இலங்கைத் தமிழர்களுடன் இணைந்து சிங்களத் தம்பதியரும் தமிழ்நாட்டுக்கு அகதிகளாகச் செல்லும் போது இந்திய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் அகதித் தஞ்சம் மறுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.2008.12.20 ஆம் திகதி சனிக்கிழமை படகின் மூலம் தமிழகம் சென்ற 19 தமிழர்களுடன் இளம் சிங்கள காதல் தம்பதிகளான 30 வயதுடைய துஸா சந்தன மற்றும் 18 வயதுடைய சறுகா பில்கானி போன்றோரும் இடம்பெற்று இருந்தனர்.
கொழும்புப் பகுதியில் வாகனச் சாரதி பயிற்சி நிலையம் நாடாத்தி வந்த திரு.துஸா சந்தனவிடம் வாகனப் பயிற்சிக்காகச் சென்ற செல்வி.சறுகா பில்கானி காதல் வயப்பட்ட நிலையில் பெற்றோருக்கு தெரியாமல் இருவரும் வவுனியா பிரதேசத்தில் வசித்து வந்தவர்கள், இந் நிலையில் இவர்களுக்கு உதவி வழங்கிய தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாகச் சென்ற போது இத் தம்பதியரும் கூடவே சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)