1993 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்த பிரிந்து மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கிய வை.கோபாலசாமி அக் கட்சியின் வளர்ச்சிக்காக தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து நிதியுதவி பெற்றதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தினரால் 2006.05.15 ஆம் திகதி தமிழக ஆட்சி கைப்பற்றப்பட்டு இரண்டு நாட்கள் பின்னர் ஐக்கிய அமெரிக்காவுக்கான அப்போதைய இந்திய பதில் கொன்சூலர் ஜெனரல் ரவி கந்ததாய் (Ravi Candadai) அவர்களால் விக்கிலீக்ஸ் இணையத்திற்கு இத்தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் வசித்து வரும் இலங்கை தமிழரான ஈழ அகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் நிறுவனர் செல்வநாயகம் சந்திரஹாசன் மூலம் இத்தகவலை அறிந்ததாக பதில் கொன்சூலர் ஜெனரல் ரவி கந்ததாய் குறிப்பிட்டதாக விக்கிலீக்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.


















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.