ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு - 2009

இலங்கை வலைப் பதிவாளர்களை இணைக்கும் நோக்கில் எதிர்வரும் 2009.08.23 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை மணி 9 க்கு கொழும்பு தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் இலங்கைப் பதிவர் ஏற்பாட்டுக் குழுவினர் சார்பாக முதலாவது சந்திப்பினை நடாத்துவதற்கு பதிவுலகத் தோழர்கள் லோஷன், புல்லட், வந்தி மற்றும் ஆதிரை போன்றோர் முன் வந்திருப்பது பாராட்டுக்குரியதாகும்.

* இலங்கைத் தமிழ் வலைப் பதிவாளர்களிடம் அறிமுகத்தையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல்.

* புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்

* இலங்கைப் பதிவாளர்களின் திறமைகளை இணையத்தைவிட்டு வெளிக்கொணர முயற்சி செய்தல்.

* பதிவாளர்களிடையேயான கருத்துரைகள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல்.

* பதிவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அல்லது தொழில்நுட்ப சந்தேகங்களுக்கான வழிமுறைகளை ஆராய்தல்.

இதுபோன்ற நிகழ்ச்சி நிரலுக்கேற்ப இலங்கையர் வலைப் பதிவை சர்வதேச தரத்துக்கு நிகராகக் கொணர இலங்கைப் வலைப் பதிவர் அனைவரும் இந் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஆதரவினைக் கொடுக்க வேண்டியது கட்டாயத் தேவையாகும்.

நடைபெறவிருக்கும் இலங்கை வலைப் பதிவர் சந்திப்பு இனிதே நடந்தேற "களத்துமேடு" வாழ்த்துகின்றது.


ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

தேர்தலில் மக்களால் தூக்கி எறியப்பட்ட தமிழ்க் கட்சிகள் !

யாழ்.மாநகரசபை, வவுனியா நகரசபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன, இதில் ஈபிடிபி சார்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற்று மேயரை தன்னகத்தே வசப்படுத்திக் கொண்டது.

வவுனியா நகரசபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிகப்படியான ஆசனங்களைப் பெற்று நகரசபைத் தலைமைத்துவத்தைக் கைப்பற்றியுள்ளது, ஐனநாயக மக்கள் முன்னணி இன்னும் மேலதிகமாக 144 வாக்குகளைப் பெற்றிருப்பின் நகரசபைத் தலைமைத்துவம் புளொட் வசமாகியிருக்கும்.

எது எப்படி இருப்பினும் இதுவரை 22 பாராளுமன்ற ஆசனங்களை தன்னகத்தே கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு நன்மை பயக்கும் எவ்வித சேவைகளும் இன்று வரை செய்யவில்லை, மாறாக சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாஸிச நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஈழப் போராளிகளெனும் அங்கீகாரம் தேடும் முயற்சியிலேயே ஈடுபட்டு வந்தது.

விடுதலைப்புலிகளினால் வன்னியில் தடுத்து வைக்கப்பட்டு யுத்தக் கவசங்களாகப் பாவிக்கப்பட்ட பல இலட்ச அப்பாவி மக்களை விடுதலைப் புலிகளெனவும், புலிகளை நேசிப்பவர்களெனவும் சர்வதேசரீதியில் பொய்ப் பிரசாரம் செய்து சமுதாயத்தில் ஊனமுற்றவர்களாகவும், வன்னி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியவர்களை அகதி முகாமில் முடக்குவதற்கும் காரணமாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு மீண்டும் வவுனியா நகர மட்டத்தில் ஆட்சியதிகாரம் வழங்க மக்கள் முனைந்திருப்பது தீக்குள் விரலை வைப்பதற்கு ஒப்பானது.

இன்னும் எத்தனை ஆயிரம் மக்களைப் பலி எடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் காத்திருக்கின்றார்களோ தெரியாது, அதற்கான அங்கீகாரத்தினை வவுனியா மக்கள் கொடுத்துள்ளார்கள், இனி வரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் சந்தற்பவாதக் கொள்கையினால் தமிழினம் பூண்டோடு அழிக்கப்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகம் உள்ளன.

மக்களின் பிரதிநிதிகளென தொடர் பிரசாரம் செய்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் யாழ்ப்பாணத்தில் தூக்கியெறியப்பட்டு இரண்டாமிடத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர், விடுதலைப் புலிகளின் ஆசீர்வாதத்துடனும், அவர்களின் கள்ள வாக்குகளாலும் பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கிராமங்களுக்கே உரித்தான உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி கொள்ள முடியாமல் தள்ளாடி நிற்பது வெளிச்சமாகின்றது.

தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி எனும் நாமத்துடன் செயற்பட்டு வரும் "கடிதம் புகழ்"
வீரசிங்கம் ஆனந்தசங்கரி நடந்து முடிந்த தேர்தலில் அவமானத்தைச் சந்தித்துள்ளார், வவுனியா நகரசபைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை நழுவவிட்டதுடன், யாழ்ப்பாண மாநகர சபையில் தன்னைச் சார்ந்தவர்களுக்கே ஆட்சியதிகாரம் கிடைக்குமெனக் கனவு கண்டிருந்தார், பிற்போக்குத்தனமும், சுயநலமும் இவருடனே குடிகொண்டிருப்பதனால் உள்ளூராட்சித் தேர்தலிலேயே இவரது கூட்டுக் கட்சி தோல்வியைத் தழுவிக் கொண்டுள்ளது, இதில் வீ.ஆனந்தசங்கரிக்குக் கிடைத்த விருப்பு வாக்குக்கள் 424 மாத்திரமே, இந்த இலட்சணத்தில் அரசியல்வாதியெனும் நாமத்துடன் இன்னும் தமிழர்களை ஏமாற்றத் தான் வேண்டுமா!

