சனி, 31 டிசம்பர், 2011

பிரான்ஸ் நாட்டில் ஈழப் போராட்ட தலைவர்களின் தபால் முத்திரை வெளியீடு!


பிரான்ஸ் நாட்டு பொருளாதார சட்ட விதிக்கமைய தபால் முத்திரைகளை தனி நபர்களும் கட்டளைகளைப் பெற்று பிரசுரம் செய்யலாம், இதற்கமைய தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி செயலாளர் நாயகம் க.பத்மநாபா, தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் ஶ்ரீ சபாரெத்தினம் மற்றும் தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகத் செயலதிபர் உமா மகேஸ்வரன் போன்றொரின் முகம் பதித்த தபால் முத்திரைகள் பிரான்ஸ் நாட்டில் ஈழ ஆதரவாளர்களால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.  இதே போன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் முகம் பதித்த தபால் முத்திரையும் ஆதரவாளர்களினால் பதிப்பிக்கப்பட்டு கொள்வனவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 30 டிசம்பர், 2011

இருட்டில் கறுப்பு ஆட்டைத் தேடும் தமிழ் ஒலி வானொலி! - ஒலி ஆதாரம்


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்ட பின்னர் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் அப்பாவி மக்களிடம் விடுதலைப் புலிகள் அமைப்பு புலம்பெயர்ந்த நாடுகளில் இப்போதும் பலமாக இருப்பதாகவும், அதனால் தமிழீழத்தை விரைவில் பெற்று விடுவோமென்று போலியான வாக்குறுதிகளை பரப்பி விட்டு, பண வசூலிப்பை மேற்கொள்ளுகின்றனர். பணத்தை கையகப்படுத்தலில் ஏற்படும் போட்டி காரணமாக பல குழுக்களாகப் பிளவுபட்டுள்ளதுடன் மோதல்களும் மேலைத்தேய நாடுகளில் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.

வியாழன், 29 டிசம்பர், 2011

சுவிஸில் விடுதலைப் புலி வியாபாரிகளின் கலை நிகழ்ச்சி - மக்கள் பீதியில்! - காணொளி


மேலைத்தேய நாடுகளில் வாழும் பிளவுபட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் வியாபாரிகள் எதிர்வரும் புத்தாண்டு தினத்தில் இந்திய கலைஞர்களைக் கொணர்ந்து நிகழ்ச்சிகள் நடாத்துவதன் மூலம் தங்களது வருமானத்தை அதிகரிப்பதற்கான வேலைத் திட்டத்தில் இறங்கி உள்ளனர்.  சுவிற்சர்லாந்து நாட்டில் "புத்தாண்டில் புது நிமிர்வு" எனும் தலைப்பில் ஒரு அணியும், "புதிய மகிழ்வு" எனும் தலைப்பில் இன்னொரு அணியினரும் கலை நிகழ்ச்சியினை புத்தாண்டு தினத்தில் நடாத்தவுள்ளனர்.

செவ்வாய், 27 டிசம்பர், 2011

விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலக உறுப்பினரின் பாலியல் வக்கிரம் அம்பலம்!


தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின்னர் உதிரியாகிய சிலர் தமிழீழ மீட்பர்கள் தாமென தம்பட்டம் அடித்து சுயநல வாழ்வியலுக்கான பணமீட்டுதலை ஆரம்பித்துள்ளனர், விடுதலைப் போராளிகள் எனும் நாமத்தைப் பயன்படுத்தி மேலைத்தேய நாடுகளில் வாழும் தமிழர்களிடன் அனுதாபத்தை ஏற்படுத்தி அப்பாவிப் பெண்களிடன் பாலியல் வக்கிரங்களை நடாத்தி வருகின்றனர்.

