ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் ஈழத் தமிழர்கள் வதைக்கப் படுவதைக் கண்டித்து திட்டமிட்டபடி சென்னையில் இன்று 2008.10.24 ஆம் நாள் மனிதச் சங்கிலிப் போராட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் மாலை 4 மணிக்கு கொட்டும் மழையில் வடசென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலிருந்து ஆரம்பித்து பாரிமுனை, பிராட்வே பேருந்து நிலையம், சென்ட்றல், பல்லவன் சாலை வழியாக அண்ணாசாலையிலிருந்து தாம்பரம் ஊடாகவும் இம் மனிதச் சங்கிலித் தொடர் சென்றது.
தி.மு.க., பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், புரட்சி பாரதம், ஜனநாயக முன்னேற்றக் கழகம், உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் ஏராளமான கல்லூரி மாணவர்களும், பல்வேறு அமைப்புக்களைச் சார்ந்தவர்களும் இவர்களுடன் சிறுசேமிப்பு குழு துணைத் தலைவர் திரு.ரகுமான்கான், தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் திரு.ஜே அன்பழகன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் திரு.ஆர்.நல்லகண்ணு, திராவிடர் கழகத் தலைவர் திரு.கி வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு.திருமாவளவன் ஆகியோர் அண்ணாசாலை பெரியார் சிலை அருகே மனிதச் சங்கிலித் தொடரில் கலந்து கொண்டனர்.
மனித சங்கிலி தொடர்பாக வெளிவந்த புகை படங்களில் அதிகமானோர் ஏந்தியிருந்த பதாகைகளில் கலைஞர்,மற்றும் ஸ்ராலின் ஆகியோரது படம் பொதித்தவைகளை தான் அதிகம் காண முடிந்தது.ஈழ தமிழரின் துயர் கூறுபவை குறைவாகவே இருந்தது.வேதனையான விடையம்.
பதிலளிநீக்குபல நாட்களாக காணவில்லை
அன்புடன்
அப்புச்சி
நன்றி அப்புச்சி!
பதிலளிநீக்குவிரைவில் தமிழகத்தில் வரவிருக்கும் தேர்தலுக்கான வாக்குத் தேடலின் ஒரு அங்கமே ஈழத் தமிழர் பிரச்சனை எனும் கோஷம், அரை நூற்றாண்டுக்கு மேலாக திரு.மு.கருணாநிதி அரசியல் காய் நகத்தல்களுக்கான பல களங்கள் கண்டவர், அந்த வகையில் ஈழத் தமிழர்கள் எனும் நாமத்தினை வைத்து வாக்கு வங்கியினை பெருப்பிப்பதில் முயற்சி எடுத்துள்ளார்.