தமிழ்மணம் பூங்கா வலைப்பதிவிதழ் - 19 இல் பதிவாகியுள்ளது.
http://poongaa.com/component/option,com_magazine/Itemid,1/
ஆண்டான் அடிமை வாழ்க்கை முறைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கில் "தொழிலாளர்களின் வேலை நேரத்தை மட்டுப் படுத்துங்கள்" எனும் கோசத்தை முன்வைத்து 1886.5.01ம் நாள் அறுநூறாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். அமெரிக்காவின் சிக்காக்கோ நகரின் மெக்காமிக் ஹார்வெஸ்ட் வேக்ஸ் எனும் நிறுவனத்தின் பணியாளர்களின் வேலைப் பகிஸ்கரிப்பினால் ஏற்பட்ட கலவரத்தில் நிறுவனம் மூடப்பட்டது. எண்ணற்ற தொழிலாளர்கள் துப்பாக்கி வேட்டுக்கு இலக்காகி இரத்தத்தில் தோய்ந்து மாண்டனர், அத் தொழிலாளர்களின் மகத்தான மரணத்தினால் கிடைக்கப் பெற்றதே எட்டு மணி நேர வேலை எனும் உரிமையுடனான தொழிலாளர் தினமாகும்.
எட்டு மணி நேர வேலை எல்லாத் தொழிலாளர்களுக்கும் கிடைத்ததாக இன்னும் தெரியவில்லை.
பதிலளிநீக்குஹெவின்,
பதிலளிநீக்குநீங்கள் குறிப்பிட்ட விடயம் முற்றிலும் உண்மை. வைகறையில் மேனி நடுங்கும் குளிரில் தேயிலைத் தளிர் கொய்யும் இலங்கை மலைநாட்டுத் தொழிலாளருக்கு இன்னும் சுதந்திரம் கிட்டவில்லை.
//மேனி நடுங்கும் குளிரில் தேயிலைத் தளிர் கொய்யும் இலங்கை மலைநாட்டுத் தொழிலாளருக்கு இன்னும் சுதந்திரம் கிட்டவில்லை// அவர்களுக்கு மட்டும் இந்த நிலை இல்லை. பாலைவனத்தில் பாழாய் போன நேரமென்று சபித்துக் கொண்டே பல மணி நேரங்கள் தொடர்ந்து வேலை பார்க்கும் தொழிலாளிகள் உழைப்பாளிகள் இருக்கிறார்கள். உலகம் முழுக்க மே 1 அன்று விடுமுறை ஆனால் தொழிலாளிகள் நிறைந்த அமீரகத்தில் விடுமுறையில்லை.
பதிலளிநீக்குகளத்துமேட்டுக்கு வந்து அமீரகத்தில் தொழிலாளர் ஓய்வின்றி வேதனையுறுவதை பதிவு செய்திருந்தீர்கள், வரவுக்கு மிக்க நன்றி ஜெஸிலா.
பதிலளிநீக்கு