இலங்கைத் தமிழர்களுடன் இணைந்து சிங்களத் தம்பதியரும் தமிழ்நாட்டுக்கு அகதிகளாகச் செல்லும் போது இந்திய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் அகதித் தஞ்சம் மறுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
2008.12.20 ஆம் திகதி சனிக்கிழமை படகின் மூலம் தமிழகம் சென்ற 19 தமிழர்களுடன் இளம் சிங்கள காதல் தம்பதிகளான 30 வயதுடைய துஸா சந்தன மற்றும் 18 வயதுடைய சறுகா பில்கானி போன்றோரும் இடம்பெற்று இருந்தனர்.
கொழும்புப் பகுதியில் வாகனச் சாரதி பயிற்சி நிலையம் நாடாத்தி வந்த திரு.துஸா சந்தனவிடம் வாகனப் பயிற்சிக்காகச் சென்ற செல்வி.சறுகா பில்கானி காதல் வயப்பட்ட நிலையில் பெற்றோருக்கு தெரியாமல் இருவரும் வவுனியா பிரதேசத்தில் வசித்து வந்தவர்கள், இந் நிலையில் இவர்களுக்கு உதவி வழங்கிய தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாகச் சென்ற போது இத் தம்பதியரும் கூடவே சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிசயமான செய்திதான்.உயிரையா காதலையா காப்பாற்றக் கடல் தாண்டினார்கள்!
பதிலளிநீக்குஉயிரில் ஆசை இருந்திருந்தால் கடல் தாண்டியிருக்க மாட்டார்கள் தானே ஹேமா, "கடலின் ஆழத்திலும் பார்க்க காதல் ஆழமானது" என்பதை உறுதிப்படுத்தி விட்டார்கள்.
பதிலளிநீக்குஅகதி என்ற சொல்லை - நான் விரும்பவில்லை எனினும் ,
பதிலளிநீக்குதமிழனிடம் அகதியாக சிங்களன்.
வருகைக்கு மிக்க நன்றி இரவி,
பதிலளிநீக்குகாதலின் வேகம் புரியுதல்லவா?
இங்கு இனவாதமில்லை.
படத்தோடு செய்தியை போட்டுவிட்டீர்கள்... தினமலரில் செய்தியை படித்தேன் ஆனால் படம் இல்லை...
பதிலளிநீக்குஆம் காதல் ஆழமானது!
நன்றி இசக்கிமுத்து,
பதிலளிநீக்கு//படத்தோடு செய்தியை போட்டுவிட்டீர்கள்... தினமலரில் செய்தியை படித்தேன் ஆனால் படம் இல்லை...
ஆம் காதல் ஆழமானது!//
ஆனால் ஓர் வேதனையான விடயம், இந்த இளம் காதல் தம்பதியரை தமிழகம் சிறையில் தள்ளி விட்டதுவே!