இந்தியத் தலைநகர் புதுடில்லியிலுள்ள நாடாளுமன்றம் முன்பாக 2008.11.14 ஆம் திகதி நேற்று வெள்ளிக்கிழமை ஸ்ரீலங்காவில் ஈழத் தமிழர்கள் மீதான இனப் படுகொலையைக் கண்டித்தும், போர் நிறுத்தத்தை ஏற்படுத்தக் கோரியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தின் ஏற்பாட்டில், மாணவர் பெருமன்றத் தலைவர் திரு.உமன் ஜீனு ஜக்காரியா தலைமையில் அனைத்திந்திய மாநில மாணவர்களினால், கண்டனப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நிகழ்த்தப்பட்டது.டில்லியில் உள்ள இராமலீலா திடலில் தொடங்கிய இப்பேரணியில் 20 மாநிலங்களுக்கும் மேற்பட்ட 20 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட சுலோகங்களையும் மற்றும் பதாகைகளையும் ஏந்தியவாறு நகரின் முக்கிய சாலைகள் வழியாக காவல்துறையினரின் தடுப்பு அரண்களுக்கும் மத்தியில் நாடாளுமன்றத்துக்கு அண்மித்த வீதியில் பலத்த கண்டன கோஷத்துடன் பேரணி ஊர்வலத்தை நடாத்தி முடித்தனர்.



















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
அரசியல் வேறு.என்றாலும் ஈழத் தமிழ் மக்கள் தமிழ்நாட்டு எமது சகோதரர்களுக்கு மனதார நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம்.
பதிலளிநீக்குதமிழக மக்கள் எம் இனத்தவர்கள் என்பதற்கும் அப்பால் அவர்களும் மனிதர்கள் தானே, அவர்களுக்கும் உணர்வுகள் இருக்கின்றன, எம்பால் அளவற்ற நேசம் இருக்கின்றது, நாம் தான் அவர்களைப் புரிந்து கொள்ள தவறி விட்டோம் ஹேமா.
பதிலளிநீக்குசந்தற்பத்துக்கு ஏற்றவாறு தூக்கி எறிவதும் கட்டி அரவணைப்பதும் நாமே தான்.
எமக்கு காலம் கடந்து இப்போது தான் ஞானம் பிறந்துள்ளது, இனியாவது இந்திய மக்களை மதிக்க முனைவோம் ஹேமா.
(அதிகமாக எழுதி விட்டேனா?)
ஈழவன்,அதிகமாக எழுதவில்லை நீங்கள்.சொன்ன அத்தனையும் உண்மைதானே.என்றாலும் கொஞ்சம் என்னையும் திட்டினமாதிரி இருக்கே!
பதிலளிநீக்கு