கடந்த 2008.11.24 ஆம் திகதி இரவு பலத்த காற்றுடன் வீசிய கனமழையினால் யாழ்ப்பாணம் வரலாறு காணாத வெள்ளக் காடாகக் காட்சியளிக்கின்றது, இதனால் 32000 பேர் பாதிப்புக்குள்ளாகி இடம்பெயர்ந்துள்ளனர்.
இடம் பெயர்ந்துள்ளோர் விபரம்:
அனைக்கோட்டை : 570 குடும்பங்கள்
தங்கியுள்ள இடங்கள்:
கலைஒளி சனசமூக நிலையம் - 30 குடும்பங்கள்
உயரப்புலம் அ.மி.த.க.பாடசாலை - 90 குடும்பங்கள்
ஆதவன் பாடசாலை - 450 குடும்பங்கள்
நவாந்துறை : 130 குடும்பங்கள்
(நாவாந்துறை நித்தியஒளி, வசந்தபுரம், சாயிபுரம்)
நல்லூர் : 112 குடும்பங்கள்
(ஜே/81, ஜே/103)
யாழ்.இந்துக் கல்லூரி - 650 பேர்
இந்து மகளிர் கல்லூரி - 534 பேர்
காரைநகர் : 100 குடும்பங்கள்
(ஊரி, பிட்டிஎல்லை, மருதபுரம், வியாவில், கல்லந்தாழ்வு)
தங்கியுள்ள இடம்:
வியாவில் ஐயனார் ஆலய மண்டபம்
வலந்தலை பொதுக் கட்டடம்
புன்னாலைக்கட்டுவன்
(புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கம்பம்புலம்)
தங்கியுள்ள இடம்: புன்னாலைக்கட்டுவன் மகா வித்தியாலயம்
ஊரெழு
(ஊரெழு கிழக்கு, ஊரெழு மேற்கு)
தங்கியுள்ள இடம்: ஊரெழு கலைவாணி முன்பள்ளி
யாழ்.போதனா வைத்தியசாலை செயற்பட முடியாத அளவுக்கு பிரசவ விடுதி, இருதய சிகிச்சைப் பிரிவு பகுதிகளில் வெள்ளம் பன்னிரெண்டு அங்குலத்துக்கும் மேலாக பரவியுள்ளது. வீதிகளில் மரங்கள் முறிந்து கிடப்பதாலும், வீதிகளில் வெள்ளப் பெருக்கு இருப்பதாலும் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பண்ணைப் பாலம் சேதமுற்றுள்ளதால் தீவகங்களுக்கான மக்கள் போக்குவரத்தும் பாதிப்புற்றுள்ளது.
நன்றி: உதயன்
வந்தாச்சா;சுகம்தானே?
பதிலளிநீக்குஈழவன்,என்ன இது எம்மவரின் கதி!வதைபடுகிறார்கள்.கடவுளுக்கும் கண் இல்லாமல் போச்சோ?
சுகம் விசாரித்தமைக்கு நன்றி ஹேமா, வேலைப்பளு காரணமாக ஒரு வாரமாக வர முடியவில்லை, நீங்கள் நலமா?
பதிலளிநீக்குஎம்மவர்க்கு வேதனை
அது கடவுளின் பரிசோதனையோ!