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

தமிழ் சிவில் சமூகத்துக்கு ஆங்கிலத்தில் பதிலளித்த சம்பந்தன் - கடிதம் இணைப்பு


வடக்கு கிழக்கு இணைக்கப்படுவதுடன் அதற்கான முழுமையான ஆட்சி அதிகாரம் வேண்டும் அத்துடன் தமிழ்மொழி ஆட்சி மொழியாக இருக்க வேண்டுமென்றெல்லாம் அரசாங்கத்திடம் கேட்பதாகக் கூறி போலிக் கண்ணீர் வடித்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தலைவர் இரா.சம்பந்தனும் தமிழ் மக்களை காலம் காலமாக ஏமாற்றி வருவதனை மறுப்பதற்கில்லை.

சனி, 24 டிசம்பர், 2011

தமிழ் சிவில் சமூகத்துக்கு பதிலளிக்கிறார் இரா.சம்பந்தன்


அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெறும் பேச்சுவார்த்தை மூடுமந்திரமாகவே உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சில பாராளுமன்ற உறுப்பினர்களும், பல கூட்டமைப்பின் ஆதரவாளர்களும் ஆதங்கம் தெரிவித்துள்ள நிலையில் பிரான்ஸ் நாட்டில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ் வானொலிக்கு செவ்வி வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்த கருத்தின் பிரகாரம் அரசாங்கத்துடன் நடைபெறும் பேச்சுவார்த்தை விடயங்கள் சம்பந்தன், சுமந்திரன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்ற மூவரையும் தவிர வேறெவருக்கும் தெரிந்திருப்பதில்லை (செவ்வி நிமி 45:00), அடுத்த நாள் பத்திரிகைச் செய்தியினைப் பார்த்தே தெரிந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளி, 23 டிசம்பர், 2011

மழலையின் பாடலில் ஆனந்தக் கண்ணீர் வடித்த நடுவரும் விஜய் தொலைக்காட்சியும்! - காணொளி


தென் இந்திய தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சுப்பர் சிங்கர் ஜூனியர் - 3 தமிழகத்தின் செல்ல குரல்களுக்கான தேடல்" நிகழ்சியின் 2011.12.22 ஆம் திகதி நேற்றைய அங்கத்தில் 'என் உச்சி மண்டையில சுர்ரெங்குதே...' எனும் பாடலைப் பாடிய குழந்தைப் பாடகி சுருதிகா தனது மழலைக் குரலால் பாடிய போது இனிமை குடிகொண்டது, இவளின் அசாத்திய திறமையை நடுவர்கள் பாராட்டிய போதிலும் பாடகர் புஸ்பவனம் குப்புசாமி உளம் உருகி ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

புதன், 21 டிசம்பர், 2011

ஈழத்துப் பாடகர் சாந்தனின் புதல்வன் நடிகர் கோகுலன்.


ஈழத்தின் பாடகர்களாக பலர் இருந்த போதிலும், சிலரே பிரபல்யம் பெற்று விளங்கினர், அவர்களிலும் மிகச்சொற்பமானவர்களே இன்றும் நிலைத்து நிற்கின்றார்கள், அந்த வரிசையில் நூற்றுக் கணக்கான போர்க் கால எழுர்ச்சிப் பாடல்களைப் பாடி மக்களின் மனங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியப் பாடகர்களாக இடம் பிடித்துக் கொண்ட சார்ந்தன் மற்றும் சுகுமார் போன்றவர்கள் முக்கியமானவர்களாவர்.

செவ்வாய், 20 டிசம்பர், 2011

தமிழக சினிமா பாடலாசிரியர்கட்கு நிகராக கிழக்கிலங்கையில் உதித்த கவிஞன்!