சனி, 8 ஆகஸ்ட், 2009

யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தல் முடிவு - 2009


மொத்த வாக்குகள் - 100417
அளிக்கப்பட்ட வாக்குகள் - 20922
நிராகரிக்கப்பட்டவை - 1358

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வாக்குகள் - 10602, ஆசனங்கள் 11+2 = 13 (போனஸ் அடங்கலாக)
இலங்கைத் தமிழரசுக் கட்சி வாக்குகள் - 8008, ஆசனங்கள் - 8
சுயேச்சைக் குழு - 1 வாக்குகள் - 1175, ஆசனம் - 1
தமிழர் விடுதலைக் கூட்டணி வாக்குகள் - 1007, ஆசனம் - 1

வவுனியா நகர சபைத் தேர்தல் முடிவு - 2009



வவுனியா நகர சபைத் தேர்தல் முடிவுகள் 2009

மொத்த வாக்குகள் 12292
அளிக்கப்பட்ட வாக்குகள் 120850
நிராகரிக்கப்பட்டவை 558

இலங்கைத் தமிழரசுக் கட்சி வாக்குகள் - 4279, ஆசனங்கள் - 3 + 2 = 5 (போனஸ் அடங்கலாக)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி வாக்குகள் - 4136, ஆசனங்கள் - 3
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வாக்குகள் - 3045, ஆசனங்கள் - 2
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாக்குகள் - 587, ஆசனம் - 1

தேர்தல் முடிவுகள் - 2009

யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைக்கான தேர்தல் இன்று நடந்து முடிந்துள்ளது, மாலை 6 மணிக்குப் பின்னராக வாக்குகள் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுக் கொண்டிருகின்றன, சில இடங்களுக்கான தபால் மூல வாக்குகளின் பெறுபேறுகள் ஸ்ரீலங்கா ஊடகங்களின் மூலமாக உடனுக்குடன் அறிவிக்கப்பட்டு வருகின்றது.

தேர்தலின் பெறுபேறுகளை ஸ்ரீலங்கா தேர்தல் திணைக்கள இணையத் தளத்தில் அறியக் கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வவுனியா நகரசபைத் தேர்தல் முடிவு

மொத்த வாக்குகள் 12292
அளிக்கப்பட்ட வாக்குகள் 120850
நிராகரிக்கப்பட்டவை 558

இலங்கைத் தமிழரசுக் கட்சி வாக்குகள் - 4279, ஆசனங்கள் - 3 + 2 (போனஸ் அடங்கலாக)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி வாக்குகள் - 4136, ஆசனங்கள் - 3
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வாக்குகள் - 3045, ஆசனங்கள் - 2
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாக்குகள் - 587, ஆசனம் - 1




வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

கே.பி. விசாரணைக்காக கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்!

மலேசியா கோலாலம்பூரின் ஜலான் ரொங்கு அப்துல் ரகுமானில் உள்ள மஜீத் இந்தியா எனும் இடத்திலுள்ள ரியூன் ஹொட்டலின் அருகில் வைத்து ஆசிய பிராந்திய இன்ரபோலினால் கடந்த ஐந்தாம் திகதி கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கே।பி குமரன் பத்மநாதன் எனப்படும் செல்வராஜா பத்மநாதன் மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இவரின் சில புனை பெயர்கள்:

கே.பி
செல்வராசா பத்மநாதன்
சண்முகம் குமரன் தர்மலிங்கம்
கே பத்மநாதன்
குட்டி மாஸ்ரர்
குட்டி சிறீ
தர்மலிங்கம் சண்முகம் குமரன்
தம்பையா செல்வராசா
கழுதை (பிரபாகரனால் வைக்கப்பட்ட செல்லப் பெயர்)
பெரியதுரை
கண்ணாடி பத்தன்
சதாசிவம் தர்மலிங்கம் ....

வியாழன், 6 ஆகஸ்ட், 2009

கே.பி. தாய்லாந்தில் கைது !

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளரும், புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ஸ்ரீலங்கா படையினரால் கொல்லப்பட்ட பின் அவ் அமைப்புக்கு பொறுப்பாளர் தானே என உரிமை கொண்டாடிக் கொண்டிருந்தவரும், சர்வதேச பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த கே.பி (குமரன் பத்மநாதன்) எனப்படும் செல்வராஜா பத்மநாதன் தாய்லாந்தின் பாங்கொக் நகரத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக ஸ்ரீலங்கா அரச தகவல்கள் கூறுகின்றன.

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரின் ஜலான் ரொங்கு அப்துல் ரகுமான் Jalan Tuanku Abdul Rahman(வீதியில்), மஜீத் இந்தியா பகுதியில் உள்ள "ரியூன் ஹொட்டேல் Tune Hotels" எனும் இடத்தில் விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் மகன் மற்றும் பா.நடேசனின் சகோதரருடன் உரையாடிக் கொண்டிருந்த கே.பி. எனப்படும் செல்வராசா பத்மநாதன் 2009.08.05 பிற்பகல் 2 மணியளவில் வெளியே சென்ற போது இன்ரபோலின் ஆசியப் பிரிவினரால் கடத்தப்பட்டு பாங்கொக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இணையத் தள செய்தியொன்று கூறுகின்றது.

