கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூதூரில் "அக்ஷன் பாய்ம்" தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் 17 மனிதாபிமான பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் நோக்கில் ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவால், சுயாதீன சர்வதேச நிபுணர்களின் கண்காணிப்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப் படுகொலைச் சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்டதென சாட்சிப்பொருட்களுள் வைக்கப்பட்டிருந்த 5.56 கலிபர் துப்பாக்கி ரவையொன்று நீக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் சிரேஷ்ட சட்டத்தரணியான மைக்கல் பிரின்பாம் குற்றஞ்சாட்டியுள்ளார். 5.56 கலிபர் ரவைகளானது M16 ரக துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படுகின்றது.
இத் துப்பாக்கிகளை விசேட அதிரடிப்படையினர் பயன்படுத்துவதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
களத்துமேட்டுக்கு வந்து பதிவிட்ட Biby Cletus பதிவருக்கு நன்றி.
பதிலளிநீக்குஆங்கிலத்தில் எழுதுவதிலும் பார்க்க தமிழில் எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் அல்லவா?