இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியைப் படுகொலை செய்த தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்திட்டங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு தூக்குத் தண்டனைக் கைதிகளாகவுள்ள பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ராஜீவ்காந்தி படுகொலையில் என்ன பங்கு வகித்தார்கள் என்பது தொடர்பாக 2011.09.29ஆம் திகதி வெளிவந்த "துக்ளக்" சஞ்சிகையில் எஸ்.புஸ்பவனம் "ராஜீவ் கொலையாளிகளின் குற்றப் பின்னணி!" எனும் தலைப்பில் கட்டுரையைப் பதிவு செய்துள்ளார்.
வியாழன், 29 செப்டம்பர், 2011
புதன், 28 செப்டம்பர், 2011
கிழக்கு மாகாண முதலமைச்சர் விருதில் தில்லுமுல்லு!
எதிர்வரும் ஒக்டோபர் 14, 15 மற்றும் 16ஆம் திகதிகளில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் "மாகாண தமிழ் இலக்கிய விழா" நடைபெறவுள்ளது, இறுதி நாளான 16ஆம் திகதி கிழக்கு மாகாண கலை இலக்கிய விற்பன்னர்களான 12 தமிழ் முஸ்லிம் படைப்பாளிகளுக்கு முதலமைச்சர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர். கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சார்ந்த 12 படைப்பாளிகள் மாவட்டத்துக்கு தலா 4 பேர் வீதம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
குறியீடு :
கிழக்கு மாகாணம்,
சர்ச்சை,
முதலமைச்சர் விருது
செவ்வாய், 27 செப்டம்பர், 2011
ஜனாதிபதி மகிந்த மீது வழக்குத் தாக்கல் - பிரதமர் உருத்திரகுமாரன் செவ்வி!
குறியீடு :
உருத்திரகுமார்,
மகிந்த,
ரமேஸ்,
வழக்கு
திங்கள், 26 செப்டம்பர், 2011
கேணல் ரமேஸின் மனைவி தென்னாபிரிக்காவில்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தளபதி கேணல் ரமேஸின் படுகொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதி நிரந்தர பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக நியூயோர்க் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ள திருமதி ரமேஸ் வக்சலாதேவியும் பிள்ளைகளான பிரபாகரன், கலைச்சுடர் மற்றும் மேகலாவும் தென்னாபிரிக்காவில் அடைக்கலம் பெற்றுள்ளதாக "திவய்ன" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஞாயிறு, 25 செப்டம்பர், 2011
வெள்ளி, 23 செப்டம்பர், 2011
புதன், 21 செப்டம்பர், 2011
வெலிஓயா பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டு சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம்!
1960ஆம் ஆண்டு முதல் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய்ப் பகுதிகளில் வாழ்ந்து வந்து 1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெயர்ந்து சென்ற சிங்களவர்களில் ஒரு தொகுதியினரான 45 குடும்பங்கள் இன்று 2011.09.21 ஆம் திகதி குடியேற்றம் செய்யப்படுகின்றனர், அண்மையில் முகத்துவாரம் பகுதியில் 37 சிங்களக் குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்பட்டதன் நீட்சியாக இன்று 45 சிங்களக் குடும்பங்களுக்கு புதிய காணிகள் வழங்கப்பட்டு குடியேற்றப்படுகின்றனர் என்பதனை கரைத்துறைப்பற்று உதவி அரசாங்க அதிபர் எஸ்.தயானந்தா மூலம் அறிய முடிகின்றது.
குறியீடு :
சிங்கள குடியேற்றம்,
தமிழர் பிரதேசம்,
வெலிஓயா
செவ்வாய், 20 செப்டம்பர், 2011
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரட்டை வேடம்!
தமிழ் பேசும் மக்களிடம் வாக்குகளைப் பெற்று சுகபோக வாழ்க்கை அனுபவித்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இரட்டை வேடம் மீண்டும் அம்பலமாகியுள்ளது, சில இராஜதந்திரிகளின் அழுத்தத்தினால் கடந்த 02 ஆம் திகதி அலரி மாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இரா சம்பந்தனுக்கும் இடையில் நடைபெற்ற இரகசிய பேச்சுவார்த்தையின் மூலம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பங்குபற்றும் நிலையை எட்டியுள்ளது.
