தமிழ் பேசும் மக்களிடம் வாக்குகளைப் பெற்று சுகபோக வாழ்க்கை அனுபவித்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இரட்டை வேடம் மீண்டும் அம்பலமாகியுள்ளது, சில இராஜதந்திரிகளின் அழுத்தத்தினால் கடந்த 02 ஆம் திகதி அலரி மாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இரா சம்பந்தனுக்கும் இடையில் நடைபெற்ற இரகசிய பேச்சுவார்த்தையின் மூலம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பங்குபற்றும் நிலையை எட்டியுள்ளது.
அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுகள் ஒருபுறம் தொடர்வதெனவும், அந்தப் பேச்சுகளில் எட்டப்படும் முடிவுகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது யோசனையாக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்வைக்கும். அதேவேளை மறுபக்கத்தில் இடம்பெறும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயலூக்கம் உள்ள ஒரு கட்சியாக முழு அளவில் பங்குபற்றவேண்டும் எனும் ஜனாதிபதியின் கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஏற்றுக் கொண்டுள்ளார்.
விரைவில் கொழும்பில் நடைபெறவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்கி நடப்பது தொடர்பான இரகசிய பேச்சுவார்த்தைகளின் சாரம்சம் மற்றய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சர்வதேச அழுத்தத்துக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கும் ஶ்ரீலங்கா அரசாங்கம் என்ன விலை கொடுத்தேனும் தமிழ்த் தரப்பினருடன் முரண்பாடு இல்லையெனக் காட்ட முனைகின்றது, தமிழர்களுடனான ஒற்றுமையைக் காட்டினால் சர்வதேச அழுத்தத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என அரசாங்கம் நினைப்பதற்கு உடந்தையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சோரம் போக எத்தனிக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.