்ட கருணா, பதவியாசைக்கு இரையாகியதால் இப்போது கோமாளி வேடமேற்று பல இடங்களில் இடறி விழுந்து வருகிறார்.
சிங்கள மக்களிடம் பல்துறை வேந்தனாக காட்சி தர முற்படும் கருணா, குறைந்த பட்சம் தனது கிரான் கிராமத்து மக்கள் நாளாந்தம் படும் துன்ப துயரங்களையாவது கவனத்தில் எடுக்கத் தவறி வருகின்றார். குவளையைக் கையிலேந்தி நடிகர் போலவும், கிற்றார் இசைப்பது போலவும், பாடகர் போலவும், சில இடங்களின் நாயகியுடன் இணைந்து நாயகனாகவும் பெரும்பான்மை இனத்துக்கு காட்ட முற்படுகின்றார், இவை அனைத்தும் கருணாவைக் கோமாளியாகவே காட்ட முனைகின்றது என்பதை அவர் சிந்திக்க தவறுகின்றார் என்பதுவே உண்மைசிங்கள மக்களுடன் கருணா சங்கமமாகி இருப்பது இன ஒற்றுமைக்கான முயற்சி, ஆனால் தன் இனத்தின் நிலை மறந்து கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை போன்று கேணலாக இருந்து கோமாளியாக மாறியிருப்பது மிகவும் வேதனையானது.
திங்கள், 22 டிசம்பர், 2008
கருணா அம்மானின் புதிய கட்சி உதயம்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்குத் தளபதியாக இருந்த கேணல் கருணா அம்மான் அவ்வமைப்பின் உள்முரண்பாட்டிலிந்து மீண்டு தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அமைப்பை ஸ்தாபித்து ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் உதவியுடன் செயற்படும் போது, ஸ்ரீலங்கா பேரினவாதிகளினால் ஈழம் எனும் பதத்தினை கட்சிப் பெயரில் இருந்து நீக்க கருணா அம்மான் நிர்ப்பந்திக்கப்பட்டார், அதன் பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளாகப் கட்சிப் பெயரைச் சுருக்கிக் கொண்டார்.இந் நிலையில் அக் கட்சியின் தலைவர் கருணா அம்மானுக்கும் உதவித் தலைவர் பிள்ளையானுக்கும் இடையே தலைமைத்துவ பிரச்சனை ஏற்பட்டது, இதனால் ஏற்பட்ட முறுகலில் சில உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள், பிள்ளையான் குழுவினராலும், தமிழீழ விடுதலைப் புலிகளினாலும் உயிராபத்து நிகழக்கூடும் என்பதனால், ஸ்ரீலங்காவில் இருந்து செயற்பட முடியாமல் பிரித்தானியாவுக்கு தப்பியோடினார் கருணா.
ஸ்ரீலங்காவில் தரித்து இருந்த பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஸ்ரீலங்கா அரசாங்கத்துடனும், இராணுவத்துடனும் புரிந்துணர்வைப் பேணியதுடன், கிழக்கு மாகாணத்தில் அதிகாரம் செலுத்தத் தொடங்கியது, இத் தருணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் கிழக்கு மாகாணத்தினை விட்டு பின்வாங்கியதனை சாதகமாகப் பயன்படுத்திய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளெனும் பிள்ளையான் அணியினர் கிழக்கின் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு ஆளும் கட்சியுடன் இணைந்து அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றினர், ஸ்ரீலங்கா தேர்தற் திணைக்களத்தில் அரசியற் கட்சியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பதிவு செய்யப்படாத காரணத்தினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தனித்து நிற்க முடியாத பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், அடுத்து வந்த வடக்கு - கிழக்கு மாகாணசபையின் பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்காக தலைவரின்றி இருந்த கட்சிக்கு திரு.ரகு நந்தகோபனை உத்தியோகபூர்வ தலைவராக்கி ஸ்ரீலங்கா தேர்தற் திணைக்களத்தில் அரசியற் கட்சியாக பதிவு செய்து கிழக்கு மாகாண சபையின் ஆட்சியதிகாரத்தினைக் கைப்பற்றி முதலமைச்சராக பிள்ளையான் சந்திரகாந்தன் பதவியேற்றுக் கொண்டார்.
