போதையை எந்த மதமும் அங்கீகரிக்கவில்லை, இஸ்லாம் மதம் இறுக்கமான கட்டுப்பாடுகளின் ஊடாக போதைப் பொருள் பாவனையை முற்றாகவே தடை செய்துள்ளது, ஆனால் வேலியே பயிரை மேய்வது போல் இஸ்லாமிய மதப் போதகரான சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.சி.எம்.புஹாரி மௌலவி போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட போது சென்னை விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கைது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 22 ஜனவரி, 2012
போதைப் பொருள் கடத்திய மௌலவி!
போதையை எந்த மதமும் அங்கீகரிக்கவில்லை, இஸ்லாம் மதம் இறுக்கமான கட்டுப்பாடுகளின் ஊடாக போதைப் பொருள் பாவனையை முற்றாகவே தடை செய்துள்ளது, ஆனால் வேலியே பயிரை மேய்வது போல் இஸ்லாமிய மதப் போதகரான சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.சி.எம்.புஹாரி மௌலவி போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட போது சென்னை விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஞாயிறு, 16 நவம்பர், 2008
ஊடகவியலாளர் லோஷன் கைது!

ஸ்ரீலங்கா தலைநகரில் இருந்து ஒலிபரப்பாகும் வெற்றி எப்.எம் வானொலியின் தமிழ் நிகழ்ச்சி பணிப்பாளர் திரு.ரகுபதி பாலஸ்ரீதரன் வாமலோஷன் (லோஷன்) 2008.11.15 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 1:30 மணியளவில் வெள்ளவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து ஸ்ரீலங்கா பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.பயங்கரவாதிகளோடு தொடர்புவைத்திருத்தல், பயங்கரவாத செயற்பாடுகளுக்குத் துணை போதல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே ஊடகவியலாளர் லோஷன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா காவற்துறை வழங்கிய பதிவுப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாராஜா நிறுவனத்தின் சக்தி எப்.எம், ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சூரியன் எப்.எம் ஆகிய வானொலி நிறுவனங்களிலும் லோஷன் அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி எப்.எம் அறிவிப்பாளர் திரு.சந்திரமோகன் (சந்துரு) அவரது வீட்டில் வைத்து, ஊடகவியலாளர் லோஷன் கைதாவதற்கு சற்று முன்பாக பயங்கரவாத தடுப்புப் பிரிவிரால் விசாரணைக்கு உட்பட்டிருந்தாரென அறிய முடிகின்றது.
ஊடகவியலாளர்களான திரு.சசிதரன், திரு.வளர்மதி, திரு.திஸ்ஸநாயகம் போன்றவர்கள் ஸ்ரீலங்கா பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதாகி விடுவிக்கப்படாமல் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புதன், 12 நவம்பர், 2008
ஓமந்தையில் வெடிமருந்துடன் பெண் கைது!
புதுக்குடியிருப்பு உடையார்கட்டுப் பகுதியில் வசித்து வரும் பூநகரி ஞானிமடத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ரஞ்சிதமலர் கேதீஸ்வரன் தனது உறவினரான 84 வயதுடைய செல்லம்மா சுந்தரராஜனை சர்வதேச செஞ்சிலுவைச் சங்க வாகனத்தில் மூலம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிலிருந்து வவுனியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து வந்த போது அவரது பிரயாணப் பையில் இருந்து 3.5 கிலோ நிறையுடைய சி - 4 ரக வெடிமருந்து இருந்த காரணத்தினால் ஓமந்தைச் சோதனைச் சாவடியில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)