தமிழ்மணம் பூங்கா வலைப்பதிவிதழ் - 19 இல் பதிவாகியுள்ளது.
http://poongaa.com/component/option,com_magazine/Itemid,1/
ஆண்டான் அடிமை வாழ்க்கை முறைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கில் "தொழிலாளர்களின் வேலை நேரத்தை மட்டுப் படுத்துங்கள்" எனும் கோசத்தை முன்வைத்து 1886.5.01ம் நாள் அறுநூறாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். அமெரிக்காவின் சிக்காக்கோ நகரின் மெக்காமிக் ஹார்வெஸ்ட் வேக்ஸ் எனும் நிறுவனத்தின் பணியாளர்களின் வேலைப் பகிஸ்கரிப்பினால் ஏற்பட்ட கலவரத்தில் நிறுவனம் மூடப்பட்டது. எண்ணற்ற தொழிலாளர்கள் துப்பாக்கி வேட்டுக்கு இலக்காகி இரத்தத்தில் தோய்ந்து மாண்டனர், அத் தொழிலாளர்களின் மகத்தான மரணத்தினால் கிடைக்கப் பெற்றதே எட்டு மணி நேர வேலை எனும் உரிமையுடனான தொழிலாளர் தினமாகும்.
திங்கள், 30 ஏப்ரல், 2007
கண்களை நம்ப முடியவில்லையா?
வீடியோ காட்சிகளைப் பார்த்துவிட்டு தெரிகின்ற காட்சிகள் நிஜமா என்பதை உறுதிப்படுத்த இரு வரி எழுதுங்கள்.
குரங்காரின் சேட்டையைப் பாருங்கள்
குரங்காரின் சேட்டையைப் பாருங்கள்
இன்றைய கார்டூன்
நன்றி தினமணி
ஸ்ரீலங்கா அரசாங்கமும் சிங்கள இன வாதிகளும் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டுமென கூக்குரலிட்டுக் கொண்டிருந்தனர், தமிழர்களை இந்த நாட்டில் இல்லாதொழிக்க வேண்டுமென்பதற்காக சரியான இலக்கின்றி விமானத்தின் மூலம் குண்டுத் தாக்குதல்களை நடத்தி அப்பாவித் தமிழர்களையும் நிலப்பரப்புகளையும் நாசம் செய்து கொண்டு வருகின்றனர். ஸ்ரீலங்கா விமானப்படையின் விமானக் குண்டு வீச்சின் தாக்கத்தில் இருந்து எவ்வாறு தப்பித்துக் கொள்வதென்பதை தமிழ் மக்கள் ஓரளவு புரிந்து வைத்துள்ளனர்,அத்துடன் பழக்கப்பட்ட விடயமாகவும் போய் விட்டது.
சிங்கள மக்களுக்கு விமானத் தாக்குதலென்பது புதிய விடயம், அதிலிருந்து தப்புவது எப்படி என்பது தெரியாமல் தினமும் மனவுளைச்சலுக்கு இலக்காகி வருகின்றனர், ஸ்ரீலங்கா விமானப் படையினர் போன்று விடுதலைப்புலிகள் சரியான இலக்கின்றி குண்டுத் தாக்குதலை நடத்தவில்லை, இதுவரை தமிழீழ வான்படை இலக்கின் மீது மிகவும் துல்லியமாக நடத்திய மூன்று தாக்குதல்களும் அப்பாவி மக்கள் எக்காரணங்கொண்டும் பாதிக்கப்பட மாட்டார்களெனும் விடுதலைப் புலிகளின் பொறுப்புணர்ச்சியைத் தெளிவாகக் காட்டுகின்றது.
ஆனாலும் வானில் இருந்து எந்த நேரத்தில் குண்டு வருகின்றதோ எனத் தெரியாமல் சிங்கள தேசம் வானைப் பார்த்தபடி அல்லாடிக் கொண்டிருக்கின்றது.
ஞாயிறு, 29 ஏப்ரல், 2007
கொழும்பு கொழுந்துவிட்டெரிகின்றது
ஸ்ரீலங்காவின் தலைநகரை அண்டிய பிரதேசமான கொலன்னாவ எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையம், முத்துராஜவெல எண்ணெய்க் குதம் என்பன இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 1.45 முதல் 2.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ வான்படை நடத்திய குண்டுத் தாக்குதலில் தீப்பிடித்து எரிகின்றது.
கொலன்னாவ எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 1995ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி பேரழிவைச் சந்தித்தது.
படங்களின் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் படையை தாக்கும் நோக்கில் வானை நோக்கி ஸ்ரீலங்கா படை தாக்குதல் நடத்துவதையும் கொழும்பு இருளில் மூழ்கி இருப்பதையும் அத்துடன் எண்ணெய்க் குதம் தீப்பற்றி எரியும் காட்சியையும் காணலாம்.