தமிழ் ஆக்க இலக்கியத்துறையில் தமிழகப் படைப்பாளிகளுள் ஈழத்துப் படைப்பாளிகள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நவாலியூர் சோமசுந்தரப் புலவர் முதல் இன்றைய இளம் படைப்பாளிகள் ஈறாக எண்ணற்ற படைப்பாளிகளின் பல படைப்புகள் வெளிவந்துள்ளன, அவற்றுக்குரிய தளங்களும், தட்டிக்கொடுப்புக்களும் உரிய காலத்தில் கிடைக்காமையால் பல காத்திரமான படைப்புகள் காணாமலே போய் விட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் ரெலோவுக்கு கதவடைப்பு!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அரசாங்கத்துடனோ அல்லது வேறு விடயமாகவோ நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் தமிழீழ விடுதலை இயக்கத்தினை சேர்த்துக் கொள்வதில்லை எனும் குற்றச்சாட்டு பலமாகியுள்ளதால் அங்கம் வகிக்கும் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) விரிசல் அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

திங்கள், 19 டிசம்பர், 2011

அரசியல் தீர்வு திட்டம் தொடர்பாக ஈபிடிபி - அரசாங்கம் பேச்சுவார்த்தை (அறிக்கை இணைப்பு)

தமிழ் மக்களின் அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் அரசாங்கத்துடன் இன்று 2011.12.19 ஆம் திகதி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பேச்சுவார்த்தை நடாத்தினர்.

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

நாடுகடந்த தமிழீழ பாராளுமன்ற உறுப்பினராக ஈபிடிபி சிவா நியமனம்!


நாடுகடந்த தமிழீழத்தவர்களுள் குழுநிலைவாதம் ஏற்பட்டதால் முரண்பாட்டவர்கள் தங்களது மேலதிக வருமானத்துக்காக குழுக் குழுக்களாக பண வசூலிப்பைத் தொடர்கின்றார்கள், இவர்களுள் ஒரு குழுவான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினருக்கு ஆளணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் லண்டன் வெளிப் பகுதி (லண்டன் – பேர்மிங்ஹாம்) வெற்றிடத்துக்காக ஈபிடிபி முன்னாள் உறுப்பினர் சிவா எனப்படும் வன்னியசிங்கம் குணசீலன் நாடுகடந்த தமிழீழத்தின் பாராளுமன்ற உறுப்பினராக பிரதமர் உருத்திரகுமாரனால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சனி, 17 டிசம்பர், 2011

தமிழீழப் போராட்ட வியாபாரத்துக்கு மூலதனம் தாலிக்கொடி!


தமிழீழம் எனும் சொல்லை முதலீடாக்கி ஆங்காங்கே வியாபார உத்திகள் நடைபெற்று வருகின்றன, இதற்கு உதாரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் உதிரியாக மேலைத்தேய நாடுகளில் வாழ்ந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தமிழீழ விடுதலை போராட்டம் எனும் பெயரில் சேர்த்த நிதியினையும், சொத்துக்களையும் தன் வசப்படுத்த பலத்த பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர், இதனாலேயே விடுதலைப் புலிகள் பல கூறுகளாகி ஆளுக்கு ஆள் துரோகியென்றும், மோசடிக்காரன் என்றும் பச்சோந்தியென்றும் சேறடிப்புக்களை நடாத்தி தமிழீழத்தின் பெயரால் சேர்த்த சொத்துக்களை தமக்கே உரிமையாக்கிக் கொள்கின்றனர்.

வெள்ளி, 16 டிசம்பர், 2011

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கை (இணைப்பு)

ஶ்ரீ லங்கா பாராளுமன்ற சபை முதல்வரும், அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா இன்று 2011.12.16 ஆம் திகதி கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் 400 பக்க அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

'கலாபூஷணம்' விருது பெறும் தமிழ்க் கலைஞர்கள் பட்டியல்.


இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் என்பனவற்றின் ஏற்பாட்டில் வருடாந்தம் கலைத்துறையில் சிறந்த பண்பாளர்களுக்கு 'கலாபூஷணம்' விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றது.

வியாழன், 15 டிசம்பர், 2011

அனைவரையும் கொள்ளை கொண்ட இணைய அரட்டை.


