இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சியில் ஸ்ரீலங்காவின் விமானப்படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழக் காவல்துறை நடுவப் பணியகத்தின் கட்டிடத் தொகுதிகளை பலத்த சேதமடைந்துள்ளன.தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வன்னி செயலகத்தின் மீது ஸ்ரீலங்கா விமானப்படையினர் நடத்திய மற்றொரு தாக்குதலில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் களஞ்சியசாலை அழிவுக்குள்ளாகி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஸ்ரீலங்கா விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானின் கிளிநொச்சிக்கு 04 கி.மீ மேற்காக அமைந்த கனகபுரம் பாதையை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியதாக விமானப்படைப் பேச்சாளர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார்.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.