பிரித்தானியக் குடியியல் சட்டத்துக்கு முரணாக உள்ளே வந்த காரணத்தினால் கருணா அம்மான் சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அனுசரணையுடன் விடுதலையாகி ஸ்ரீலங்கா திரும்பிய சில காலங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்கியிருந்தார் இதனைத் தொடந்து விநாயகமூர்த்தி முரளிதரனாக மாறிக் கொண்டார் கருணா.
பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மட்டுமே கொண்டிருந்த கருணா, கட்சியின் தலைமையை தன்னிடம் ஒப்படைக்கும் படி பிள்ளையானிடம் கேட்டுக் கொண்டிருந்தார், அதற்கு ரகு நந்தகோபன் உடன்படாத காரணத்தினால் காலவோட்டத்தில் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் தலைநகரை அண்டிய பிரதேசத்தில் வைத்துக் சுட்டுக் கொல்லப்பட்டார், இத்தருணத்தில் கட்சியின் பெயரிலும், தலைமைப் பீடத்திலும் மாற்றம் செய்யவிருப்பதாக கருணா பத்திரிகைகளில் செய்திகளை விட்டிருந்தார் அதன் பின்பும் கட்சியினைப் பலப்படுத்தும் நோக்கில் பிள்ளையான், அஷாத் மௌலானா, மற்றும் கைலேஸ்வரராஜா போன்றோர் கட்சியின் பெயரினை மாற்ற கருணாவுக்கு எந்தவித அருகதைகதையும் இல்லையென பத்திரிகைகள் மூலமாக அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்தனர்.
பிள்ளையான் குழுவினரிடமிருந்து கட்சியின் தலைமைப் பொறுப்பு தனக்கு தரப்படவில்லையே எனக் கவலை கொண்ட கருணா தனக்கு விசுவாசமாக செயற்பட்ட இனிய பாரதி மற்றும் சின்னத்தம்பி ஆகியோரை இணைத்து தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி எனும் புதிய கட்சியொன்றினை தொடக்கியுள்ளார், மட்டக்களப்பு நேச வீதியில் உள்ள அலுவலகத்தினை கிழக்கு மாகாண முகவரியாகக் கொண்டு இக் கட்சியின் தலைவராக கருணா விநாயகமூர்த்தியும் செயலராக இனியபாரதியும் மற்றும் பொருளாளராக சின்னத்தம்பியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விரைவில் இக் கட்சிக்கான சின்னம் போன்ற பிற விபரங்கள் தயாரிக்கப்பட்டுவிடுமெனவும் அத்துடன் அரசியற் கட்சியாக தேர்தற் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு விடுமெனவும் ஊடகப் பேச்சாளர் திரு. தட்சணாமூர்த்தி கமலநாதன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு திரு.பிள்ளையான் சந்திரகாந்தன் தொடந்து தலைவராக இருப்பாரென திரு.கைலேஸ்வரராஜா ஊடகங்களுக்கு செய்தி வெளியிட்டுள்ளார்.
கட்சிக்குப் பெயரிடுவதில் திருப்தி காணாத கருணா அம்மான் தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி எனும் பெயரில் என்ன திருத்தம் செய்ய இருக்கின்றாரோ!

ஞாயிறு, 12 அக்டோபர், 2008
ரிஎம்விபி உறுப்பினர்கள் ஆயுதங்களைக் கைவிட்டு வீடு செல்லவும் - கருணா அம்மான்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை சிவில் பாதுகாப்புப் படையில் இணைத்துக் கொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுமதி வழங்கியிருப்பதாகவும், இதனால் கட்சியின் உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா படையில் இணையுமாறும், இல்லையேல் துப்பாக்கிகளைக் கைவிட்டு வீடுகளுக்குச் சென்று பொது வாழ்வில் இணையுமாறு அக் கட்சியின் தலைவர் கருணா அம்மான் ஸ்ரீலங்கா "சன்டே டைம்ஸ்" பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.இதனால் தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தலில் இருந்து அப்பாவி இளைஞர்கள் தப்பிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படுவதுடன் ஜனநாயக சுதந்திரத்தினைப் பாதுகாக்கலாம் எனவும் கருணா அம்மான் குறிப்பிட்டுள்ளார்.
புதன், 8 அக்டோபர், 2008
கருணா அம்மான் பா.உ. எதிராக ஜேவிபி வழக்கு தாக்கல்!
