1960ஆம் ஆண்டு முதல் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய்ப் பகுதிகளில் வாழ்ந்து வந்து 1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெயர்ந்து சென்ற சிங்களவர்களில் ஒரு தொகுதியினரான 45 குடும்பங்கள் இன்று 2011.09.21 ஆம் திகதி குடியேற்றம் செய்யப்படுகின்றனர், அண்மையில் முகத்துவாரம் பகுதியில் 37 சிங்களக் குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்பட்டதன் நீட்சியாக இன்று 45 சிங்களக் குடும்பங்களுக்கு புதிய காணிகள் வழங்கப்பட்டு குடியேற்றப்படுகின்றனர் என்பதனை கரைத்துறைப்பற்று உதவி அரசாங்க அதிபர் எஸ்.தயானந்தா மூலம் அறிய முடிகின்றது.
தமிழர் பிரதேசமான மணலாறை மையமாகக் கொண்ட குமுளமுனை, தண்ணிமுறிப்பு, அளம்பில், கருநாட்டுக்கேணி கிராமசேவையாளர் பிரிவுகள் அடங்கலாக எட்டு கிராமசேவையாளர்கள் பிரிவுகளைக் கொண்ட வெலிஓயா பிரதேச செயலக பிரிவொன்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
1983 ஆம் ஆண்டு கொக்கிளாய் மேற்கு, கொக்கிளாய் கிழக்கு, புளியமுனை, கருநாட்டுக்கேணி, முகத்துவாரம், தென்னமரவாடி, முந்திரிகைக்குளம், அக்கரைவெளி, கலியாணபுரம், மாரியாமுனை ஆகிய பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்களும் அரசாங்கத்தினால் பயங்கரவாத பிரச்சனையை காரணம் காட்டி அந்தப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த அக்கரைவெளி, முந்திரிகைக்குளம், கலியாணபுரம் போன்ற இடங்களிலேயே இப்போது சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன, கொக்கிளாய் மேற்கு, கொக்கிளாய் கிழக்கு, புளியமுனை, தென்னமரவாடி போன்ற எஞ்சியுள்ள தமிழ்க் கிராமங்கள் சிங்களப் பெயர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு இப்போது சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்படுகின்றன.
நன்றி ; தீபம்
நன்றி ; தீபம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.