வடக்கு கிழக்கில் உள்ள இராணுவம் வெளியேறவில்லை, அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்படவில்லை, சட்டம் ஒழுங்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவில்லை, இராணுவ முகாம்கள் அகற்றப்படவில்லை இதனால் வடக்கு கிழக்கில் அவசரகாலச் சட்டம் இன்னும் நடைமுறையில் இருந்து வருகின்றது.
இலங்கையின் ஒரு பகுதியாகிய வடக்கு கிழக்கிலும் இந்த நிலை மாற்றமடைந்தாலே அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதாகக் கருத முடியும். மேலாக இன்று வடக்கு கிழக்கில் கிறிஸ் பூதம் எனப்படும் மர்மமனிதனின் தாக்குதல் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது, இவற்றை நடாத்துபவர்கள் காரியம் முடிந்ததும் இராணுவ மையங்களுக்குள்ளே ஓடி பாதுகாப்புத் தேடுவதை அவதானிக்க முடிகின்றது, அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டகாகக் கூறப்படும் இலங்கை நாட்டின் வடக்கு, கிழக்கு எனும் இரு மாகாணங்களில் மாத்திரம் ஏன் இந்த நிலை.
ஶ்ரீலங்கா பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை நீக்கிய ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதற்காக நேற்றைய (2011.09.07) அமர்வு ஆழும் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது, இந் நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு சூளுரைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.