ஜனதா விமுக்தி பெரமுன தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் வஸந்த சமரசிங்கவின் வெற்றிடத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தலைவர் கருணாஅம்மான் 2008.10.06 ஆம் திகதி 1570/6 எனும் விசேட வர்த்தமானி அறிவுறுத்தலின் பிரகாரம் நேற்று நியமிக்கப்பட்டதானது சட்டத்திற்கு முரணானதெனக் காரணம் காட்டி, ஜே.வி.பி. பொதுச்செயலாளர் ரில்வில் சில்வா இவ் வர்த்தமானி பிரகடனத்தை இரத்துச் செய்யுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்குத் தாக்கல் செய்ததுள்ளார்.ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலர் மைத்திரிபால சிறிசேன ஆகியோரைப் பிரதிவாதிகளாகக் கொண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வி.முரளிதரன் பா.உ. சத்தியப் பிரமாணம் (படம் இணைப்பு)

ஸ்ரீலங்கா பாராளுமன்ற சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார முன்னிலையில் வி.முரளிதரன் கருணா அம்மான் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்த போது எடுக்கப்பட்ட படம்.
செவ்வாய், 7 அக்டோபர், 2008
கருணா அம்மான் பாராளுமன்றில் ஆற்றிய கன்னி உரை!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொகுபண்டார முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்ததைத் தொடர்ந்து சபையில் கருணா அம்மான் கன்னி உரையாற்றினார்."பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் இந்தப் பதவியை எனக்குத் தந்தமைக்கு ஜனாதிபதிக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். இப்பதவி எனக்கு மட்டும் வழங்கப்பட்ட ஒன்றாக நான் கருதவில்லை. தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள கௌரவத்தையே இப்பதவி பிரதிபலிக்கிறது. தமிழ் மக்கள் பயங்கரவாதத்தை நிராகரித்து பாராளுமன்ற ஜனநாயகம் தொடர்பில் நம்பிக்கை வைத்துள்ளனர்.
கடந்த காலங்களில் நடந்த கசப்பான சம்பவங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கும் முழுப் பொறுப்பையும் ஜனாதிபதி பொறுப்பேற்றுள்ளார். இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் வாழும் அனைத்து இன மக்களும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய சூழ்நிலையை ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ளார்"
திங்கள், 6 அக்டோபர், 2008
கருணா அம்மான் பாராளுமன்ற உறுப்பினரானார்!
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மான் விநாயகமூர்த்தி முரளிதரன் பாராளுமன்ற உறுப்பினராக இன்று 2008.10.06 ஆம் திகதி முதல் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிவிஷேட வர்த்தமானி மூலம் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க அறிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான திரு. எச்.எம். வசந்த சமரசிங்க இராஜினாமாச் செய்துள்ளதால் அவ் வெற்றிடத்துக்கு கருணா அம்மான் நியமிக்கப்பட்டுள்ளார், நாளைய பாராளுமன்ற அமர்வின் போது அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார்.
விரைவில் கருணா அம்மானுக்கு அமைச்சர் அந்தஸ்துள்ள பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதன், 13 ஆகஸ்ட், 2008
கருணா அம்மானிடம் கேளுங்கள் !
ஸ்ரீலங்காவின் ஊடகமான "டெய்லி மிரர்" ஆங்கில பத்திரிகையின் மூலமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மான் எனப்படும் வி.முரளிதரனிடம் மக்கள் திறந்த வினாக்களை தொடுப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.வினா தொடுக்க விரும்புவோர் இச் சுட்டியில் தொடர்பு கொள்ளலாம்.
மனதினுள்ளே கம்பளிப்பூச்சியாய் அரித்துக் கொண்டிருக்கும் பல்லாயிரம் கேள்விகளை, கேணல் கருணாவிடம் கேட்க சந்தற்பம் இல்லையே என்றெல்லாம் சிந்தித்திருப்போருக்கு ஆங்கில ஊடகம் சந்தற்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்மொழியில் இப்படியான ஒரு தளத்தை தமிழ் பத்திரிகைகள் ஆரம்பிக்கவில்லையே எனும் ஆதங்கம் இருந்தாலும் கூட, அண்மையில் அதிரடி.கோம் வினாக்களைக் கேட்டு பதில் தந்திருந்தமை குறிப்பிட வேண்டியதுவே!