கிரிகெட் உலககிண்ண சாம்பியன் அவுஸ்திரேலியா
மழை காரணமாக 36 ஓவராக மட்டுப்படுத்தப்பட்ட உலகக் கிண்ண ஆட்டத்தில் 8 விக்கட் இழப்புக்கு 215 ஓட்டங்களை இலங்கை அணி பெற்று இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை தழுவிக் கொள்ள, அவுஸ்திரேலியா அணி திறமையாக விளையாடி கிரிகெட் உலகக் கிண்ணம்-2007 வெற்றிக் கிண்ணத்தை பெறுகின்றது.
அவுஸ்திரேலியா அணிக்கு களத்துமேட்டின் வாழ்த்துக்கள்
சனி, 28 ஏப்ரல், 2007
ஹொட்நியூஸ்..........
ஸ்ரீலங்கா தலைநகரின் துறைமுகப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதாகவும் பதில் தாக்குதலை ஸ்ரீலங்கா விமானப்படை, கடற்படை நடத்தி வருவதாகவும் அறிய முடிகின்றது.
மேலதிக விபரங்களை அறிய முடியவில்லை.
மேலதிக விபரங்களை அறிய முடியவில்லை.
இலங்கை கிரிகெட் அணியின் முழு விபரம்
போட்டி நடுவர்கள்: ஸ்டீவ் பக்னர்(மே.இ.தீவுகள்),அலீம் தார்(பாகிஸ்தான்)
மேலதிக நடுவர்: பில்லி பௌடன்(நியூஸிலாந்து)
தொலைக்காட்சி நடுவர்: ரூடி கேட்சன்(தென்னாபிரிக்கா)
போட்டி மத்தியஸ்தர்: ஜெப்க்ரோ(நியூஸிலாந்து)
உலகக் கிண்ணத்தை வெற்றெடுக்க திட்டம் தீட்டுகின்றார்கள்.
1996ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க பெற்றுக் கொண்ட படம்.
மகேல ஜயவர்த்தன - தலைவர்
பிறந்த திகதி - 25.05.1977, கொழும்பு
ஒரு நாள் சாதனைகள்:
முதற்போட்டி - சிம்பாவேக்கு எதிராக (கொழும்பு RPS) 24.01.1998
போட்டிகள் : 246
ஓட்டங்கள் : 6714
அதிகூடிய ஓட்டம் : 128
சதம் : 09
விக்கெட் : 07
சி.ப.வி : 2/56
பி.எடுப்பு : 122
ரஸல் ஆர்னல்ட்
பிறந்த திகதி - 25.10.1973, கொழும்பு
ஒரு நாள் சாதனைகள்:
முதற்போட்டி - தென்னாபிரிக்காவுக்கு எதிராக (லாகூர்) 06.11.1997
போட்டிகள் : 179
ஓட்டங்கள் : 3949
அதிகூடிய ஓட்டம் : 103
சதம் : 01
விக்கெட் : 40
சி.ப.வி : 3/47
பி.எடுப்பு : 48
மாவன் அத்தபத்து
பிறந்த திகதி - 22.11.1970, களுத்துறை
ஒரு நாள் சாதனைகள்:
முதற்போட்டி - இந்தியாவுக்கு எதிராக (நாக்பூர்) 06.12.1990
போட்டிகள் : 268
ஓட்டங்கள் : 8529
அதிகூடிய ஓட்டம் : 132
சதம் : 11
பி.எடுப்பு : 70
மாலிங்க பண்டார
பிறந்த திகதி - 31.12.1979, களுத்துறை
ஒரு நாள் சாதனைகள்:
முதற்போட்டி - நியூசிலாந்துக்கு எதிராக (வெலிங்டன்) 06.01.2006
போட்டிகள் : 24
ஓட்டங்கள் : 112
அதிகூடிய ஓட்டம் : 28
விக்கெட் : 27
சி.ப.வி : 4/31
பி.எடுப்பு : 4
..
