ஶ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவராக இருந்த கேணல் ரமேஸின் கொலை தொடர்பாக அவரின் மனைவி வக்சலாதேவியின் பெயரில் அமெரிக்க நியூயோர்க் தெற்கு நீதிமன்றத்தில் 11 CIV 6634 எனும் கோவை இலக்க வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச இருப்பதனால் ஶ்ரீலங்கா படையின் பிரதம தளபதியும் இவராவார், ஆகவே படையினரால் நடாத்தப்பட்ட அனைத்து படுகொலைகளுக்கும் ஜனாதிபதியே பொறுப்புடையவராவார், பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய "ஶ்ரீலங்காவின் கொலைக்களங்கள்" நிகழ்ச்சிக்கமைய ரமேஸ் ஶ்ரீலங்கா படையினரால் தடுத்து வைக்கப்பட்டு உள்ளமையும், இன்னொரு படத்தில் ரமேஸின் சடலமும் காண்பிக்கப்பட்டுள்ளது, ஆகையால் ரமேஸின் மரணம் தொடர்பாக விளக்கம் கோரிய மனு திருமதி வக்சலாதேவியினால் அமெரிக்க நீதிமன்றில் தொடரப்பட்டதாக ஈஐஎன் செய்தி தெரிவித்துள்ளது.
தொடர்பான செய்தி;


















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.