பாரத நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பனின் அழைப்பில் புதுடில்லிக்கு விஜயம் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக தமிழ்க் கட்சிகளின் 16 உறுப்பினர்கள் ஆகஸ்ட் 23,24 ஆம் திகதிகளில் பேச்சுவார்த்தைக்கென அழைக்கப்பட்டிருந்தும் கட்சிகளுக்கிடையேயான முரண்பாட்டினால் ஒருமித்த முடிவெடுக்க முடியாமல் பின்வாங்கினர்.
25 ஆம் திகதி கூடி மீண்டும் தீர்க்கமான முடிவெடுக்கக் கூடிய சந்தற்பம் வாய்த்த போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனின் குடும்ப திருமணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பேச்சுவார்த்தையை இடைநடுவில் இரத்துச் செய்துவிட்டு நாடு திரும்பியவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆகும்.
மக்களின் அபிலாசைகளை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குத் தேவையானது தமது குடும்ப நலனே என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது, இந்தச் செய்தியினை சுதர்சன நாச்சியப்பன் அண்மையில் குமுதம்.கொம் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வி மூலம் தெளிவு படுத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.