தில்ஷான் திலகரெட்ண
பிறந்த திகதி - 14.10.1976, களுத்துறை
ஒரு நாள் சாதனைகள்:
முதற்போட்டி - சிம்பாவேக்கு எதிராக (புலவாயோ) 11.12.1999
போட்டிகள் : 119
ஓட்டங்கள் : 2295
அதிகூடிய ஓட்டம் : 117
சதம் : 1
விக்கெட் : 41
சி.ப.வி : 4/29
பி.எடுப்பு : 57
தில்ஹார பெர்னாண்டொ
பிறந்த திகதி 19.07.1979 - , கொழும்பு
ஒரு நாள் சாதனைகள்:
முதற்போட்டி - தென்னாபிரிக்காவுக்கு எதிராக (பார்ல்ஸ்) 09.01.2001
போட்டிகள் : 111
ஓட்டங்கள் : 140
அதிகூடிய ஓட்டம் : 13
விக்கெட் : 130
சி.ப.வி : 4/48
பி.எடுப்பு : 20
சனத் ஜெயசூரிய
பிறந்த திகதி - 30.06.1969, மாத்தறை
ஒரு நாள் சாதனைகள்:
முதற்போட்டி - அவுஸ்திரேலியாவுக்காவுக்கு எதிராக (மெல்போன்) 26.12.1989
போட்டிகள் : 389
ஓட்டங்கள் : 11942
அதிகூடிய ஓட்டம் : 189
சதம் : 25
விக்கெட் : 292
சி.ப.வி : 6/29
பி.எடுப்பு : 144
நுவன் குலசேகர
பிறந்த திகதி 22.07.1982 - , நிட்டம்புவ
ஒரு நாள் சாதனைகள்:
முதற்போட்டி - பிரித்தானியாவுக்கு எதிராக (தம்புள்ள) 18.11.2003
போட்டிகள் : 19
ஓட்டங்கள் : 33
அதிகூடிய ஓட்டம் : 11
விக்கெட் : 10
சி.ப.வி : 2/19
பி.எடுப்பு : 4
பர்வீஸ் மஃரூப்
பிறந்த திகதி - 07.09.1984, கொழும்பு
ஒரு நாள் சாதனைகள்:
முதற்போட்டி - சிம்பாப்வேக்கு எதிராக (ஹராரே) 25.04.2004
போட்டிகள் : 66
ஓட்டங்கள் : 603
அதிகூடிய ஓட்டம் : 58
விக்கெட் : 80
சி.ப.வி : 6/14
பி.எடுப்பு : 15
லஸித் மாலிங்க
பிறந்த திகதி - 28.08.19983, காலி
ஒரு நாள் சாதனைகள்:
முதற்போட்டி - ஐ.அ. நாடுகளுக்கு எதிராக (தம்புள்ள) 17.07.2004
போட்டிகள் : 35
ஓட்டங்கள் : 46
அதிகூடிய ஓட்டம் : 15
விக்கெட் : 55
சி.ப.வி : 4/44
பி.எடுப்பு : 5
முத்தையா முரளிதரன்
பிறந்த திகதி - 17.04.1972, கண்டி
ஒரு நாள் சாதனைகள்:
முதற்போட்டி - இந்தியாவுக்கு எதிராக (கொழும்புR.P.S) 12.08.1993
போட்டிகள் : 296
ஓட்டங்கள் : 491
அதிகூடிய ஓட்டம் : 27
விக்கெட் : 455
சி.ப.வி : 7/30
பி.எடுப்பு : 117
...
குமார் சங்கஹார
பிறந்த திகதி -27.10.1977, மாத்தளை
ஒரு நாள் சாதனைகள்:
முதற்போட்டி - பாகிஸ்தானுக்கு எதிராக (காலி)
போட்டிகள் : 199
ஓட்டங்கள் : 5772
அதிகூடிய ஓட்டம் : 138
சதம் : 06
பி.எடுப்பு : 177
சமர சில்வா
பிறந்த திகதி 14.12.1979, பாணந்துறை
ஒரு நாள் சாதனைகள்:
முதற்போட்டி - அவுஸ்திரேலியாவுக்கு எதிராக (கொழும்பு R.P.S) 26.08.1999
போட்டிகள் : 24
ஓட்டங்கள் : 605
அதிகூடிய ஓட்டம் : 107
சதம் : 01
பி.எடுப்பு : 08
உப்புல் தாரங்க
பிறந்த திகதி - 02.02.1985, பலபிட்டிய
ஒரு நாள் சாதனைகள்:
முதற்போட்டி - மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக (தம்புள்ள) 02.08.2005
போட்டிகள் : 53
ஓட்டங்கள் : 1708
அதிகூடிய ஓட்டம் : 120
சதம் : 06
பி.எடுப்பு : 09
...
சமிந்த வாஸ்
பிறந்த திகதி - 27.01.1974, கொழும்பு
ஒரு நாள் சாதனைகள்:
முதற்போட்டி - இந்தியாவுக்கு எதிராக (ராஜ்கோட்) 15.02.1994
போட்டிகள் : 299
ஓட்டங்கள் : 1899
அதிகூடிய ஓட்டம் : 50
விக்கெட் : 383
சி.ப.வி : 8/19
பி.எடுப்பு : 59
உலகக் கிண்ணம் இலங்கையின் பக்கம் சாயுமா?
இன்று அவுஸ்திரேலியா இலங்கை அணிகளுக்கிடையே நடைபெறவிருக்கும் கிரிகெட் உலகக் கிண்ணத்தை இலங்கை அணி பெற வேண்டுமென்பதற்காக சர்வமதப் பிராத்தனைகளும் நடைபெறுகின்றன, ஏன் விடுதலைப் புலிகளும் சர்வதேச கிரிகெட் உலகக் கிண்ண நிகழ்வுக்காக யுத்த நிறுத்தம் செய்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
உலகக் கிண்ணம் இன்று இலங்கையின் பக்கம் சாயுமாவென்று சர்வதேசம் கண்களை அகலத் திறந்து உற்று நோக்குகின்றது.
