தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் ரமேஸ் ஶ்ரீலங்கா படையினரால் மனிதாபிமான சட்டங்களுக்கு முரணான வகையில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்து கொல்லப்பட்டுள்ளாரென சனல் 4 மற்றும் ஊடகங்களில் வெளியான வீடியோ காட்சிகளை சாட்சியமாகக் கொண்டு மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நியூயோர்க் நீதிமன்றத்தில் சட்டத்தரணி உருத்திரகுமாரன் மூலமாக கேணல் ரமேஸின் மனைவி வத்சலாதேவி ஶ்ரீலங்காவின் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதிவாதியாகக் கொண்டு தாக்கல் செய்த மனு தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரும், மேற்படி வழக்கின் சட்டத்தரணியுமான விஸ்வநாதன் உருத்திரகுமாரன் பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பிபிசி தமிழோசை வானொலிக்கு செவ்வி வழங்கியிருந்தார்.
இதேபோன்று ஶ்ரீலங்கா இராணுவ உயர் அதிகாரி , மேஜர் ஜெனரல் ஷவீந்தர சில்வாவையும் பிரதிவாதிகளாகக் கொண்டு இன்னொரு வழக்கு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்பான செய்திகள்:
1. ரமேஷ் மனைவி வழக்கு : உருத்திரகுமாரன் செவ்வி
2. மஹிந்தவுக்கு எதிராக 'கர்ணல் ரமேஷ் மனைவி' வழக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.