கடந்த 2007 செப்டம்பர் காலப் பகுதியில் குமரன் பத்மநாதன் பாங்கொக் பொலிஸாரினால் கைதானதாக "பாங்கொக் போஸ்ட்" செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



2007 செப்டம்பரில் "பாங்கொக் போஸ்ட்" தளத்தில் வெளியான செய்தி:
Top Tamil Tiger arrested in Bangkok

(BangkokPost.com, Agencies)
Thailand has arrested the finance chief of the Tamil Tigers of Sri Lanka, allegedly the group's chief procurer of arms.

Kumaran Pathmanadan is reported to have been arrested by police in Bangkok on Monday evening. He is one of the top officials in the Liberation Tigers of Tamil Eelam, the formal name of the group.

Pathmanadan apparently had obtained Thai citizenship. He continued to run the global network of LTTE offices and its weapons procurement, logistics and money laundering operations.

He has been on Interpol's Most Wanted list for a number of years. He has also been implicated in several assassinations of political leaders.

The online newspaper Asian Tribune called him "the king pin of Tiger arms smuggling".

"He is a noted smuggler of arms and narcotics. Operating with bank accounts opened in London, Frankfurt, Denmark, Athens and Australia... he has had a free run so far," the newspaper alleged

His arrest followed the detention in Ranong province last month of three Tamil Tiger operatives trying to buy guns and 45,000 rounds of ammuntion.

All four were suspected of running a Tamil Tiger gun-running ring centered in Thailand.

Pathmanadan, who also had a number of aliases, has recently been the subject of a manhunt that stretched to Johannesburg, Rangoon, Singapore and Bangkok. Police said they believed he had bank accounts in London, Frankfurt Denmark, Athens and Australia and has over 200 passports for his use.

He and his group are suspected of running weapons purchased Thailand and neighbouring countries to the Tamil Tigers in Sri Lanka. The Tigers have been desinated as a terrorist group by most western countries, but not Thailand.

A Jane's Intelligence report on the group stated that despite the cease-fire agreement in Sri Lanka, the LTTE continued to re-supply cadres. It said:

"While Cambodia is the hub of the LTTE East Asia Network, Thailand continues to serve as the most important country for trans-shipment of munitions and coordination of logistics... its excellent communications infrastructure, proximity to former war zones in both Cambodia and [Burma] and its western coastline facing the Bay of Bengal and Sri Lanka beyond have made Thailand the ancient interface between the LTTE's war zone."

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

மாநகர சபைத் தேர்தலும் மக்களால் தூக்கி வீசப்பட்ட கூட்டமைப்பினரும் !

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாநகர சபைத் தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ள இந்த நேரத்தில் அரசியல்வாதிகளும் வாக்குக்கோர வீடு வீடாக வீதி வீதியாக நடந்து வருகின்றார்கள்.

அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தாவும் அவர்சார் கட்சி உறுப்பினர்களும் கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முகமிழந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்கு வாக்குத் தேடி வருகின்றனர், அவ்வாறு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், நாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி இணைந்து தர்மலிங்கம் சித்தார்த்தன், திருநாவுக்கரசு ஸ்ரீதரன், வீரசிங்கம் ஆனந்தசங்கரி போன்றோர் தம் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்தும், இலங்கை தமிழரசுக் கட்சிக்காக சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றோரும் மக்களிடம் வாக்குத் தேடுவதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்தப் பிரதேசங்களில் இவ் அரசியல்வாதிகளுக்கென வாக்குவங்கி இல்லாமையே இவர்களின் தீவிர வாக்கு வேட்டைக்குக் காரணமாகும், கடந்த காலங்களில் மக்களுக்குச் சேவைகள் எதுவும் செய்யாமல், தேர்தல் முடிந்ததும் மக்களை மறந்து விடும் இவ் அரசியல்வாதிகளை மக்கள் திரும்பிப் பார்க்க மறுக்கின்றனர்.

மக்களை மறந்து விட்டவர்களில் முக்கியமானவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியெனப் போட்டியிடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரானராகும், போட்டி அரசியலில் டக்ளஸ் தேவானந்தா இருக்கும் வரை பாராளுமன்ற ஆசனம் கிடைக்காது என்பதை நன்கு உணர்ந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றோர்கள் விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் தூக்கிப் பிடித்தாலே உயிர்ப்பிச்சையும் அவர்களின் ஆசீர்வாதத்துடன் கூடிய வெற்றி வாய்ப்பும் கிடைக்கும் என்பதால் கூட்டமைப்பென நாமமிட்டு ஒன்று சேர்ந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளெனும் ஏகப் பிரதிநிதித்துவத்தை ஏற்றுக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை விடுதலைப் புலிகள் செல்லப்பிள்ளைகளாகப் பார்த்தனர், தேர்தல் வந்தது கள்ள வாக்குகள் மூலம் வாக்குப் பெட்டிகள் நிரப்பப்பட்டன, பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகினர், மேற்சொல்லப்பட்டோர் கண்ட கனவு நிறைவெய்தியது.

வெற்றி பெற்ற பின்னர் மக்களுக்கான சேவை எதனையும் செய்யவில்லை, மாறாக உயிர்ப்பிச்சையும் பாராளுமன்ற ஆசனத்தையும் பெற்றுக் கொடுத்த விடுதலைப் புலிகளைத் துதி பாடுவதிலும் அவர்கள் செய்யும் கொலைக் கலாசாரத்தை நியாயப்படுத்துவதிலும் ஆர்வம் காட்டி வந்தனர்.