வெள்ளி, 27 ஏப்ரல், 2007
பீதியடைந்த ஸ்ரீலங்கா படை
ஸ்ரீலங்கா படையினர் பீதியடைந்து சர்வதேச விமான நிலைத்தை மூடியதுடன் தலைநகரின் மின்விளக்குகளை அணைத்த விடயம் யானை அடிக்க முன் தன்னைத் தானே அடித்துச் சாவதற்கு ஒப்பாகும் அல்லவா?
வியாழன், 26 ஏப்ரல், 2007
இணைப்புடன் ஹொட்நியூஸ்..........
நேற்றிரவு 10.45 மணியளவில் புத்தளம் வான் பரப்பில் சந்தேகத்துக்கிடமான மூன்று இலகுரக விமானங்கள் பறப்பதாக ஸ்ரீலங்கா விமானப்படைக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலினால் ஆடிப் போனது ஸ்ரீலங்கா படைபலம்.
தழிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையாக இருக்கலாமெனவும் அவ்விமானங்கள் கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தைத் தாக்க வருவதாகவும் ஊகித்து தலைநகரம் உட்பட சர்வதேச விமான நிலைய மின்விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு, விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது, கொழும்பு நோக்கி வந்த சர்வதேச விமானங்கள் அனைத்தும் சென்னை விமான நிலையத்துக்கு உடன் திருப்பப்பட்டது, தழிழீழ வான்படையின் விமானங்களை வழி மறித்து தாக்கியழிக்கவென ஸ்ரீலங்கா விமானப்படைக்குச் சொந்தமான எம்.ஐ-24 ரக உலங்கு வானூர்தியொன்று விமானப் படைத்தளத்தில் இருந்து வெடிகுண்டுகளைச் சுமந்தவாறு சீறிச் சென்றது. விமானப் படைத் தளத்தில் இருந்த ஸ்ரீலங்கா படையினர் பீதியடைந்து கனரக ஆயுதங்களினாலும், விமான எதிர்ப்பு ஆயுதங்களினாலும் வானவெளியை நோக்கி வேட்டுக்களைத் தீர்த்தனர்.
தலைநகரம் இருளில் மூழ்கியது, தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தைத் தாக்கியழித்து விட்டதாகவும் வதந்தி பரவத் தொடங்கியது, ஆனால் உண்மை நிலவரத்தை ஆய்வு செய்த போது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் படை வரவில்லை எனவும், பொய்யான தகவல்களின் அடிப்படையில் ஏற்பட்ட குழப்பமெ இதுவென அறிய முடிகின்றது.
விமானப் படைத் தளத்தில் இருந்து சீறிச் சென்ற எம்.ஐ-24ரக உலங்கு வானூர்தி அனுராதபுரம் பகுதியில் விழுந்து விட்டது அல்லது பழுதடைந்த நிலையில் இறக்கப்பட்டது எனவும், மூடப்பட்ட விமான நிலையம் இன்று திறக்கப்பட்டு வழமை போன்று செயற்படுகின்றதெனவும் அறிய முடிகின்றது.
யானையடிக்க முன்னர் தன்னைத் தானே அடித்துச் சாவது என்பது இதைத் தானோ
கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்
கடந்த 24ம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் தமிழீழ வான் படை இரண்டாவது தாக்குதல் முயற்சியாக யாழ்ப்பாணம் பலாலி விமானப் படைத் தளத்தின் மீது தாக்குதலை நடாத்தி விட்டு எதுவித சேதமுமில்லாமல் தளம் திரும்பியது.
விடுதலைப் புலிகளின் கன்னித் தாக்குதல் முயற்சி ஸ்ரீலங்காவின் தலைநகரை அண்டிய நீர்கொழும்பு பிரதேசத்தில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இருக்கும் கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தின் மீதான தாக்குதல் சம்பவம் ஆகும்.
எதிர்பாராமல் நடைபெற்ற முதல் தாக்குதல் என்பதால் தாக்குப் பிடிக்க முடியாமல் போய்விட்டது, இனிமேல் இப்படி நடக்க சாத்தியம் இல்லை, எமது பாதுகாப்புப் பிரிவு பலத்த உசார் நிலையில் இருக்கின்றது என்றெல்லாம் ஸ்ரீலங்கா அரச தரப்பு காரணம் கூறி இனவாதக் கட்சிகளையும், சிங்கள மக்களின் குரல்களையும் மழுங்கடித்தது, ஆனால் இரண்டாவது முறையான தமிழீழ வான்படையின் தாக்குதலிற்கு காரணம் கூற முடியாமல் அரசாங்கம் திண்டாடுவதை நினைத்தால் சிரிப்பு வருகின்றது.
விடுதலைப் புலிகள் தங்களின் விமானப்படை மூலமான தாக்குதலை இரவு வேளையில் செய்யாமல் பகலில் செய்யட்டும் பார்ப்போம் என்று அமைச்சர் பெர்னாண்டோ புள்ளே பத்திரிகையாளர் மாநாட்டில் கூறியுள்ளார். அப்படியெனில் இவர்களின் படைபலம் பகலில் மாத்திரம் தானா, ஒரு நாட்டின் படை பலமானது இரவு பகலாக விழிப்பு நிலையில் இருக்க வேண்டுமென்பதனை அறியாக அமைச்சர்கள் இந்த நாட்டை ஆட்சிமை புரிகின்றார்கள் என்பது வேதனைக்குரியது.
