
நேற்றிரவு 10.45 மணியளவில் புத்தளம் வான் பரப்பில் சந்தேகத்துக்கிடமான மூன்று இலகுரக விமானங்கள் பறப்பதாக ஸ்ரீலங்கா விமானப்படைக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலினால் ஆடிப் போனது ஸ்ரீலங்கா படைபலம்.
தழிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையாக இருக்கலாமெனவும் அவ்விமானங்கள் கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தைத் தாக்க வருவதாகவும் ஊகித்து தலைநகரம் உட்பட சர்வதேச விமான நிலைய மின்விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு, விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது, கொழும்பு நோக்கி வந்த சர்வதேச விமானங்கள் அனைத்தும் சென்னை விமான நிலையத்துக்கு உடன் திருப்பப்பட்டது, தழிழீழ வான்படையின் விமானங்களை வழி மறித்து தாக்கியழிக்கவென ஸ்ரீலங்கா விமானப்படைக்குச் சொந்தமான எம்.ஐ-24 ரக உலங்கு வானூர்தியொன்று விமானப் படைத்தளத்தில் இருந்து வெடிகுண்டுகளைச் சுமந்தவாறு சீறிச் சென்றது. விமானப் படைத் தளத்தில் இருந்த ஸ்ரீலங்கா படையினர் பீதியடைந்து கனரக ஆயுதங்களினாலும், விமான எதிர்ப்பு ஆயுதங்களினாலும் வானவெளியை நோக்கி வேட்டுக்களைத் தீர்த்தனர்.
தலைநகரம் இருளில் மூழ்கியது, தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தைத் தாக்கியழித்து விட்டதாகவும் வதந்தி பரவத் தொடங்கியது, ஆனால் உண்மை நிலவரத்தை ஆய்வு செய்த போது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் படை வரவில்லை எனவும், பொய்யான தகவல்களின் அடிப்படையில் ஏற்பட்ட குழப்பமெ இதுவென அறிய முடிகின்றது.
விமானப் படைத் தளத்தில் இருந்து சீறிச் சென்ற எம்.ஐ-24ரக உலங்கு வானூர்தி அனுராதபுரம் பகுதியில் விழுந்து விட்டது அல்லது பழுதடைந்த நிலையில் இறக்கப்பட்டது எனவும், மூடப்பட்ட விமான நிலையம் இன்று திறக்கப்பட்டு வழமை போன்று செயற்படுகின்றதெனவும் அறிய முடிகின்றது.
யானையடிக்க முன்னர் தன்னைத் தானே அடித்துச் சாவது என்பது இதைத் தானோ

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
பறக்கப்போகுது யாழ் கோட்டையிலே எங்கள் புலிக்கொடி!
பதிலளிநீக்குமருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாம் என்ற மாதிரி போயிட்டுது இலங்கை அரசின் நிலை.. ஒருவேளை குருவிகள் பறந்து வந்தததை ராடார் காட்டியிருக்குமோ
பதிலளிநீக்குPrince ennares periyar.s தங்களின் வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்குஐ.நா.வில் தமிழருக்கென இந் நாடெனப் பதிவிடும் நேரம் வரப் போகின்றதல்லவா?
தொடர்ந்து வருகை தந்து பின்னூட்டமிடுங்கள்.
களத்துமேட்டுக்கு வருகை தந்து பின்னூட்டமிட்ட கொழுவிக்கு நன்றி.
பதிலளிநீக்குபுதுவித ஆயுதங்களையும், நவீன கருவிகளையும் கொள்வனவு செய்துள்ளோம் என்றெல்லாம் அரச தலைவர்கள் கூறிக் கொள்கின்றார்கள், இங்கு நடப்பதைப் பார்த்தால் அவர்களின் சட்டைப் பைகள் தான் நிரம்பியுள்ளனவோவென எண்ணத் தொன்றுகின்றதல்லவா?