திருகோணமலையில் இருக்கும் மாவிலாறு அணைக்கட்டு தமிழீழ விடுதலைப் புலிகளினால் பூட்டப்பட்ட கணத்தில் இருந்து விடுதலைப் புலிகளின் இலட்சியத்தில் இருந்த தமிழீழம் சுருங்கத் தொடங்கியது, முற்போக்குச் சிந்தனையைக் கொண்டிராத புலித் தலைமையும் இதனை ஏறெடுத்துப் பாராமல் போரியலில் நாட்டம் கொண்டனர், அதன் விளைவு மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஊனத்துடனும், மனநோயுடனும் உறவுகளை இழந்து அகதிகளாக வாழ்கின்றனர், பலரைப் பலி கொடுத்ததால் கிடைத்த பரிசும், படித்த பாடமும் இது தான்.

இன்னும் எமக்கு போர் எண்ணம் தேவையா, எம்மை நாம் இன்னும் இழக்கத் தயாரா எனும் கேள்விகள் இன்னும் மீளாய்வு செய்யப்படாமலே தொக்கி நிற்கின்றன.

பல இலட்சக் கணக்கான மக்கள் வன்னிப் போர் முனையில் விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கி அவதியுறும் போது உலகமே அழுதது, விடுதலைப் புலிகளின் பிடியில் உள்ள மக்களை விடுவிக்குமாறு சர்வதேசமும் கேட்டுக் கொண்டது, ஆனால் விடுதலைப் புலிகளும், அவர்களின் பிரசாரப் பீரங்கிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் அம் மக்களின் உயிர்களைப் பற்றி எந்தவித அக்கறையும் இன்றி அவர்கள் விடுதலைப் புலிகளை நேசிப்பவர்கள், புலிகளை விட்டு வர விரும்பாதவர்கள் என்றெல்லாம் கதை கூறித் திரிந்ததை எவரும் மறக்க முடியாது.

சம்பிரதாயத்துக்கேனும் "விடுதலைப் புலிகளே போர் முனையில் தடுத்து வைத்திருக்கும் அப்பாவி மக்களை விடுவியுங்கள்" என ஓர் அறிக்கை விடத் திராணியற்று புலிகள் செய்வதே சரியென வியாக்கியானம் செய்தவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆகும், அந்த வகையில் வன்னியில் நிர்க்கதியாகி நின்று கொல்லப்பட்ட எண்ணற்ற மக்களின் இறப்புக்கும், அகதி முகாம்களில் உறவுகளை இழந்து ஊனமுற்று மனநோயாளிகளாக எம் மக்கள் இருப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் காரணமானவர்கள்.

இப்படியான சுயநலவாதப் போக்குடைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள் தமிழர்களின் ஒற்றுமை பற்றிக் கருத்துக் கூற அருகதை உடையவர்களா?, தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அபிலாசைகளையும் உரிமையையும் நேர்மையுடன் வென்றெடுக்கக்கூடிய தமிழர்களின் சக்தியாய் தமிழர்களின் மாபெரும் பலமாய் இருக்கக்கூடிய ஒரேயொரு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு என அறிக்கை விடுகின்றார்கள், இப்படிக் கூற இவர்களுக்கு வெட்கம் இல்லையா, இன்னும் தமிழினம் மௌனிக்க முடியாது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள ஊடக அறிக்கை இவர்களைக் கேள்வி கேட்க வைக்கின்றது, இதனாலேயே இவர்களின் போலி முகங்களை அம்பலப்படுத்த வேண்டிய தேவையும் ஏற்படுகின்றது.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தையடுத்து இலங்கை வந்த இந்திய அமைதி காக்கும் படையுடன் இணைந்து செல்வம் அடைக்கலநாதன் சார்ந்த தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் மக்களுக்குச் செய்த கொடுமைகள் எண்ணற்றவை அதில் பாடசாலை சென்ற மாணவர்கள் முதல் வீதியில் நின்ற வாலிபர்கள் வரை பலோத்காரமாக பிடித்துச் சென்று தமிழ்த் தேசிய இராணுவம் எனும் பேரில் ஆயுதப் பயிற்சி கொடுத்து புலிகளுக்கெதிராக போராடத் தூண்டி விட்டமை முதன்மையானதாகும்,
இந்திய இராணுவம் இந்தியா திரும்பிய போது அவர்களுடனே சேர்ந்து ஓடியோருள் செல்வம் அடைக்கலநாதன் சார்பு இயக்கத்தினரும், சுரேஸ் பிரேமச்சந்திரன் சார்பு இயக்கத்தினரும் முக்கியமானவர்கள்.

இந்தியாவில் சிலகாலம் அஞ்ஞாதவாசம் செய்து விட்டு ஸ்ரீலங்கா திரும்பி சிங்கள அரசாங்கத்துடன் இணைந்து துணைப்படையெனும் பெயரில் பாதுகாப்பு அமைச்சினால் கொடுக்கப்பட்ட பணத்தினையும், பாதுகாப்பையும் பெற்று கொழும்பில் அலுவலகம் அமைத்து அரச புலனாய்வாளர்களாக செயற்பட்டவர்கள் இவர்களே!, கொழும்பிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் இவர்களால் கைதாகி காணாமற் போனோர் அதிகம் பேர்.

அரசாங்கத்திற்குத் துணைபோனமைக்காகவே இவர்களுக்கு பாராளுமன்ற ஆசனம் இல்லாத போதிலும் ஜனாதிபதி சந்திரிக்காவினால் சில திணைக்களங்களுக்கு ஆலோசகர் பதவி வழங்கிக் கௌரவம் செய்ததை ஞாபகமூட்ட வேண்டியுள்ளது, ஈபிஆர்எல்எவ் அமைப்புக்காக சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு மீன்பிடி இலாகாவில் ஆலோசகர் பதவியும், ரெலோ அமைப்புக்காக ஜே.திவ்வியநாதனுக்கு ஓர் ஆலோசகர் பதவியும் வழங்கப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினருக்குரிய சிறப்புரிமையுடன் கூடிய தங்கு விடுதியும் இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

அதே போன்று விடுதலைப் புலிகளுடன் இணைந்து குரல் கொடுத்த போது தமிழ் தேசிய இராணுவம் எனும் பேரில் கொண்டு செல்லப்பட்டு ஆயுததாரிகளாக்கப்பட்டவர்களை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்ற போதும் மௌனம் சாதித்து புலிகளின் செய்கைகளை நியாயப்படுத்தி வந்தவர்களில் செல்வம் அடைக்கலநாதன் போன்றோர் முக்கியமானவர்கள்.