இலங்கை விமானப் படையின் பேச்சாளர் கப்டன் அஜந்த டி சில்வா பலாலி விமான படைத்தளத்தின் மீதான தமீழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ வான்படைத் தாக்குதல் சம்பந்தமாக கருத்துத் தெரிவித்த போது புலிகள் வசமுள்ள இலகுரக விமானங்களைத் தாக்கியழிப்பதே ஸ்ரீலங்கா விமானப் படையின் முதல் இலக்காகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.இருப்பதை விடவும் சக்தி வாய்ந்த ஆயுதங்களைக் கொள்வனவு செய்து தமிழீழ வான் படையை அழிக்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறுவது கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒப்பாகும்.
1998 கார்த்திகை மாதம் தமிழீழ வான்படை வெள்ளோட்டமாக முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தின் மேல் மலர் தூவிய நேரம் முதற்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் வான் படையை தம்வசம் கொண்டுள்ளார்கள் என்பதனை ஸ்ரீலங்கா அரசும் படைபலமும் நன்கு அறிந்திருந்தது, ஆனால் இவ் வான்படையின் தாக்குதல்களை முறியடிக்கக் கூடிய ஆயுதங்கள் தம் வசம் இல்லையென கூறுவது வேடிக்கையாக இல்லையா?
புதன், 25 ஏப்ரல், 2007
தமிழ்மணத்துக்கு நன்றி
உலக கிண்ண கிரிகெட்-படங்களுடன் நேற்றைய ஆட்டம்
உலகக் கிண்ண கிரிகெட் ஆட்டத்தின் இறுதிச் சுற்றுக்கு இலங்கை அணி தெரிவாகி வெற்றிக் கேடயத்தை எட்டும் நிலைக்கு வந்து விட்டது.
அணித் தலைவர் ஜெயவர்த்தனா பெற்ற சதத்துடனும் முத்தையா முரளிதரன் சுழற்றி வீசும் பந்துக்கு முகம் கொடுக்க முடியாமலும் 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சுறுண்டு பரிதாபகரமாக வெளியேறியது நியூசிலாந்து அணி.
கிரிகெட்டின் உலகக் கிண்ண வெற்றி விபரம்
உலக கிண்ண கிரிகெட் போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான ஓட்ட வித்தியாசத்தில் வெற்றியீட்டிய அணிகள்.
அணி--------ஓட்டம்----எதிரணி-----------இடம்---------திகதி
இந்தியா--------257----பேர்முடா----போர்ட்ஒவ்ஸ்பெயின்--19.03.2007
அவுஸ்திரேலியா-256----நமீபியா-------பொசெவ்ஸ்ரூம்----27.02.2003
ஸ்ரீலங்கா--------243----பேர்முடா----போர்ட்ஒவ்ஸ்பெயின்--15.03.2007
அவுஸ்திரேலியா-229----நெதர்லாந்து----பசெட்செட்டர்------18.03.2007
தென்னாபிரிக்கா-221----நெதர்லாந்து----பசெட்செட்டர்-------16.03.2007
அவுஸ்திரேலியா-215-----நியூசிலாந்து----சென்.ஜோர்ஜ்-----20.03.2007
அவுஸ்திரேலியா-203-----ஸ்கொட்லாந்து--பசெட்செட்டர்----14.03.2007
பிரித்தானியா----202-----இந்தியா--------லோட்ஸ்--------07.06.1975
ஸ்ரீலங்கா-------198---பங்களாதேஷ்--போர்ட்ஒவ்ஸ்பெயின்--21.03.2007
பிரித்தானியா----198-----கிழக்குஆபிரிக்கா--பெர்மிங்கோம்--14.06.1975
பாகிஸ்தான்-----192------ஸ்ரீலங்கா--------நோர்டிங்கோம்--14.06.1975
மே.இ.தீவுகள்--191------ஸ்ரீலங்கா--------கராச்சி----------13.10.1987
இந்தியா-------183-------ஸ்ரீலங்கா------ஜொகான்னஸ்பார்க்-10.03.2003
நியூஸ்லாந்து---181------கிழக்குஆபிரிக்கா--பெர்மிங்கோம்---07.06.1975
இந்தியா-------181------நமீபியா------பீட்டர்மரீட்ஸ்பார்க்--23.02.2003
பாகிஸ்தான்---171------நமீபியா----------கிம்பர்ளி--------16.02.2003

செவ்வாய், 24 ஏப்ரல், 2007
உலகக் கிண்ணத்தை ஸ்ரீலங்கா சுவீகரிக்குமா
உலக கிண்ண கிரிகெட் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தேர்வாவதற்கு இன்று அரையிறுதிச் சுற்றில் இலங்கை அணி நியூசிலாந்து அணியைச் சந்திக்கின்றது, வேகப் பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாகவுள்ள ஜமேகா சபீனா பார்க் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்றிரவு 7.45க்கு இரண்டு அணிகளும் மோதவிருக்கின்றன.
