செவ்வாய், 24 ஏப்ரல், 2007
உலகக் கிண்ணத்தை ஸ்ரீலங்கா சுவீகரிக்குமா
உலக கிண்ண கிரிகெட் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தேர்வாவதற்கு இன்று அரையிறுதிச் சுற்றில் இலங்கை அணி நியூசிலாந்து அணியைச் சந்திக்கின்றது, வேகப் பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாகவுள்ள ஜமேகா சபீனா பார்க் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்றிரவு 7.45க்கு இரண்டு அணிகளும் மோதவிருக்கின்றன.
இலங்கை அணியின் முன்னணியின் பந்து வீச்சாளர்களான மு.முரளிதரன், ச.வாஸ் மற்றும் ல.மாலிங்க களமிறங்குகிறார்கள், இவர்கள் நியூசிலாந்து அணிக்கு மிகுந்த சவாலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறே அவுஸ்திரேலியா அணியுடனான போட்டியில் பங்கேற்காத ஷேன் போன்ட், ஜெகத் ஓரம் போன்றோரும் இறுதிச் சுற்றுக்கு நியூசிலாந்து அணியைக் கொண்டு வருவதற்கு களமிறங்குகின்றார்கள்.
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உபுல் தாரங்க தொடர்ந்து திறமையைக் காட்டாமையால் இவருக்குப் பதிலாக மாவன் அத்தபத்து களமிறங்குவாரென எதிர்பார்க்கப்படுகின்றது. வேகப் பந்து வீச்சாளரான தில்ஹார பெர்னாண்டோ காயமுற்றதனால் இவருக்குப் பதிலாக மஃரூப் சேர்த்துக்கொள்ளப்பட வாய்ப்புக்கள் உள்ளன.
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை ஆரம்பத்திலே வீழ்த்திவிட வேண்டுமெனும் நோக்கிலே நியூசிலாந்து இவ் ஆட்டத்தில் நுழையவிருக்கின்றது, இவர்களின் ஓட்டங்களை ஆரம்பத்தில் மட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயமென நியூசிலாந்து அணித் தலைவர் ஸ்டீபன் பிளமிங் கருத்து தெரிவித்துள்ளார்.
சேன் போண்ட் இலங்கை அணிக்கு சவாலாக இருப்பதுடன் நியூசிலாந்து அணியின் மற்றய பந்து வீச்சாளர்களும் சிறப்பாக ஆடினால் இலங்கை அணி தோல்வியைத் தழுவக் கூடிய வாய்ப்பு அதிகம்.
நியூசிலாந்து அணி இதுவரை நான்கு முறை உலக கிண்ண கிரிகெட் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியும் இறுதிச் போட்டிக்குச் செல்ல முடியவில்லை, இதனால் இப்போட்டியில் கடுமையாக உழைப்பார்கள் என எதிர்பார்க்க முடிகின்றது.
இப் போட்டிக்கு நடுவர்களாக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ருடிகெட்சன், அவுஸ்திரேலியா சைமன்டௌபில், தொலைக்காட்சி நடுவராக டெரல்ஹாபர், மேலதிக நடுவராக பாகிஸ்தான் அஸாத்ரவூப், மற்றும் போட்டி மத்தியஸ்தராக தென்னாபிரிக்கா மைக்பிரொக்டர் போன்றோர் கலந்து கொள்வர்.
எது எப்படி இருப்பினும் உலகக் கிண்ணத்தை சுவீகரிக்க வேண்டுமென்பதே ஸ்ரீலங்கா அணியின் நோக்கமாகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.