தமிழர்களுக்கென பல்லாயிரக்கணக்கான ஊடகங்கள் உள்ளன, அவற்றில் பல மக்களுக்குத் தேவையான தகவல்களை உடனுக்குடன் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன, அந்த வரிசையில் "எதிரி" எனும் இணையத் தளம் "கானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக மாற நினைத்ததாம்" என்பது போல செய்திகள் எழுத வேண்டுமென்பதற்காக தான் நினைக்கும் உரைநடைக்கேற்ப செய்தி பகிர்வது அவலட்சணமாக உள்ளது.
எதிரி இணையத் தளத்தினால் தமிழ்மொழி எண்ணற்ற தொல்லைகளை தினமும் அனுபவித்து வருகின்றது, தமிழைச் செம்மையாக எழுத முடியாவிட்டால் எதற்காக இந்த வேடம். இன்று முன் பக்கத்தில் பிரசுரமாகி இருந்த செய்தியொன்று இந்தப் பத்தியை எழுதத் தூண்டியது.
தமிழை வளர்க்க வேண்டுமென பல மேதாவிகள் முயற்சி செய்து கொண்டிருக்கும் போதில் தமிழைக் கொச்சைப்படுத்தும் இப்படியான ஊடகங்களை அம்பலப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
நேற்று இரவு யாழ்ப்பாணத்து நகர வீதிகளில் துவிச்சக்கர வண்டிப் பயணத்தினைத் தொடர்ந்த பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில்கள் முயற்சி அபிவிருத்தி அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செயலதிபருமான டக்ளஸ் தேவானந்தா ஸ்ரான்லி வீதி வழியாக நாவாந்துறை, சூரியவெளி, கொட்டடி, பண்ணை, வண்ணார்பண்ணை, சின்னக்கடை, குருநகர் போன்ற பகுதிகளுக்கூடாகச் சென்று இன்றைய பதட்டநிலை தொடர்பாக மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தச் செய்தி பெரும்பாலான ஊடகங்களின் முன்பகுதியில் படங்களுடன் பதிவேற்றப்பட்டு இருந்தது. இதுவரை காலமும் எமது மக்களுக்கு சேவை செய்யவென வந்த பல அரசியல்வாதிகளில் வித்தியாசமானவராக டக்ளஸ் தேவானந்தா காணப்படுகின்றார், அனேகமான அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களிடம் வந்து வாக்குச் சேகரித்து வெற்றி பெற்றவுடன் மக்களுடனான தொடர்புகளை அறுத்துக் கொள்வதே பாரம்பரியமான நிகழ்வாகும். இதற்கு மாறாக மக்களுடனேயே காலத்தைச் செலவிடுபவராக அமைச்சர் டக்ளஸைப் பார்க்க முடிகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.