திங்கள், 19 செப்டம்பர், 2011
அடைய முடியாத இலக்கு தமிழீழம் - கிழக்கு முதல்வர் பிள்ளையான்
போராட்டத்திற்கு எந்தவொரு பங்களிப்புமே செய்யாத கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும், வெளிநாட்டில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் மேலாதிக்கத் தலைவர்களுமே தற்போது அடைய முடியாத இலக்காக இருக்கின்ற தமிழீழம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்களென கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மயிலம்பாவெளி விபுலாநந்த வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் குறிப்பிட்டார்.
ஞாயிறு, 18 செப்டம்பர், 2011
கிறிஸ் பூதம் தமிழர்களே - மக்களை ஏமாற்ற அரசாங்கம் முயற்சி!
இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டத்துக்கமைய பாதுகாப்புத் தரப்பினரால் கர்ச்சிதமாக நடாத்தப்படும் நிகழ்வாக கருதப்படுவது கிறிஸ் பூதம் எனப்படும் மர்மமனிதன் விவகாரமாகும். ஶ்ரீலங்காவின் சிங்களப் பகுதியில் ஒத்திகை பார்க்கப்பட்டு தமிழர்கள் செறிந்து வாழும் இடங்களில் உளவியல் யுத்தத்தினை மிகவும் தந்திரமான முறையில் இலங்கை அரசாங்கம் செவ்வனே நடாத்தி வருகின்றது, இதனை நடத்துபவர்கள் இலங்கை படையணியினர் தான் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொண்டுள்ள போதிலும், அரசாங்கமும் அதன் அடிவருடிகளும் மறுத்தே வருகின்றனர்.
வெள்ளி, 16 செப்டம்பர், 2011
சிவராம் நினைவுப் பேருரைக்காக தலைப்பை மாற்றினார் ஶ்ரீதரன் பா.உ.
சுவிற்சலாந்து சிவராம் நினைவு மன்றத்தினரால் கடந்த 2011.09.11 ஆம் திகதி சிவராம் நினைவுப் பேருரை நடைபெற்றது, இந் நிகழ்வின் நினைவுப் பேருரைக்காக "ஈழத் தமிழர் அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வகிபாகம்" எனும் தலைப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஶ்ரீதரன் அழைக்கப்பட்டு இருந்தார், ஆனால் தலைப்புக்குப் பொருந்தாத "விரியும் சர்வதேசப் பரப்பில் மீண்டும் மிடுக்குடன் எழவல்ல ஈழத் தமிழர் வாழ்வு" எனும் தலைப்பிலான புலம்பெயர் தமிழர்களை உசுப்பேற்றும் பேருரையை நிகழ்த்தினார்.
சனி, 10 செப்டம்பர், 2011
விடுதலைப் புலிகளிடமிருந்து வை.கோ நிதி பெற்றார் - விக்கிலீக்ஸ்
வெள்ளி, 9 செப்டம்பர், 2011
கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனுக்கு இந்திய சிறப்பு தேசிய விருது.
தென்னிந்திய தமிழ்த் திரைப்படத்துறையில் நடிகராக அறிமுகமாகிய, இலங்கையின் தமிழ் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான, கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் "ஆடுகளம்" திரைப்படத்தில் பேட்டைக்காரன் எனும் பாத்திரத்தில் சிறப்பாக நடித்தமைக்காக இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேலினால் இன்று புதுடில்லியில் உள்ள விஞ்ஞானபவனில் சிறந்த சினிமா கலைஞர்களுக்கான சிறப்பு தேசிய விருது எனும் கௌரவத்தினைப் பெறுகின்றார்.
புலம்பெயர்ந்து நோர்வே நாட்டில் வாழ்ந்து வரும் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனுக்கு "களத்துமேடு" வாழ்த்தினைத் தெரிவிக்கின்றது.