இலங்கை அணியின் முன்னணியின் பந்து வீச்சாளர்களான மு.முரளிதரன், ச.வாஸ் மற்றும் ல.மாலிங்க களமிறங்குகிறார்கள், இவர்கள் நியூசிலாந்து அணிக்கு மிகுந்த சவாலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறே அவுஸ்திரேலியா அணியுடனான போட்டியில் பங்கேற்காத ஷேன் போன்ட், ஜெகத் ஓரம் போன்றோரும் இறுதிச் சுற்றுக்கு நியூசிலாந்து அணியைக் கொண்டு வருவதற்கு களமிறங்குகின்றார்கள்.
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உபுல் தாரங்க தொடர்ந்து திறமையைக் காட்டாமையால் இவருக்குப் பதிலாக மாவன் அத்தபத்து களமிறங்குவாரென எதிர்பார்க்கப்படுகின்றது. வேகப் பந்து வீச்சாளரான தில்ஹார பெர்னாண்டோ காயமுற்றதனால் இவருக்குப் பதிலாக மஃரூப் சேர்த்துக்கொள்ளப்பட வாய்ப்புக்கள் உள்ளன.
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை ஆரம்பத்திலே வீழ்த்திவிட வேண்டுமெனும் நோக்கிலே நியூசிலாந்து இவ் ஆட்டத்தில் நுழையவிருக்கின்றது, இவர்களின் ஓட்டங்களை ஆரம்பத்தில் மட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயமென நியூசிலாந்து அணித் தலைவர் ஸ்டீபன் பிளமிங் கருத்து தெரிவித்துள்ளார்.
சேன் போண்ட் இலங்கை அணிக்கு சவாலாக இருப்பதுடன் நியூசிலாந்து அணியின் மற்றய பந்து வீச்சாளர்களும் சிறப்பாக ஆடினால் இலங்கை அணி தோல்வியைத் தழுவக் கூடிய வாய்ப்பு அதிகம்.
நியூசிலாந்து அணி இதுவரை நான்கு முறை உலக கிண்ண கிரிகெட் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியும் இறுதிச் போட்டிக்குச் செல்ல முடியவில்லை, இதனால் இப்போட்டியில் கடுமையாக உழைப்பார்கள் என எதிர்பார்க்க முடிகின்றது.
இப் போட்டிக்கு நடுவர்களாக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ருடிகெட்சன், அவுஸ்திரேலியா சைமன்டௌபில், தொலைக்காட்சி நடுவராக டெரல்ஹாபர், மேலதிக நடுவராக பாகிஸ்தான் அஸாத்ரவூப், மற்றும் போட்டி மத்தியஸ்தராக தென்னாபிரிக்கா மைக்பிரொக்டர் போன்றோர் கலந்து கொள்வர்.
எது எப்படி இருப்பினும் உலகக் கிண்ணத்தை சுவீகரிக்க வேண்டுமென்பதே ஸ்ரீலங்கா அணியின் நோக்கமாகும்.
திங்கள், 23 ஏப்ரல், 2007
பழைய திரைப்படத்துக்கு மீண்டும் வர்ணம் தீட்டுகிறார்கள்
பல்லாண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த காதல் இளவரசன் ஜெமினிகணேசனின் வெற்றிப் படமான "நான் அவனில்லை" திரைப்படத்தை மீண்டும் புதுப்பிக்கும் நோக்கில் "நான் அவன் இல்லை" எனும் அதே பெயரிலேயே செல்வாவின் இயக்கத்தில் இத்தேஷ் ஜபக் தயாரிக்க வசனத்தை பட்டுக்கோட்டை பிரபாகர் எழுத எடிட்டிங் செய்கின்றார் சுரேஷ் அர்ஸ்.
இத் திரைப்படத்தில் சட்டம் பயிலும் மாணவியாக ஸ்னேகாவும், தொழிலதிபராக நமீதாவும், மொடலிங் செய்யும் பெண்ணாக மாளவிகாவும், கேரளத்துப் மயிலாக ஜோதிர்மயியும் மற்றும் கடவுள் பக்தையாக கீர்த்தி சாவ்லாவும் நடிக்கின்றனர்.
பழைய படங்களுக்கு மீண்டும் வர்ணம் தீட்டி அதில் இருக்கும் நேர்த்தியான விடயங்களை சமூகத்துக்கு கொடுக்க திரைப்பட உலகம் எடுக்கும் முயற்சி வரவேற்கக் கூடியதேயாகும்.
இத் திரைப்படத்தில் ஜீவன், நமீதா இருவரும் தோன்றும் காட்சியே இதுவாகும்.

