கொழும்பையும் அதனை சுற்றியுள்ள கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை பகுதிகளில் அமைந்துள்ள விடுதிகளில் தங்கியுள்ள தமிழர்களை ஏலவே வெளியேறுமாறு ஸ்ரீலங்கா பொலிஸார் கேட்டுக் கொண்டதற்கிணங்க தங்கியிருக்கும் தமிழர்களை பலோத்காரமாக வெளியேற்றும் நடவடிக்கையில் ஸ்ரீலங்கா பொலிஸார் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நடவடிக்கையில் வெளியேற்றப்பட்ட தமிழர்களை இருபதுக்கும் மேற்பட்ட பேரூந்து வண்டிகளில் ஏற்றி வவுனியாவில் கொண்டு இறக்கி விட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இன்றைய நடவடிக்கையில் வெளியேற்றப்பட்ட 600 க்கும் மேற்பட்ட தமிழர்கள் பேரூந்தில் ஏற்றப்பட்டு பெஹலியகொட பகுதியில் இறக்கி விடப்பட்டுள்ளார்கள்.
ஸ்ரீலங்காவில் இக் கெடுபிடிகளை உற்று நோக்கும் போது தமிழீழ அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது போன்றும், தமிழீழத்தில் உள்ளவர்கள் ஸ்ரீலங்காவில் வதியும் உரிமையற்றவர்களாகவும், கொழும்பு மற்றும் தென்பகுதிகளுக்குச் செல்வதென்றால் அதற்குரிய கடவுச்சீட்டு இருக்க வேண்டும். இதனை நடைமுறைப்படுத்துவதற்காகவே ஸ்ரீலங்கா இப்படி நடந்து கொள்கின்றது என எண்ணத் தோன்றுகின்றது.
தமிழர் தலை நிமிந்து நடக்க தமிழீழம் எனும் ஒரு நாடு விரைவில் பிறக்கும், அதுவரை பொறுமை காப்போம்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி ஸியா.
பதிலளிநீக்குஇந்தப் பதிவு தமிழீழத்துக்கான அங்கீகாரம் கிடைக்கும் நேரத்தை வரவேற்கும் சம்பவமாக அமைந்திட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.