சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு முன்பாக தென்னிந்திய சின்னத் திரை நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக கறுப்பு உடை அணிந்து
உண்ணாவிரதப் போராட்டத்தினை இன்று காலை நடாத்தினர்.
சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு தலைவர் திரு.விடுதலையின் தலைமையில் பாரதீய ஜனதாக் கட்சி தேசிய செயலர் திரு.திருநாவுக்கரசு உண்ணா விரதத்தினை ஆரம்பித்து வைத்தார், இதில் நடிகர்கள் அஜய் ரத்னம், ராஜ்காந்த், மோகன்ராம், கே.நடராஜன், வசந்த், மனோபாலா, தேவ் அஜய், சிவன் சீனிவாசன், ஜெயமணி, கமலேஷ், ரிஷி, நந்தகுமார், நடிகைகள் தேவயானி, தீபாவெங்கட், மஞ்சரி, பிருந்தாதாஸ், டாக்டர் சர்மிளா, நித்யா, மவுனிகா, வந்தனா, மோனிகா, ராணி, இயக்குனர்கள் சி.ஜே. பாஸ்கர், திருச்செல்வம், பாலாஜி, ரகுநாதன், ராஜ்பிரபு, மூவேந்தர், இ.ராமதாஸ், தேவேந்திரன், இராஜேந்திரன், இராமலிங்கம், அசோகன், இராதாகிருஷ்ணன், இரஞ்சித்குமார், தயாரிப்பாளர்கள் பி.வி. சங்கர், சக்திவேல், விஜயகுமார், எழுந்தாளர்கள் இதயசந்திரன், கென்னடி, நெல்லை சுந்தர்ராஜன், மோகன் மற்றும் ஏராளமான தொலைக்காட்சி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய இந்தியா உடனடியாக தலையிட வேண்டுமென்றும், இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்காக சின்னத் திரைக் கலைஞர்களின் ஒரு நாள் சம்பளத்தை வழங்குவதெனவும் இறுதியில் ஸ்ரீலங்கா அரசினைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இயக்குநர் திரு.மணிவண்ணன் உண்ணாவிரதிகளுக்கு குளிர்பானம் வழங்கி உண்ணா விரதத்தை முடித்து வைத்தார்.
Not sure, if these people did it for the sake of publicity.
பதிலளிநீக்குBut at the moment, any kind of support to our brothers in SL, who are suffering, is a good thing!
எல்லோருமே எதிர்பார்ப்போடு அசைத்துப் பார்க்கிறார்கள்.யாரும் எதுவும் அசைகிற மாதிரியே தெரியவில்லையே.கண்கள்தான் பூத்துப் போகிறன.
பதிலளிநீக்குநண்பர் ஜோயின் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி, உங்களின் வலைப்பதிவுப் பக்கம் போக முடியவில்லையே, இன்னும் வடிவாக்கம் செய்யவில்லையோ!,
பதிலளிநீக்குஅத்துடன் பின்னூட்டங்களை தமிழிலேயே எழுதலாமே!
வணக்கம் ஹேமா, இந்திய அரசியல்வாதிகளின் உண்மைத் தன்மை எப்படியானது என்பதனை முன்பு உங்களுக்கு சொல்லி இருக்கின்றேன் அல்லவா, அதில் மற்றுமொரு வடிவம் தான் திரையுலகத்தினரின் கண்காட்சியும்.
பதிலளிநீக்குதமிழக மக்கள் பாமரர்கள், அவர்களுக்கு எங்கள்பால் தொண்டு தொட்டு அன்பு பாசம் இருக்கின்றது, ஆனால் அரசியலாளர்களினால் தான் பிரிவினை ஊட்டப்பட்டது என்பது ஜதார்த்தம்.
நடிகர்களும் அரசியல்வாதிகளைப் போன்றவர்களே, ஒன்று சீமான் போன்றவர்களின் துறைசார் நிர்ப்பந்தத்தில் போராட்டத்துக்கென அழைக்கப்பட்டவர்கள், இரண்டாவது இவர்களின் திரைப்படங்களையோ, அல்லது சின்னத் திரை நாடகங்களையோ அதிக விலை கொடுத்து வாங்கி பார்ப்பவர்கள் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களே, இதனால் தங்களின் வியாபாரத் தன்மையின் முக்கியத்துவம் கருதியே இப் போராட்டம் என்றால் அதில் மிகையில்லை.
"ஒரு கல்லில் இரண்டு மாங்காய்" என்பது இவ் அரசியல்வாதிகளுக்குப் பொருந்தும் அல்லவா?