எக் காலத்திலும் தமிழ் மக்களுக்கு இடைஞ்சல் தரக் கூடியவர்களாக வாழ்ந்து வந்த இப்பேற்பட்டவர்களை தமிழர்களின் காவலர்களாக எவ்வாறு ஏற்றுக் கொள்வது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என கூறிக் கொண்டு வரும் துரோகிகளை தூக்கி வீச தமிழ் மக்கள் காத்திருக்கின்றார்கள், எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள யாழ்ப்பாணம், வவுனியா நகர சபைத் தேர்தலில் மக்கள் இவர்களுக்கு உரிய பாடம் புகட்டுவார்கள்.

சனி, 1 ஆகஸ்ட், 2009

இரா.சம்பந்தனுக்கு ஓர் மடல் - பாங்க்கொக்கில் இருந்து ஜெயக்குமார் !

கனம்
மதிப்புக்குரிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்
தலைவர் திரு. இரா.சம்பந்தன் அவர்களுக்கு,


தாங்கள் கிழக்குமாகாணத்தை பிரதிநிதிப்படுத்துவர் என்பதாலும் நானும் கிழக்கு மாகாணத்தில் பிறந்த ஒரு பழைய போராளி என்பதாலும் இந்த சிறுமடலை எழுதிகின்றேன். சிந்திக்க வைப்பதற்காகத் தான் எழுதிகின்றேன். மன்னித்துவிடுங்கள் என்று நிச்சயமாகக் கேட்க மாட்டேன். ...

உங்களைபோல் எனக்கு இந்த அரசியல் சித்து விளையாட்டு எல்லாம் தெரியாது.
ஓ..ம் நமோ நாராயணாயா
'கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது'
அதனால்தான் இன்றும் அகதி வாழ்க்கை.

தாங்கள் பி.பி.சி தமிழோசையில் கொடுத்த செவ்வி கேட்டு எங்கள் செவிப்பாறைகள் எல்லாம் குளிர்ந்தது. காரணம் புலிகள் இன்று இல்லை புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாகக் கூறுகின்றீர்கள. ஆனாலும் தங்களை நம்ப முடியாது. தங்களின் அரசியல் நாடமாகக்கூட இருக்கலாம். இப்படித்தான் இத்தனை காலா காலங்களாக தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் நடத்துகின்றீர்கள் இதுவும் இந்த தேர்தலில் வெல்லுவதற்குத்தனா? என்ற ஒரு பயமும் உள்ளது.

புலிகளோ தாங்கள் ஓர் நாடு கடந்த உத்தேச தமிழ் அரசை அமைக்கப் போவதாகவும், புலிகள் பீனிக்ஸ் போல எழும் என்றும் கூறுகின்றார்கள். நீங்களோ புலிகள் இன்று இல்லை புலிகள் அழிந்துவிட்டார்கள் என்று கூறுகின்றீர்கள். சம்பந்தன் நீங்கள் கவுண்டமணி பாணியில் காமடி ஏதும் பண்ண வில்லையே? பாதிக்கப்பட்ட உள்ளம் பதை பதைகின்றது. காரணம் உள்ளது பிரபாகரன் நன்றாகவும், பாதுகாப்பாகவும் உள்ளார் என்ற உறுதியான செய்தி கிடைத்து இருக்கிறது'' என்று நேற்று பெங்களூர் கருத்தரங்கில் பங்குகொண்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவரும், உலகத் தமிழர் பேரவையின் தலைவருமான பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

தமிழ் மக்களை இன்னும் நிம்மதியாக வாழவிடமாட்டார்களா? பழ.நெடுமாறன் குண்டை போடுகின்றார் உங்கள் உறவுகள் தமிழகத்தின் வல்டி மைனர்கள்'. தங்களின் மதிப்புக்குரிய பாசிசப்புலிகளால் எனது சொந்த நாட்டில் வாழமுடியாமல் இன்னும் ஒரு நாட்டில் வாழ்கின்றேன். நாடு திரும்பலாம் என்ற ஒரு நப்பாசை தான். தங்களை நம்ப முடியாது என்பதற்கு பல காரணங்கள் உள்ளது.

கடந்த கால உங்கள் அரசியல் வாழ்க்கை. அவர் அவர் இருந்த இடத்தை வைத்துத்தான் மதிப்பு. தமிழ் தேசியத்தலைவர் அமிர்தலிங்கம் ஐயா பாசிசப்புலிகளால் கொலை செய்யப்பட்ட பொழுது தெரிந்தும் தெரியாமல் இருந்தது..

அப்போதய ஜனாதிபதி சந்திரிகா அம்மையாருடன் இணைந்து தமிழ் மக்களுக்குக்கு தீர்வு திட்டத்தை முன் வைப்பதகாகக் கூறி சந்திரிக்கா அம்மையாருடன் விசுவாசமாக இருப்பதாகக்காட்டி குண்டு துளைக்காத காரைப் பெற்ற பின் பல்டி அடித்தது.

பாசிசக்கொலைக்கு அரசியல் அங்கிகாரம் புலிகள் அழியும் வரையில் பெற்றுக் கொடுத்தது.

