இலங்கைத் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அண்மைக் காலமாக மர்ம மனிதன் எனும் பீதி மக்களை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகின்றது. இதனைச் செய்வித்துக் கொண்டிருப்பது அரசாங்கமே என பல்வேறு சந்தற்பங்களில் அடையாளம் காணப்பட்டிருந்தும் அரசாங்கமோ அல்லது படை தரப்போ மர்ம மனிதன் விடயத்தில் எவ்வித அக்கறையும் காட்டாமல் அல்லது கைது செய்ய முயற்சி எடுக்காமல், மாறாக மர்ம மனிதனைப் பிடிக்க முயலும் பொதுமக்கள் மீதே தாக்குதலும் குற்றமும் சுமத்தப்படுகின்றது.
உண்ணாவிரதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உண்ணாவிரதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 5 செப்டம்பர், 2011
மர்மமனிதன் விவகாரம் யாழில் உண்ணாவிரதம் - சங்கரி பேட்டி, ஈபிடிபி கலந்து கொள்ளுமா ?
இலங்கைத் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அண்மைக் காலமாக மர்ம மனிதன் எனும் பீதி மக்களை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகின்றது. இதனைச் செய்வித்துக் கொண்டிருப்பது அரசாங்கமே என பல்வேறு சந்தற்பங்களில் அடையாளம் காணப்பட்டிருந்தும் அரசாங்கமோ அல்லது படை தரப்போ மர்ம மனிதன் விடயத்தில் எவ்வித அக்கறையும் காட்டாமல் அல்லது கைது செய்ய முயற்சி எடுக்காமல், மாறாக மர்ம மனிதனைப் பிடிக்க முயலும் பொதுமக்கள் மீதே தாக்குதலும் குற்றமும் சுமத்தப்படுகின்றது.
ஞாயிறு, 9 நவம்பர், 2008
சென்னையில் சின்னத் திரை நட்சத்திரங்களின் உண்ணாவிரதம்!

உண்ணாவிரதப் போராட்டத்தினை இன்று காலை நடாத்தினர்.
சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு தலைவர் திரு.விடுதலையின் தலைமையில் பாரதீய ஜனதாக் கட்சி தேசிய செயலர் திரு.திருநாவுக்கரசு உண்ணா விரதத்தினை ஆரம்பித்து வைத்தார், இதில் நடிகர்கள் அஜய் ரத்னம், ராஜ்காந்த், மோகன்ராம், கே.நடராஜன், வசந்த், மனோபாலா, தேவ் அஜய், சிவன் சீனிவாசன், ஜெயமணி, கமலேஷ், ரிஷி, நந்தகுமார், நடிகைகள் தேவயானி, தீபாவெங்கட், மஞ்சரி, பிருந்தாதாஸ், டாக்டர் சர்மிளா, நித்யா, மவுனிகா, வந்தனா, மோனிகா, ராணி, இயக்குனர்கள் சி.ஜே. பாஸ்கர், திருச்செல்வம், பாலாஜி, ரகுநாதன், ராஜ்பிரபு, மூவேந்தர், இ.ராமதாஸ், தேவேந்திரன், இராஜேந்திரன், இராமலிங்கம், அசோகன், இராதாகிருஷ்ணன், இரஞ்சித்குமார், தயாரிப்பாளர்கள் பி.வி. சங்கர், சக்திவேல், விஜயகுமார், எழுந்தாளர்கள் இதயசந்திரன், கென்னடி, நெல்லை சுந்தர்ராஜன், மோகன் மற்றும் ஏராளமான தொலைக்காட்சி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய இந்தியா உடனடியாக தலையிட வேண்டுமென்றும், இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்காக சின்னத் திரைக் கலைஞர்களின் ஒரு நாள் சம்பளத்தை வழங்குவதெனவும் இறுதியில் ஸ்ரீலங்கா அரசினைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இயக்குநர் திரு.மணிவண்ணன் உண்ணாவிரதிகளுக்கு குளிர்பானம் வழங்கி உண்ணா விரதத்தை முடித்து வைத்தார்.














குறியீடு :
உண்ணாவிரதம்,
சின்னத்திரை,
சென்னை,
நடிகர்கள்
சனி, 1 நவம்பர், 2008
சென்னையில் ஈழத்தவருக்காக நடிகர் சங்கத்தின் உண்ணாவிரதப் போராட்டம்!

சென்னை தென்னிந்திய நடிகர்கள் சங்க வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்காக நடிகர்கள் ராதாரவி, நெப்போலியன், விஜயகுமார், கமலஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, மணிவண்ணன், பிரகாஷ் ராஜ், சிவகுமார், சந்திரசேகர், எஸ்.வி.சேகர், சத்யராஜ், விஜய், அஜித், அர்ஜுன், சூர்யா, விக்ரம், கார்த்திக், சியாம், வடிவேல், விவேக், மனோரமா, சந்தியா, மும்தாஜ், மீனா, த்ரிஷா, நயன்தாரா மற்றும் ராதிகா உட்பட பலர் பங்கேற்றுள்ளனர்.
ஈழத் தமிழர்களின் இன்னல்களைத் துடைக்க பல நடிகர்கள் தங்களது அன்பளிப்புத் தொகைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள், இதற்கு மகுடமிட்டாற் போல் நடிகர் ரஜனிகாந்த் பத்து இலட்சம் ரூபாய் பணத்தினை நடிகர் சங்கத்திடம் ஒப்படைத்துள்ளார்.
நடிகர் எஸ்.வி.சேகர் தனது விசேட உரையில் ஸ்ரீலங்காவில் நடைபெறும் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வரவேண்டுமானால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இறுதியில் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்கள் உண்ணாவிரதத்தை முடித்து வைப்பார்.
குறியீடு :
ஈழத்தவர்,
உண்ணாவிரதம்,
சென்னை,
நடிகர்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)