புதன், 28 செப்டம்பர், 2011

கிழக்கு மாகாண முதலமைச்சர் விருதில் தில்லுமுல்லு!

எதிர்வரும் ஒக்டோபர் 14, 15 மற்றும் 16ஆம் திகதிகளில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் "மாகாண தமிழ் இலக்கிய விழா" நடைபெறவுள்ளது, இறுதி நாளான 16ஆம் திகதி கிழக்கு மாகாண கலை இலக்கிய விற்பன்னர்களான 12 தமிழ் முஸ்லிம் படைப்பாளிகளுக்கு முதலமைச்சர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.  கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சார்ந்த 12 படைப்பாளிகள் மாவட்டத்துக்கு தலா 4 பேர் வீதம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டம்:
1. அபுசாலி மீராமுகைதீன் - பல்துறை
2. தேவசகாயம் நந்தினி சேவியர் - ஆக்க இலக்கியம்
3. மு.பத்மநாத சர்மா - சிற்பம்
4. அ.அரசரெத்தினம் - பல்துறை

மட்டக்களப்பு மாவட்டம்:
1. அசோகாதேவி யோகராசா - கவிதை
2. அ.அரசரெத்தினம் - ஆக்க இலக்கியம்
3. உமாதேவி கனகசுந்தரம் - சாஸ்திரீய நடனம்
4. எஸ்.பி. பொன்னம்பலம் - ஆக்க இலக்கியம்

அம்பாறை மாவட்டம்:
1. திருமதி யோ.யோகேந்திரன் - சிறுகதை
2. அலியார் பீர்முகமது - கவிதை
3. எஸ்.அப்துல் ஜலீல் - ஓவியம்
4. க.யோன்ராஜன் - ஊடகம்

அம்பாறை மாவட்ட முதலமைச்சர் விருதுக்கான படைப்பாளிகளைத் தெரிவு செய்யும் நடுவர் குழுவில் எழுத்தாளர் உமா வரதராஜன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் யூ.எல். அஸீஸ் மற்றும் இலக்கியவாதி மருதூர் ஏ.மஜீத் மூவரும் இடம்பெற்றுள்ளனர், கவிதைக்கான முதலமைச்சர் விருதுக்காகத் தெரிவாகியிருக்கும் சாய்ந்தமருதைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் அலியார் பீர்முகமது அம்பாறை மாவட்ட படைப்பாளிகள் தெரிவுக்கான நடுவர் குழு உறுப்பினரான மருதூர் ஏ.மஜீத்தின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி நிகழ்வுகளில் பங்கேற்போரின் நெருக்கமான உறவினர்கள் நடுவர்களாக பங்கேற்க முடியாது எனும் விதி இருப்பதால் மருதூர் ஏ. மஜீத் தனது சகோதரனை இவ் விருதுக்காகத் தேர்வு செய்தமை ஏற்றுக் கொள்ள முடியாததாகும், நடுவர் குழுவைச் சேர்ந்த மற்றய இருவருக்கும் தெரியாமலேயே இந்த தெரிவு இடம்பெற்றுள்ளதாக உள்ளக தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

முதலமைச்சர் விருது சிறந்த படைப்பாளிகளுக்குக் கிடைக்க வேண்டியது அவசியமாகும், ஆகவே கிழக்கு மாகாணக் கல்வி மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் சர்ச்சைக்குக் காரணத்தைக் கண்டு பிடித்து சிறப்பாக விருதினை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2010 ஆம் ஆண்டுக்கான இலக்கிய நூல் பரிசுப் போட்டியில் தேர்வானவை:  
1. எஸ் ..அரசரத்தினம் - ‘சாம்பல் பறவைகள்’ -நாவல்
2. திருமதி ஆ.சின்னத்துரை - ‘நீலாவணன் காவியங்கள்’- காவியம்
3. ஷெல்லில்லிதாசன் - ‘செம்மாதுழம்பூ’- கவிதை
4. அ.தி.மு.வேலழகன் – ‘செங்கமலம்’- கவிதை
5. ச.அருளானந்தம் – ‘ இசையோடு அசைபோடுவோம்’- சிறுவர் பாடல்கள்
6. ச.அருளானந்தம் – சின்னஞ்சிறு கதை’ -சிறுவர் சிறுகதை
7. ஓ.கே.குணநாதன் – ‘பறக்கும் ஆமை’- சிறுவர் நாவல்
8. பால.சுகுமார் – ‘கொட்டியாரம்’- இலக்கிய ஆய்வு



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----