வியாழன், 8 செப்டம்பர், 2011
தமிழ் மக்களை பீதிக்குள்ளாக்கி வரும் மர்மமனிதன் யார்? - சுரேஸ் பா.உ. சூளுரை. - காணொளி இணைப்பு
அச்சமில்லை அச்சமில்லை
செவ்வாய், 6 செப்டம்பர், 2011
தமிழைக் கொல்லும் எதிரி
தமிழர்களுக்கென பல்லாயிரக்கணக்கான ஊடகங்கள் உள்ளன, அவற்றில் பல மக்களுக்குத் தேவையான தகவல்களை உடனுக்குடன் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன, அந்த வரிசையில் "எதிரி" எனும் இணையத் தளம் "கானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக மாற நினைத்ததாம்" என்பது போல செய்திகள் எழுத வேண்டுமென்பதற்காக தான் நினைக்கும் உரைநடைக்கேற்ப செய்தி பகிர்வது அவலட்சணமாக உள்ளது.
எதிரி இணையத் தளத்தினால் தமிழ்மொழி எண்ணற்ற தொல்லைகளை தினமும் அனுபவித்து வருகின்றது, தமிழைச் செம்மையாக எழுத முடியாவிட்டால் எதற்காக இந்த வேடம். இன்று முன் பக்கத்தில் பிரசுரமாகி இருந்த செய்தியொன்று இந்தப் பத்தியை எழுதத் தூண்டியது.
இரா.சம்பந்தனின் குடும்ப திருமணத்தால் தமிழ்க் கட்சிகளின் புதுடில்லிப் பேச்சுவார்த்தை இடைநடுவில் இரத்து!
பாரத நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பனின் அழைப்பில் புதுடில்லிக்கு விஜயம் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக தமிழ்க் கட்சிகளின் 16 உறுப்பினர்கள் ஆகஸ்ட் 23,24 ஆம் திகதிகளில் பேச்சுவார்த்தைக்கென அழைக்கப்பட்டிருந்தும் கட்சிகளுக்கிடையேயான முரண்பாட்டினால் ஒருமித்த முடிவெடுக்க முடியாமல் பின்வாங்கினர்.
புதுடில்லியில் இலங்கைத் தமிழ்க் கட்சிகள் - சுதர்சன நாச்சியப்பன் செவ்வி. (காணொளி)
இலங்கை தமிழர்களின் அவலங்கள் தொடர்பாக இலங்கைத் தமிழ் அரசியற் கட்சிகளில் 16 உறுப்பினர்களை உள்ளடக்கி, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் கடந்த ஆகஸ்ட் 23, 24 ஆம் திகதிகளில் புதுடில்லியில் நடைபெற்ற மகாநாடு தொடர்பாக இந்திய சஞ்சிகையான குமுதம்.கொம் இணையத் தளத்துக்கு நிகழ்ச்சி தொகுப்பாளர் பா.ஏகலைவனினால் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பனிடம் பெறப்பட்ட செவ்வி பல அரிய தகவல்களை அறியத் தந்துள்ளது.
திங்கள், 5 செப்டம்பர், 2011
மர்மமனிதன் விவகாரம் யாழில் உண்ணாவிரதம் - சங்கரி பேட்டி, ஈபிடிபி கலந்து கொள்ளுமா ?
இலங்கைத் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அண்மைக் காலமாக மர்ம மனிதன் எனும் பீதி மக்களை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகின்றது. இதனைச் செய்வித்துக் கொண்டிருப்பது அரசாங்கமே என பல்வேறு சந்தற்பங்களில் அடையாளம் காணப்பட்டிருந்தும் அரசாங்கமோ அல்லது படை தரப்போ மர்ம மனிதன் விடயத்தில் எவ்வித அக்கறையும் காட்டாமல் அல்லது கைது செய்ய முயற்சி எடுக்காமல், மாறாக மர்ம மனிதனைப் பிடிக்க முயலும் பொதுமக்கள் மீதே தாக்குதலும் குற்றமும் சுமத்தப்படுகின்றது.
ஞாயிறு, 4 செப்டம்பர், 2011
முன்னாள் போராளிகளின் பெயரில் ஊடக விபச்சாரம் - காணொளி இணைப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)