செவ்வாய், 12 ஆகஸ்ட், 2008
பிரபாகரனைக் கேலி செய்த கருணா - ஓர் ஆய்வு
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கிய தளபதியும், தற்போதைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவருமான கருணா ஸ்ரீலங்காவின் சிங்களப் பத்திரிகைகளின் ஒன்றான "லக்விம"வுக்கு செவ்வி வழங்கியுள்ளார்.விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உயிரின் மேல் ஆசையுள்ளவர், சாவுக்குப் பயந்தவரென குறிப்பிட்டதனை எடுத்து நோக்கினால், இந்த உலகில் உயிரின் மேல் ஆசை இல்லாதவர்கள் எவருமிலர், அதற்கு பிரபாகரன் விதிவிலக்கானவரில்லை, ஆனால் அவர் சாவுக்குப் பயந்தவரென குறிப்பிடுவது பொருத்தமானதாக தெரியவில்லை. அவர் ஈழ விடுதலைப் போராட்டத்தை முனைப்படையச் செய்வதற்காக பல களங்களைக் கண்டவர், எதிரியை துரத்தித் துரத்திப் போர் புரிந்தவர், இன்றைய அவரது வயதானது வன்முறைப் போராட்ட சிந்தனையில் இருந்து வழுவிக் கொண்டிருக்கின்றது என்பது நிஜம் தான்.
ஆனால் பிரபாகரனைப் பற்றி விமர்சிப்பதற்கு கருணாவுக்கு தகுதி இருக்கின்றதா என்பதனை கவனத்தில் எடுக்க வேண்டும், அத்தோடு கருணாவும் தன்னை சுயவிமர்சனம் செய்து பார்க்க வேண்டும். இன்றைய நிலையில் கருணாவுக்கு உயிரில் ஆசையில்லையா?, சாவுக்குப் பயந்தவரில்லையா? இயக்கத்தவர்களின் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ளாமல் ஸ்ரீலங்கா படையினரின் பாதுகாப்பை மாத்திரமே நம்பி வாழ்வதன் மர்மம் என்ன? எல்லாவற்றுக்கும் ஒரே பதில் உயிரின் மேலுள்ள ஆசையே ஆகும்.
கருணா தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த கடைசி தருணத்தில் பணப் பொதிகளை பிக்கப் வாகனத்தில் ஏற்றும் போது மூலை கிழிந்து அதனுள் இருந்த பணம் வெளியே தெரிந்ததை அவரது வாகன சாரதி கண்டு விட்டார், எனும் காரணத்தினால் அந்த அப்பாவிச் சாரதிக்கு குளிர்பானத்தினுள் விசம் கலந்து குடிக்கக் கொடுத்துக் கொல்லவில்லையா? ஏன்! இச் செய்தி பரவினால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமே எனும் பயமே!
இந்திய அமைதி காக்கும் படையினர் ஸ்ரீலங்காவில் தங்கி இருந்த காலத்தில் அவர்களின் எடுபிடிகளாக இருந்த ஈழ விடுதலை இயக்கங்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, ஏதுமறியாத அப்பாவி இளைஞர்களையும், பாடசாலை மாணவர்களையும் பலோத்காரமாகப் பிடித்து தமிழ் தேசிய இராணுவத்தினை உருவாக்கினார்கள், இந்திய இராணுவமும் அவர்களது எடுபிடி இயக்கங்களும் இந்தியாவுக்குத் திரும்பி ஓடிய போது இந்த தமிழ் தேசிய இராணுவத்தினரை நிர்க்கதியான நிலையில் விட்டுச் சென்றார்கள், கிழக்கில் கருணாவின் தலைமையில் இருந்த தமிழீழ விடுதலைப் விடுதலைப் புலிகள் அவர்களைக் கைது செய்தார்கள், கஞ்சிகுடியாறு காட்டுப் பகுதிக்கு அணி அணியாக கைகள் கட்டப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டவர்கள் அனைவரும் என்னவானார்கள் என்பது அந்தப் பகுதி மக்களுக்கு மாத்திரம் தெரியும், அனைவரும் வரிசையில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பதுவே உண்மையானது.
அன்று மாற்றுக் கருத்துக் கொண்ட இயக்கத்தினரால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய இராணுவம் தேவையற்றதென்றும், அப்பாவி மக்களைக் கடத்திச் சென்று இயக்கத்துக்கு ஆட்சேர்ப்பு செய்கின்றார்கள் என்றெல்லாம் கூக்குரலிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளும் கருணாவும், இன்று அப்பாவிகளைக் கடத்தி இயக்கத்துக்குச் சேர்த்து ஆயுதப் பயிற்சி செய்வது வேடிக்கையாகத் தெரியவில்லையா?
