மட்டக்களப்பு பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக ஆட்கொலைகள் குடும்பம் குடும்பமாக இடம் பெற்று வருகின்றன, இக் கொலைகளுக்கான சூத்திரதாரிகள் இன்னும் இனம் காணப்படாத்தால் இப் பகுதி மக்கள் எந்த நேரத்திலும் பீதியில் வாழ்ந்து வருகின்றனர்.
அதிகரித்து வரும் இக் கொலைகளைக் கண்டித்தும், நீதியான விசாரணை கோரியும் இன்று மட்டக்களப்பு மாநகர சபை மேயர் சிவகீத்தா பிரபாகரன் தலைமையில், மாநகரசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து நகரின் மணிக்கூண்டு கோபுரத்தின் கீழ் அடையாள உண்ணாவிரதத்தினை நடாத்தினர்.
கிழக்கில் நடைபெறும் படுகொலைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும்.
கடத்தல்கள், காணாமல்போதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும்.
எமது மக்களினதும் பிரதேசத்தினதும் முழுமையான பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.
கடந்த 26ம், 27ம் திகதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள 22க்கு மேற்பட்ட கூட்டுப்படுகொலைகளும் ஏனைய படுகொலைகளும் பாரபட்சமற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
இவை போன்ற பல பதாதைகளைத் தாங்கி நடாத்தப்பட்ட உண்ணாவிரத முடிவில் கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
தொடரும் இக் கொலைகளை நிறுத்தக் கோரி கிழக்கு மாகாண முதலமைச்சர் திரு. பிள்ளையான் சந்திரகாந்தனுக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் கடிதமொன்றினையும் எழுதியுள்ளார்.
2008.11.25 ஆம் திகதி மாலை முதல் இன்று மாலை வரை 22 பேருக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
கொல்லப்பட்டோர் விபரம்:
2008.11.25
1. சாமித்தம்பி திருச்செல்வம், 61 வயது, ஓய்வுபெற்ற கிராமசேவகர்,
எருவில், களுவாஞ்சிக்குடி
2. எம்.நேசம்மா, 85 வயது - தாய்
எருவில், களுவாஞ்சிக்குடி
3. திருச்செல்வம் ஜேசுதாஸன், 25 வயது - மகன்,
எருவில், களுவாஞ்சிக்குடி
4. கந்தையா இராசலிங்கம்,
முருகன் கோவிலடி, களுவாஞ்சிக்குடி
5. இராஜேந்திரன் தீபன், 29 வயது,
ஆரையம்பதி, மட்டக்களப்பு
6. எம்.குணசேகரம், 35 வயது
தும்பாலஞ்சோலை, ஆயித்தியமலை, கரடியனாறு
7. குணமணி (விசேட அதிரடிப்படை மீது தாக்குதல் செய்ய முனைந்த போது சுட்டுக்கொலை)
கரவெட்டி, வவுணதீவு
8. சிவநாதன் (விசேட அதிரடிப்படை மீது தாக்குதல் செய்ய முனைந்த போது சுட்டுக்கொலை)
கரவெட்டி, வவுணதீவு
9. பிரதீபன் (விசேட அதிரடிப்படை மீது தாக்குதல் செய்ய முனைந்த போது சுட்டுக்கொலை)
கரவெட்டி, வவுணதீவு
10.பொன்னையா சோதிமலர், 27 வயதுடைய பெண்,
ஆற்றங்கரை வீதி, கிண்ணையடி, வாழைச்சேனை
11.ஜோதி சாமுவேல், 33 வயது,
பதுளை வீதி, கரடியனாறு
2008.11.26
12.கணபதிப்பிள்ளை விநாயகமூர்த்தி 40 வயது ,
கல்லடிப் பிள்ளையார் கோவில் வீதி, களுதாவளை
13.திருமதி விநாயகமூர்த்தி கலாராணி 34 வயது, மனைவி
கல்லடிப் பிள்ளையார் கோவில் வீதி, களுதாவளை
14.வி.தனூஷா, 18 வயது, மகள்
கல்லடிப் பிள்ளையார் கோவில் வீதி, களுதாவளை
15.வி.ரிஷாந்தன் 16 வயது, மகன்
கல்லடிப் பிள்ளையார் கோவில் வீதி, களுதாவளை
16.அருளையா விஜயகுமார், 30 வயது,(தாய் பிள்ளையம்மா - 67 வயது, படுகாயம்)
தேவாலய வீதி, தாளங்குடா, மட்டக்களப்பு.
17.அருளையா விக்கினேஸ்வரன், 28 வயது,
கொலனி வீதி, களுவங்கேணி, ஏறாவூர்.
18.செல்வரெட்ணம் ரமேஸ் (கண்ணன்), 33 வயது,
முருகன் கோவில் வீதி, பேத்தாளை, கற்குடா.
2008.11.27
19.சுப்ரமணியம் கமல்ராஜ், 32 வயது,
மட்டு.மாமாங்கம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பூசகர்
20.பெரியதம்பி முத்துப்பிள்ளை, 45 வயது,
பத்தரைக் கட்டை, வவுணதீவு, மட்டக்களப்பு.
21.சின்னத்தம்பி குலேந்திரன், 27 வயது,
ஒட்டியாத்துறை, பாலமுனை, மண்டூர்
22.ஞானகுரு மோகனதாஸ், 32 வயது,
கடற்கரை வீதி, பனிச்சங்கேணி, கதிரவெளி
//உங்களிடம் புதுவை இரத்தினதுரை ஜயாவின் யாழ் இடப் பெயர்வு பற்றிய கவிதை ஒலி வடிவில் இருந்தால் எனக்கு அனுப்ப முடியுமா??? எனது mail id: melbkamal@gmail.com//
பதிலளிநீக்குஈழவன்,மெல்போர்ன் கமல் கேட்கும் ஒலிப்பேழை உங்களிடம் இருக்கிறதா?இருந்தால் கொடுங்களேன்.நன்றி ஈழவன்.
நன்றி ஹேமா,
பதிலளிநீக்குகவிஞர் புதுவை இரத்தினத்தின் யாழ் இடப்பெயர்வு பற்றிய கவிதைத் தொகுப்பு எதுவும் உத்தியோகபூர்வமாக ஒலி வடிவில் வந்ததாக நான் அறியவில்லை, இருப்பினும் "புலிகளின் குரல்" வானொலியில் "நாடு இதை நாடாவிட்டால் ஏது வீடு" எனும் தலைப்பில் கவிஞர் நடாத்தும் நிகழ்வில் கேட்கக் கூடியதாக இருக்கின்றது, நீங்கள் விரும்பினால் "தமிழ்க் கதிர்" எனும் http://www.tamilkathir.com/ இச் சுட்டியில் காணலாம்.