வடக்கிலங்கை, கிழக்கிலங்கை பகுதிகளில் இருந்து கொழும்புக்கு வந்து ஐந்து வருடங்களுக்குள்ளாக வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் பொலிஸ் நிலையங்களில் தங்களது பெயர் விபரங்களைப் பதிவு செய்யுமாறு கடந்த மாதம் ஸ்ரீலங்கா படை தரப்பு அழைப்பு விடுத்திருந்தது, அதற்கிணங்க பதிவு சுமுகமாக நடந்தேறியதாக தகவல்கள் தெரிவித்தன.வடக்கிலங்கை, கிழக்கிலங்கை மற்றும் மத்திய மாகாணங்களிலிருந்து புத்தளம் பொலிஸ் பிரிவில் கடந்த ஐந்து வருடங்களுக்குள்ளாக நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ தங்கியிருக்கும் தமிழ் பேசு மக்கள் அனைவரையும் நாளை 2008.10.26 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை பொலிஸ் நிலையத்தில் தங்களது விபரத்தைப் பதிவு செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
பொலிஸ் பதிவுகள் நடைபெறவிருக்கும் இடங்கள் பின்வருமாறு:
புத்தளம் பொலிஸ் நிலையம்:
புத்தளம் சென்.அன்ட்றூ மத்திய மகா வித்தியாலயம்.
கருவலகஸ்வ பொலிஸ் நிலையம்:
ஸ்ரீ விஜய ரஜமகா விகாரை.
சாகியவ பொலிஸ் நிலையம்:
அளுத்கம துட்டுகெமுனு மகா வித்தியாலயம்
ரவசத்தேசம பொலிஸ் நிலையம்
சிறிசங்கபோ மரணாதார சமிதசாலாவ
ஆனமடுவ பொலிஸ் நிலையம்:
சங்கட்டிகுளம் பாடசாலை
உஸ்வ பாடசாலை
ஆனமடுவ கன்னங்கர பாடசாலை
தோனிகல பாடசாலை
பல்லம பொலிஸ் நிலையம்:
சேருகெலே பாடசாலை
கற்பிட்டி அல்அக்ஷா மண்டபம்
தலவில மகா வித்தியாலயம்
மாம்புரி ரோமன் கத்தோலிக்க பாடசாலை
முந்தல் பொலிஸ் நிலையம்:
ஆண்டிமுனை பாடசாலை
கருக்குவட்டன பாடசாலை
முந்தல் சிங்கள மகா வித்தியாலயம்
கரிக்கட்டி அகதி முகாம்
ஸ்ரீமாபுர அகதி முகாம்
வண்ணாத்தி வில்லு பொலிஸ் நிலையம்:
கரைதீவு முஸ்லிம் பாடசாலை
வட்டிகந்த முஸ்லிம் பாடசாலை

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.