முட்கொம்பன் பகுதியில் 2008.11.12 ஆம் திகதி புதன்கிழமை காலை முதல் மாலை வரை ஸ்ரீலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 ஸ்ரீலங்கா படையினர் கொல்லப்பட்டும், 20 பேர் காயமடைந்தும் உள்ளனரென தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.அக்கராயன் கோணாவில் பகுதியில் 2008.11.11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 10:00 மணிக்கு செறிவான எறிகணை மற்றும் கனரக சூட்டாதரவுடன் முன்நகர்வுத் தாக்குதலை மேற்கொண்ட ஸ்ரீலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் நடாத்திய முறியடிப்புத் தாக்குதலில் 12 ஸ்ரீலங்கா படையினர் கொல்லப்பட்டும், 25 படையினர் காயமடைந்தும் உள்ளனரெனெ தமிழீழ விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.