ஞாயிறு, 22 ஏப்ரல், 2007
தாக்குதலுக்குரிய பயங்கரமான ஆயுதங்கள்
ஸ்ரீலங்கா அரசாங்கமும் அதன் படையணியும் ஈழத்தமிழர்களுக்குச் செய்யும் கொடுமைகள் எழுதி முடிக்க இயலாதவை, அந்த கொடூர வரிசையில் இப்படமும் பதிவாகின்றது.
அம்பாறை மாவட்டத்தின் தமிழர்கள் வாழும் பகுதியில் நேற்று தெருவால் வந்த முதியவர் ஒருவரை ஸ்ரீலங்கா பெண் பொலிஸார் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவரா இவரின் பையினுன் தாக்குதல் செய்யக்கூடிய பயங்கரமான ஆயுதங்கள் இருக்கின்றனவாவென துருவித் துருவி ஆராய்வதனைப் பாருங்கள்.
ஸ்ரீலங்கா எதிர்நோக்கும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு
ஆக்கம் - பீஷ்மர்
கடந்த இரண்டு மூன்று வாரங்களாக கொழும்பு நிலைப்பட்ட தென்னிலங்கை அரசியல் போக்குகளின் பிரதான பண்புகளாக பின்வருவனவற்றைக் கூறலாம்.
முதலாவது இலங்கையில் பிரதானமாக கொழும்பில் நடைபெறும் அரச நிலைப்பட்ட மனிதவுரிமை மீறல்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளமை. இரண்டாவது யு.என்.பி.அரசாங்க எதிர்ப்பை மிக வேகமாக தூண்டியுள்ளமை. மூன்றாவது இவற்றின் தாக்கங்கள் காரணமாக ஜனாதிபதி நிர்வாக மட்டத்தில் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளமை. இந்த அரசியல் உஷ்ண அதிகரிப்பின் பிரதான அம்சம் தமிழர் பிரச்சினையோ விடுதலைப் புலிகள் பிரச்சினையோ பெரிய முக்கியத்துவம் பெறாமையாகும். சடங்காசாரமான குறிப்புகள் உண்டெனினும் மேற்கூறிய பிரச்சினையின் வெடிப்புக்கு தமிழர் பிரச்சினை நிச்சயமாகக் காரணமாக அமையவில்லை.
சற்றுப் பின்நோக்கிப் பார்க்கும்போது அரசாங்கம் சிங்கள மக்களின் ஆதரவை மேலும் மேலும் ஸ்திரப்படுத்துவதற்காக எடுத்துக்கொண்ட சில செயல்களின் பக்க விளைவுகளாக இவை தோன்றினவோ என்ற சந்தேகம் ஏற்படவே செய்கின்றது. கிழக்கிலே அரச படைகள் வென்றுவிட்டதாகவும், உண்மையில் கிழக்கு மீட்கப்பட்டு விட்டதாகவும், அந்தச் சாதனையில் படையினரின் ஊக்கமும் முன்னேற்பாடுகளுமே பிரதான காரணிகளாக அமைந்தன என்றும் கூறப்பட்டது. பிரதான சிங்கள ஊடகங்கள் இதே கருத்தினை சிங்கள நிலைப்பாட்டின் அடிப்படையில் எடுத்துக் கூற இந்தக் கண்ணோட்டம் சிங்கள மக்களிடையே அரசாங்கத்துக்கு பெரிய ஆதரவினை வழங்கிற்று.
இந்தப் பின்புலத்திலே தான் கொழும்பில் சில கைதுகள் நடைபெற்றன. உண்மையில் இவற்றைப் பற்றி சிங்கள ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. இவை பெரும்பாலும் தமிழர் நிலையிலேயே நடைபெற்றன. இவ்விடயம் சம்பந்தமாக மனோகணேசன் ஒழுங்கமைத்த கூட்டம் சர்வதேச கணிப்பாளர்களையும் உள்ளடக்கியிருந்தது. இந்தக் கட்டத்திலே தான் இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களில் முக்கியமானவை இவ்விடயங்கள் பற்றி கருத்துத் தெரிவிக்க தொடங்கின. அமெரிக்க தூதுவர், பிரிட்டிஷ் தூதுவரென படிப்படியாக சில விமர்சனக் குரல்கள் எழத்தொடங்கின.
ஏற்கனவே, நாட்டின் இறைமைக்காக செய்கின்றோமெனக் கூறுகின்ற சிங்கள வாதத்துக்கு, நட்ட- ஆகம ஜாதிய நாடு மதம் இனம்- இது பிரச்சினைகளை ஏற்படுத்திற்று.
ஜனாதிபதி மனிதவுரிமை மீறல்களை கவனிக்காதிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு அதிகரிக்கத் தொடங்கவே அலரி மாளிகையில் அவசர அவசரமாக சில கூட்டங்கள் கூட்டப்பெற்றன.
உதவியமைச்சர் இராதாகிருஷ்ணனே ஜனாதிபதியின் தலையீட்டை வற்புறுத்த தொடங்கினார். ஆனால், கூட்டங்களோ பின்போடத் தொடங்கின. இந்தப் பின்புலத்திலேயே பாப்பரசர் தனது வருடாந்த ஈஸ்ரர் செய்தியில் இலங்கை விடயத்தை எடுத்துக் கூறினார்.