வீரகேசரி இணையம் 1.25.2009 11:38:59 ல் 'எமக்குப் பிரபாகரனோ, தமிழீழ விடுதலைப் புலிகளோ முக்கியமல்ல. எம்மைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பியவர்கள் தமிழ் மக்கள். நாம் அவர்களின் நலனுக்காவே குரல் கொடுக்கிறோம்' என்றும் பல்டி அடித்தது.

புலிகளே ஏக பிரதிநிதிகள் புலிகளுடன் பேசித்தான் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைத் தர முடியும் என்று புலிகள் அழிக்கப்படும் வரையில் பறக்காத நாடுகள் எல்லாம் பறந்து பறந்து பார்த்ததும், புலிகள் முற்றாக இல்லை என்றதும் தங்களின் தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் பேசித்தான் ஒரு தீர்வு திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் என்று தாங்கள் இன்று கூறுவதும் முற்றிலும் வேடிக்கை.

ஏன் நீங்கள் புலிகள் இருந்த பொழுது பிரபாகரன் எங்களுக்கு முக்கியம் அல்ல என்று கூறவில்லை?
எனக்கு ஒரு நீண்ட நாள் சந்தேகம் தேசியக் கூட்டமைப்பு என்றால் என்ன?
இது ஜனநாயகத்தை அவமதிக்கும் கூட்டமைப்புத்தானே?

நான் உண்மையில் படித்தது குறைவு இடித்தது சிவன் கோவில். நீங்கள் சட்டம் படித்தவர் அரசியலில் உள்ள நெளிவு சுழிவுகள் எல்லாம் புரிந்தவர். நீங்கள் இதன் தலைவர் என்ற படியால், தமிழ் தேசியம் என்றால் எனது கணக்கு இதுதான்.
இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை அமைத்தவர்கள் புலிகள்.
அவர்கள் பாசிசத்தை மதிப்பவர்கள்.
ஜனநாயகம் அவர்களுக்கு சுத்த ஞான சுனியம்.

அப்படியானால் புலிகள் இல்லாத போது இந்தத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலைக்கப்பட்டு நீங்கள் முதலில் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சியில் இணைவது சாலச் சிறந்தது என நான் நினைக்கின்றேன்.

புலிகள் இல்லாதபோது ஆண்டவன்தான் உங்களை காப்பாற்ற வேண்டும். புலிகள் இருந்த பொழுதும் புலிகள் இல்லாத பொழுதும் சரி தமிழ் மக்களுக்கு யாரும் ஏகப் பிரதிநிதிகள் அல்ல.

புலிகளால் பறிக்கப்பட்ட ஜனநாயகம் தமிழ் மக்களுக்கு மீண்டும் கிடைக்கவேண்டும்.
அவர்கள் அவர்களின் வாழ்விடங்களில் வாழ வேண்டும். அப்போது தான் தமிழ் மக்கள் சுயமாகச் சிந்தித்து முடிவு எடுப்பார்கள். ஜனநாயக வழியில் தமிழ் மக்கள் யாரை தெரிவு செய்கின்றார்களோ அவர்கள் தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள்.

வயித்துப் பசிக்கு சோறு கேட்கும் மக்களுக்கு தீர்வு ஒன்றும் சோறு தராது. மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். அதுதான் மக்களின் இன்றைய தேவை.
கடந்தவார பி.பி.சி தமிழோசையில் ஒரு பெரிய அப்பட்டமான பொய்யைக் கூறினீர்கள். மூன்று லட்சம் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு சென்று மக்களை பார்வையிட்டீர்களா? எனக் கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய கேள்விக்கு தங்களின் பதில் நியாயம் அற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு முகாம்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறுகின்றீர்கள் அப்படியானால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான யாழ்ப்பாண மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் பார்த்துவிட்டு அழுது கண்ணீர் வடித்தது எல்லாம் என்ன உங்கள் நாடகத்தில் ஒரங்கமா ?

எஸ்.விநோகாராதலிங்கம், சிவநாதன் கிஷோர் இவர்கள் யார்? இவர்களும் தேசிய கூட்டமைப்புத் தானே? முகாங்களுக்கு சென்று கண்ணீர் வடிப்பதால் என்ன பலன்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் செய்கின்ற உதவிகளைக்கூட உங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் செய்யமுடிவில்லை. சரி அவர் ஒரு அமைச்சர் செய்கின்றார் என நீங்கள் கூறலாம்.

அப்படியானால் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உறுப்பினர்கள் சாப்பாட்டு பார்சல் தயார் செய்து கொடுக்கின்றார்கள். உங்களால் தவிக்கும் உள்ளங்களுக்கு தண்ணீர கூடக் கொடுக்க முடியவில்லையா?

அதில் வேடிக்கை என்னவென்றால் தாங்கள் தமிழ் மக்களுக்காக நீண்டகாலமாகப் போராடியதாக் கூறுவது. புலிகளுடன் சேர்ந்து போராடியதின் பலன் மூன்று லட்சம் மக்களை முகாங்களுக்குள் வாட வழி வகுத்தது தான் உண்மை.
அப்படியானால் புலிகள் அழிக்கப்பட்டால் புலிகளால் அமைக்கப்பட்டு, தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தைத் தவறான தடத்தில் வழி நடத்தியதில் பங்காளியான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இந்த தேர்தலில் என்னவேலை?

தமிழர்களுக்கு அழிவை ஏற்படுத்தியவர்கள் வெளிப்படையான குற்றவாளிகள் என்றால், அதைத் தடுக்க வழிகள் இருந்தும் அதைத் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களும் மறைமுகமான குற்றவாளிகளே!.

