போராட்டத்திற்கு எந்தவொரு பங்களிப்புமே செய்யாத கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும், வெளிநாட்டில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் மேலாதிக்கத் தலைவர்களுமே தற்போது அடைய முடியாத இலக்காக இருக்கின்ற தமிழீழம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்களென கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மயிலம்பாவெளி விபுலாநந்த வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் குறிப்பிட்டார்.
ஈழத்தை வென்றெடுக்க வீறுகொண்டெழுந்த பல்லாயிரம் ஈழப் போராளிகளை கொன்றொழித்து ஈழம் எனும் கனவை நாசம் செய்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளே என்றால் அதில் மிகையில்லை, தனித்துவமான போராட்ட அமைப்புக்களைச் சிதைத்து ஏகபோக உரிமை கொண்டாட நினைத்த வே.பிரபாகரனின் பின்னால் இயங்கிய கருணா, பிள்ளையான் போன்றவர்கள் வெறித்தனமாக சக இயக்கப் போராளிகளை சுட்டுக் கொன்றொழித்த போதே தமிழீழம் சுக்கு நூறாக அழிந்து விட்டது, இதற்கு ஒத்தாசை புரிந்த தற்போதைய கிழக்கு முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தமிழீழத்தை அடைய முடியாத இலக்கு எனக் கூறிவதில் வியப்பில்லை.
மொத்தத்தில் ஈழ தேசமெனும் கனவை நாசம் செய்தவர்களுக்கு தமிழீழத்தைப் பற்றி கதைப்பதற்கு அருகதை இல்லை, அதன் நீட்சியாகவே நாடு கடந்த தமிழீழமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் உள்ளனர், அவரவர் சொந்த நலனே இதில் தொக்கி நிற்கின்றது.
தொடர்பான செய்தி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.