பல சகோதரக் கொலைகளை நடாத்தி முடித்த கருணா இப்போது எதுவும் தெரியாத அப்பாவி மாதிரி பாசாங்கு செய்வதால் புனிதனாகி விட முடியாது, துரதிஸ்டம் அவரது கட்சியே அவரைத் தூக்கி எறிந்து விட்டது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தாபகர் கருணா இப்போது பிள்ளையானின் கட்டுப்பாட்டில் இருப்பதால் சுயமாக எதனையும் செயற்படுத்த முடியாமல் திண்டாடுவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது, உயிரின் மேலுள்ள ஆசையே பிரித்தானியாவுக்கு ஓட வைத்தது, ஆனால் அங்கும் நிம்மதியாக இருக்க முடியாமல் சிறைவாசம் அனுபவித்து ஆங்கிலேயர்களால் நாடு கடத்தப்பட்டு ஸ்ரீலங்கா திரும்பி ஸ்ரீலங்கா படைகளின் பாதுகாப்பில் இருந்து கொண்டு மீண்டும் காட்டிக் கொடுப்பையும், தமிழின அழிப்பையும் செய்து வரும் கருணா எப்படி பிரபாகரனை மாத்திரம் குற்றம் சாட்ட முடியும், தயவு செய்து சுய விமர்சனம் செய்து பாருங்கள்.
கருணா கடந்த வாரம் மட்டக்களப்புக்குச் சென்ற போது, அங்கு பொது மக்கள் சந்திப்பு மட்டுப்படுத்தப்பட்டு அதிலும் சுத்திகரிப்பு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது, இந்த சுத்திகரிப்பு எதற்காக ஏன் இவ்வளவு பயம். மக்களுக்குச் சேவை செய்யப் புறப்பட்ட உங்களுக்கு ஏன் பயம், உங்களுக்கும் உயிர் மேல் ஆசை இருக்கின்றது தானே, சாவுக்குப் பயந்து தானே வாழ்கின்றீர்கள்!
லக்விம செய்தியின் தமிழாக்கம்:
பிரபாகரன் உயிரின் மேல் ஆசையுள்ளவர் சாவுக்கு பயந்த கோழை.புலி உறுப்பினர்கள் அரச படையினரிடம் சரணடையவேண்டும்.- கருணா அம்மான் கோரிக்கை
யாராகினும் பிரபாகரனை உயிருடன் பிடிக்க முடியாது எனக்கூறினால் அது முற்றிலும் தவறானதாகும் அவர் தனது உயிரின் மேல் அபார ஆசை கொண்டவர், சாவுக்கு பயந்த கோழை அதனாலேயே தன்னை சூழ பலரையும் வைத்துக்கொண்டுள்ளார் என தமிழ் மக்கள் விடுதலை முன்னனி தலைவர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில் ஒருபோதும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளை புலிகளால் காப்பாற்றிக்கொள்ள முடியாது எனவும் பிரபாகரன் இந்தோனேசியா அல்லது காம்போடியாவிற்கு பாய்ந்து செல்ல ஏற்பாடுகள் நடப்பதாக தனக்கு செய்திகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமது இறுதி போராட்டத்தின் போது புலிகள் இரசாயன ஆயுதங்களை பாவிக்கக் கூடும் எனவும், தான் புலிகளோடு இருந்தபோது இராசயன ஆயுதங்கள் பல இருந்ததாகவும் இதுவரை புலிகள் அவற்றைப் பயன்படுத்தவில்லை எனவும் லக்பிம ஊடகவிலயலாளரை சந்தித்து பேசிய போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலிகளின் இரண்டாம், மூன்றாம் நிலை சிறந்த தலைவர்களை இழந்துள்ளமையால் அரசின் தொடர் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் வடக்கில் பல சமர்களில் தோல்விகண்டு வருகிறது எனவும் இவர்கள் படையினரின் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளதாகவும் கருணா தெரிவித்துள்ளார்.
பித்துபிடித்துப் போயுள்ள பிரபாகரனின் அறிவுரைகளை கேளாமல் அரச படையினரிடம் சரணடைந்து விடுமாறு புலி உறுப்பினர்களை தான் கேட்டுக்கொள்வதாக கருணா கூறியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)