இது நிச்சயமாக ஜனாதிபதிக்கு எதிர்பாராத பிரச்சினைகளை கிளப்பிற்று. அதில் முக்கியமானது சிங்கள மக்களிடையே கிறிஸ்தவம்- பௌத்தம் எனும் அடிப்படையில் ஏற்படக்கூடிய தொலைப்படுத்துகையாகும்.
இந்த வேளையிலேயே தான் சற்றும் எதிர்பாராத வகையில் டெய்லி மிரர் விவகாரம் பெருத்த அரசியல் வெடிப்பை ஏற்படுத்தி பூதாகரமாக வளரத் தொடங்கிற்று.
ஜனாதிபதியின் பிரதம நிர்வாகஸ்தர்கள் பத்திரிகைகளின் கருத்துச் சுதந்திரத்தை மதிக்கிறார்களில்லை என்கிற விடயம் மிகப்பெரிதாயிற்று. அரசாங்கம் சர்வதேச பிரச்சினையை எதிர்நோக்க வேண்டியாயிற்று. வத்திக்கான் விஜயம் உண்மையில் அத்தியாவசியமானதா என்பது ஒரு முக்கியமான பிரச்சினை. ஜே.வி.பி., ஹெல உறுமய இதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால் இதனை பேசவும் முடியவில்லை.
ஜனாதிபதி உண்மையானதொரு இக்கட்டு நிலைக்குள் தள்ளப்பட்டார்.
அவரவருக்கு ஏற்றவகையில் பேசி பிரச்சினைகளின் உக்கிரத்தை தவிர்க்கின்ற ஜனாதிபதியின் இயல்புக்கு எதிரான நிலைமைகளே இப்பொழுது தோன்றியுள்ளன.
டெய்லி மிரர் ஆசிரியருக்கு ஜனாதிபதி கூறியதாக எடுத்துச் சொல்லப்பட்ட காரணம் கிழக்கில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் நடவடிக்கை மாற்றங்களுக்கு பெரிய பிரச்சினைகளாயிற்று, ஆனால் ஒன்று தெரிகின்றது.
ஜனாதிபதியோ அல்லது அவரது அலுவலகமோ கொழும்பை உள்ளடக்கிய சிங்களப் பிரதேசங்களையே கருத்திற்கொண்டுள்ளது. இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால் தமிழ்ப் பயங்கரவாதம் எனும் உச்சாடனம் அரசியற் தீர்வுக்கான வழிவகைகள் பற்றி பேசவுமில்லை.
ஹெல உறுமயவும் ஜே.வி.பி.யும் முதலில் புலிகளை தோற்கடிக்க வேண்டுமென்ற கோஷத்தையே முன்வைக்கின்றன.
வியாழனன்று பி.பி.சி. சிங்கள சேவையில் நடந்த ஒரு நேர்காணலில் பாப்பரசர் இலங்கையின் மனிதவுரிமைப் பிரச்சினையை மிக ஆழமாக பார்க்கிறார் என்பதைக் காட்டிற்று. இந்தப் பின்புலத்தில் ஜனாதிபதியின் விஜயம் ஏறத்தாழ பிரச்சினை பெரிதாக வெடிப்பதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் வருமுன் காப்பு நடவடிக்கையே தெளிவாகின்றது. இலங்கை விடயங்கள் பற்றி வத்திக்கானுக்குள்ள ஆழமான சிரத்தையின் வெளிப்பாடாக அமைந்தது, வத்திக்கான் மடுத்தேவாலயப் பிரச்சினையை கிளப்பியதாகும்.
உலகிலுள்ள எந்த நாட்டிலுமுள்ள ஒரு சிறு கத்தோலிக்க தேவாலயத்துக்கு கூட வத்திக்கானில் ஒரு `பைல்' இருக்குமென்று கிண்டலாக கூறுவார்கள். அந்த உண்மையை ஜனாதிபதி உணர்ந்திருப்பார்.
இதற்குள் ஜிம் பிறவுண் என்ற கத்தோலிக்க குரு ஒருவர் பற்றிய பிரச்சினை வேறு. இலங்கை அரசாங்கம் இலங்கைத் தமிழர் பிரச்சினையை நேராகவும் நேர்மையாகவும் எதிர்நோக்கத் தவறுகின்றது என்ற அபிப்பிராயமே சர்வதேச மட்டத்தில் படிப்படியாக மேற்கிளம்புகின்றது.
இலங்கைத் தமிழர் போராட்டங்களின் பொழுது மனிதவுரிமை கோட்பாட்டை தனக்குச் சாதகமாக அடிக்கடி பயன்படுத்தி வந்த அரசாங்கம் இப்பொழுது அதே மனிதவுரிமைப் பிரச்சினையால் வேலிக்கான முட்கம்பி போல தன் கால்களை தானே சுற்றி வளைத்துக் கொண்டுள்ளது.
நன்றி தினக்குரல்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)