பரந்தன் இந்து வித்தியாலயத்துக்கு அண்மித்து இன்று 2008.10.28 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணியளவில் ஸ்ரீலங்கா வான் படையினர் இரு வானூர்திகள் மூலம் நடாத்திய குண்டுத் தாக்குதலில் பத்து வீடுகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியதுடன், வீதியால் சென்று கொண்டிருந்த மூவர் கொல்லப்பட்டும், மாணவர்களில் மூவர் உட்பட ஆறு பொதுமக்கள் காயத்துக்கு இலக்காகி உள்ளனர்.
பாடசாலைக்கு அண்மித்து இத் தாக்குதல்கள் இடம்பெற்று இருந்தனாலேயே கிறிஸ்டி, கனிஸ்டன், தனுசன் ஆகிய மூன்று மாணவர்கள் காயத்துக்கு இலக்காகியுள்ளனர்.
47 வயதுடைய சுகுமார் ரதி, 37 வயதுடைய பத்மசீலன், 29 வயதுடைய வீ.காண்டீபன் ஆகியோர் வீடுகளிலிருந்த போதே குண்டுத் தாக்குதலில் காயத்துக்கு இலக்காகி உள்ளனர்.
இந்த மாணவர்களின் பாடசாலை நேரங்கள் பதுங்கு குழிகளில்தான் கழிகின்றன.
பதிலளிநீக்குவெட்கமில்லை வெட்கமில்லை-இங்கு
பதிலளிநீக்குயாருக்கும் வெட்கமில்லை
நாதியற்றுச் சாகின்றாரே-அங்கே
ஈழத்தமிழரெல்லாம்
நம்பிக்கை மோசடி செய்கிறாரே-இங்கே
தமிழகத் தலைவரெல்லாம்
கொத்துக்கொத்தாய் அங்கு
செத்துமடிந்திடும் கொடுமை
உமக்குத் தெரியாதா?
குஞ்சுக் குழந்தைகள்
நெஞ்சைப்பிளந்திடும் வஞ்சகம்
எல்லாம் சரிதானா?
உயிரைப் பணயம் வைத்து
உரிமைக்குப் போராடும்
உடன்பிறப்பின் துயர் புரியாதா?
இறுதியைக் கண்டிட வாளேந்துவோர்
உணவுக்கும் உடைக்குமா கையேந்துவார்?
யாசர் அராபத்தை
நெல்சன் மண்டேலாவைப்
போற்றிப் புகழ்ந்திடும் போக்கிலியே
தன்மானம் காத்திடத்
தங்கையர் தம்பியர்
அணிதிரண்டெழுவதை
அறியாயா?
யார் உனை மன்னிப்பார்?
ஒருமுறை எண்ணிப்பார்
உன்னால் முடிந்த
உதவியைச் செய்திடு!
உன்னினம் காத்திடு!
காலம் கடந்தபின்
கதறிப் பயனில்லை.
சிந்தி!செயல்படு!
முந்திச் செயற்படு!
உடனே புறப்படு!
களத்துமேட்டுக்கு வந்து பின்னூட்ட மிட்ட ஓவியாவுக்கு நன்றி.
பதிலளிநீக்குஈழத்தவர்களின் தலைவிதியை என்னவென்று சொல்வது!
களத்துமேட்டுக்கு வந்து கருத்திட்ட மறைமலை இலக்குவனாருக்கு நன்றி.
பதிலளிநீக்குபூனைக்கு மணி கட்டுபவர்கள் யார் எனச் சிந்தித்துக் கொண்டிருக்கின்றதோ எமது சமுதாயம்!