எனவே தமிழ்பேசும் மக்கள் இத்தேர்தலில் சரியான முடிவுகளை எடுப்பார்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இனியும் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது காரணம் தமிழர்கள் முப்பது வருடங்களாக பட்ட துன்பங்களில் இருந்து பாடம் கற்றுக் கொண்டுவிட்டார்கள். எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்கள் உங்களுக்கு நல்ல பாடம் கற்பிப்பார்கள் அரசியலை மக்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள்.

நன்றி
அன்புடன் .ஜெயக்குமார் (சோதி)
(இலங்கைநெட் இணையத்தளச் செய்தி)

வெள்ளி, 24 ஜூலை, 2009

அருகி வரும் மானினத்தைப் பாதுகாப்பாரா கிழக்கு முதல்வர்?

கிழக்கிலங்கையின் முதுகெலும்பாகத் திகழும் திருகோணமலையின் நகரப் பகுதியில் கட்டாக்காலி மானினங்கள் அதிகரித்துள்ளன, இவற்றுக்கு உரிய உணவின்மையால் பேரூந்து நிலையம், மத்திய சந்தை, கடைத் தெருக்களில் எல்லாம் உணவு கிடைக்குமா எனத் தேடி அலைகின்றன.

போதிய உணவின்மையால் தெருக்களில் காணப்படும் பொலித்தீன் பைகளையும் இந்த மானினம் உணவென்று நினைத்து உண்பதையும் காணக் கூடியதாக உள்ளது, இப்படியான பொருத்தமற்ற சமிபாடடையாத பொருட்களை உண்ணுவதால் அருகிவரும் அழகிய மானினம் அழியக் கூடிய வாய்பே அதிகம்.

அருகி வரும் மானினம் தொடர்பாக சக பதிவர் தோழர் த.ஜீவராஜ் "ஜீவநதி" எனும் தளத்தில் அழகிய மானினத்தின் படங்களுடன் பதிவு செய்துள்ளார். அருகி வரும் மானினத்தைப் பாதுகாக்க வேண்டியது சகலரினதும் கடமையாகும்.

ஆயுதக் கலாசாரம் கோலோச்சிய எம் மண்ணில் அழகிய மானினம் பாதுகாக்கப்பட வேண்டியது கட்டாயத் தேவையாகும், காட்டை விட்டு தெருவுக்கு வனவிலங்குகள் வருவதற்குக் காரணம் அவற்றுக்கான உணவுகளும், சீதோஷ்ணநிலையும் கிடைக்காமையே ஆகும்.

திருமலையை ஒத்த அழகிய நகரான இந்தியாவின் ஏழுமலையான் குடி கொள்ளும் திருப்பதி மண்ணில் அருகி வரும் மானினங்களைப் பாதுகாக்க பாரிய முல்லை நிலப்பரப்பரப்பில் அழகிய சரணாலயம் அமைத்து, சுற்றிவர கம்பி வேலியிட்டு, உள்ளே அவற்றுக்குரிய உணவுகளையிட்டு பாதுகாத்து வருகின்றார்கள்.

இதே போன்று திருகோணமலை மாநகர சபையும் முன்வந்து சரணாலயம் அமைத்து அருகி வரும் அழகிய மானினங்களைப் பாதுக்க வேண்டியது அவசியமாகும், இதற்கு கிழக்கு மாகாணசபை தனது பூரண அதிகாரங்களை வழங்க வேண்டும்.

அருகி வரும் மானினத்தைப் பாதுகாப்பாரா கிழக்கு முதல்வர்?

நன்றி : http://geevanathy.blogspot.com/2009/05/blog-post_14.html
http://geevanathy.blogspot.com/2009/07/blog-post.html

செவ்வாய், 21 ஜூலை, 2009

களுத்துறை கல்வியற் கல்லூரியில் பகிடிவதை எனும் பெயரில் மனித சித்திரவதை!

இலங்கையில் ஆயுதக் கலாசாரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் அரசாங்கம் தனது ஆழுமையை நாட்டின் பல திசைகளுக்கும் திரும்பி உள்ளது, இதில் ஓர் அம்சமாக இளைஞர்கள் மத்தியில் தொழில் வாய்ப்பை உருவாக்க முயல்கின்றது. அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு முட்டுக் கட்டையாக எதிர்க்கட்சிகள் நடந்து கொள்வதனையும் ஊடகங்கள் மூலமாக அறியமுடிகின்றது.

பல்கலைக் கழகத்துக்குத் தெரிவாகாத அதி கூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களின் தராதரத்துக்கேற்ப கல்வியல் கல்லூரிகளில் பயிலும் வாய்ப்பை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது, இதில் பயின்ற பல மாணாக்கர்கள் படிப்பை முடித்ததும் இலங்கைப் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமனம் பெறுகின்றார்கள்.

2009 ஆம் கல்வியாண்டுக்காக ஆங்கில மொழி மூல கற்றலுக்காக கல்வியல் கல்லூரிகளுக்குத் தெரிவாகிய வடக்கு கிழக்கு மாணவர்களில் அதிகமானோர் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் உள்ள ஆங்கில மொழிமூல கல்வியல் கல்லூரிகளுக்கு பயிற்சிக்கென அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் களுத்துறை பஸ்துன்ரட்ட கல்வியற் கல்லூரிக்குத் தெரிவாகிச் சென்ற கனிஷ்ட மாணவர்களுக்கு இந்த வாரம் கொடுமையான பகிடிவதை ஆரம்பமாகியுள்ளது, ஆண் மாணாக்கர் பகுதிகளுக்கு நள்ளிரவில் முகத்தை துணியினால் மறைத்து வரும் சீனியர் என அழைக்கப்படும் சிரேஷ்ட மாணவர்கள் யூனியர் என அழைக்கப்படும் கனிஷ்ட மாணாக்கர்களை அழைத்துச் சென்று கொடுமையான பகிடிவதைகளைச் செய்து வருகின்றனர், இதனால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு மாணவர்கள் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர், பகிடிவதையென கொடுமையான சித்திரவதைக்குள்ளான மாணவர்களில் மூவர் படிப்பு வேண்டாம் என்று ஓடியுள்ளனர்.