தொலைத் தொடர்பில் இணையத் தளத் தொடர்பாடல் இன்றியமையாதது, உலகத்தையே உள்ளங்கையினுள் கொண்டு வருமாப் போல் கணினி முதற் கொண்டு செல்லிடத்பேசி வரை இயங்குதிறன் கொண்ட இணைய இணைப்பு சகலரையும் ஆட்கொண்டுள்ளது.

புதன், 14 டிசம்பர், 2011

யாழ் மாநகரசபையில் மனுவல் மங்களநேசன் புரியும் அடாவடித்தனம்! - காணொளி


யாழ் மாநகரசபையின் 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று 2011.12.13 ஆம் திகதி புதன்கிழமை மாலை 3 மணிக்கு மாநகர முதல்வர் தலைமையில் மாநகர மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.  இந்த அமர்வின் போது மாநகரசபை உறுப்பினர் மனுவல் மங்களநேசன் அநாகரீகமாக நடந்து கொண்டார், ஏனைய உறுப்பினர்களால் ஒழுங்குப் பிரச்சனை கோரிய போதிலும் ஒலிவாங்கியினால் அவர்களைத் தாக்க எத்தனித்ததுடன் கைவீச்சுடன் கூடிய அடாவடித்தனம் புரிந்தார்.

மக்கள் ஆதரவின்றி பின் கதவால் உள்நுழைந்தவரே சுமந்திரன் - பாராளுமன்றில் ஶ்ரீரங்கா உரை! - காணொளி


ஶ்ரீ லங்கா பாராளுமன்றத்தில் நேற்று 2011.12.13 ஆம் திகதி தகவல் ஊடகத்துறை அமைச்சு மீதான குழு நிலை விவாதம் இடம்பெற்ற போது உரையாற்றிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களான ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீரங்காவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நியமன பாராளுமன்ற உறுப்பினர் சுமந்தினனுக்கும் காரசாரமான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

செவ்வாய், 13 டிசம்பர், 2011

பிரபாகரன்: ஓர் அவலத்தின் அடையாளம் – யோகா-ராஜன்

 “தன்னளவில் ஒடுக்குமுறையைக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தின் விடுதலை என்பது மிகக் கடுமையானது“ அதாவது தன்னுள் வைத்திருக்கும் முழு வளங்களையும் சரிவரப் பயன்படுத்தும் பட்சத்தில்தான், ஒடுக்கு முறைக்குட்பட்டிருக்கும் ஒரு சிறுபான்பைச் சமூகத்தின் விடுதலை சாத்தியமாகும். ஆனால் பிரபாகரன் இச் சூத்திரத்தின் உள் அர்த்தத்தைப் புரிந்திருக்கவில்லை. புரிந்துகொள்ளத் தலைப்படவும் இல்லை. தன்னார்வத்துடன் இயங்கி வந்த பல சமூக அமைப்புக்களுக்கு தடைவிதித்தார். சன சமூக நிலையங்களைக் கூட தமது கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே இயங்க வைத்தார். முஸ்லிம்களை ஒடுக்கினார். சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான சாதிய அமைப்புகக்களை இயங்க விடாமல் தடுத்தார். மற்றும் தமிழ்த் தேசியம் எனும் ஒரே நேர்கோட்டில் பயணித்த அனைத்து விடுதலை அமைப்புக்களுக்கும் சாவுமணியடித்தார்.

திங்கள், 12 டிசம்பர், 2011

கடந்த கால தவறுகள் இனியும் வேண்டாம், வாருங்கள்! - டக்ளஸ் தேவானந்தா பகிரங்க அழைப்பு


தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காணும் சந்தர்ப்பங்கள் பலவும் கடந்த காலங்களில் கனிந்து வந்திருந்த போதும்,அவைகளை உரிய முறையில் பயன்படுத்தும் மதிநுட்ப சாணக்கிய தந்திரங்களை அவ்வப்போது பொறுப்பில் இருந்த சக தமிழ் தலைமைகள் கையாண்டிருக்கவில்லை.
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----