இராணுவ முகாம்களில் இடம்பெறும் சித்திரவதைகளுக்கு ஒப்பானதாகவே இவ் வதைகள் இடம்பெறிவதனால், இராணுவத்தினரே வந்து தமிழ் மாணவர்களைச் சித்திரவதை செய்கின்றனரோவென எண்ணத் தோன்றுகின்றது, சிரேஷ்ட மாணவர்கள் எனச் சொல்லப்படுவோரில் அதிகமானோர் சிங்களவர்களாகும், சில தமிழ் சீனியர் மாணவர்கள் இருந்த போதிலும் அவர்களால் எதுவும் செய்ய முடியாமல் உள்ளது.

உடைகளைக் கழற்றிவிட்டு தடிகளினாலும், விக்கட் பொல்லுக்களாலும், தாக்கியதில் ஒரு கனிஷ்ட மாணவனின் ஆணுறுப்பில் பலத்த காயம் ஏற்பட்டது, அம் மாணவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படாமல் விடுதி அறையினுள் வைத்தே சிகிச்சை பெற்று வருகின்றார், இவ் விடுதியின் சுகாதாரமின்மையால் மாணவர்களுக்கு வயிற்றோட்டமும் ஏற்பட்டுள்ளது, வெளியே செல்ல கல்வியல் கல்லூரி மேலாளர்களினதும், சிரேஷ்ட மாணவர்களினதும் அனுமதி கிடைக்காமையால் உரிய மருத்துவமின்றி கனிஷ்ட மாணவர்கள் அவதியுறுகின்றனர்.

இக் கொடுமையினைக் கல்வியற் கல்லூரி நிர்வாகம் கவனத்தில் கொள்ளாமல் இருப்பது மாணவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது, பகிடிவதை எனும் பெயரில் மனித சித்திரவதையை நடத்தும் இக் சிரேஷ்ட மாணவர்கள் எதிர்காலத்தில் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக அனுப்பப்பட்டால் நாளைய சமுதாயத்தை எவ்வாறு உருவாக்குவார்கள். வேலியே பயிரை மேய்ந்த கதை போல அமையாமல் நல்ல சமுதாயம் உருவாக கல்வியல் சமூகம் கவனம் எடுக்க வேண்டும்.

ஞாயிறு, 19 ஜூலை, 2009

மானாட மயிலாட நூறாம் வாரமும், கலா மாஸ்டரும் !

தமிழகத்தின் தொலைக்காட்சிகளில் ஒன்றான கலைஞர் டிவியில் வாராந்தம் ஒளிபரப்பாகும் "மானாட மயிலாட" நிகழ்ச்சி அதிகம் ரசிகர்களை ஈர்த்துக் கொண்டது என்றால் அதில் மிகையில்லை.

இந்த வாராந்த நாட்டியப் போட்டி நிகழ்ச்சி நூறாவது வாரத்தை எட்டியதனை சிறப்பிக்கும் முகமாக கலைஞர் கருணாநிதியைப் புகழ் பாடும் நோக்கில் மானாட மயிலாட - 4 பல நாட்டியங்களை அரங்கேற்றின, அனைத்துப் போட்டியாளர்களும் தங்களது திறமைகளை நிலைநாட்ட அருமையான நடன நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

போட்டியாளர்களில் ஒருவரான கோகுல் தனது தனித்துவத்தை நிலைநாட்ட பல சிறப்பு நிகழ்சிகளை நடத்தி வருவது பார்வையாளர்களுக்கு சிறப்பு விருந்தாகும், கோகுலையும் விஞ்சும் வகையில் இறுதியாக இணைந்துள்ள போட்டியாளர்களில் ஒருவரான மனோ தனது குரலின் திறமையை வெளிக் கொணர பிரபலங்களின் குரலோசையை அப்படியே பிரதி பண்ணுவது சிறப்பாக உள்ளது.

இந்த மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியை திறம்பட நடாத்தும் முழுப் பொறுப்பும் நடன இயக்குநர் கலா மாஸ்டரிடமே தங்கி இருப்பதனால் அவருடன் இணைந்து நடுவர்களாக நடிகை குஷ்பு மற்றும் நடிகை நமீதாவும் செயற்படுகின்றனர். இதில் நடிகை நமீதாவின் கெஞ்சும் குரல் பலருக்கு கொஞ்சும் குரலாக இருந்தாலும் புது நடுவரைத் தேட வேண்டிய கட்டாயம் கலா மாஸ்டருக்கு உள்ளது, தமிழகத்தில் நடுவர்களுக்கான பஞ்சம் ஏற்பட்டுள்ளதோ என எண்ணத் தோன்றுகின்றது.

இந்த நூறாவது வாராந்த சிறப்பு நிகழ்வில் நடிகை குஷ்பு "சின்னத்தம்பி" படப் பாடலான "நீ எங்கே நான் இங்கே..." எனும் பாடலுக்கு அபிநயம் செய்தது தத்துரூபமாக இருந்தது.

நடன இயக்குனர் கலா மாஸ்டரின் உதவியாளர்களில் ஒருவரான ஸ்ராண்டி "ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும், ஆதவன் மறைவதில்லை, ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும், அலை கடல் ஓய்வதில்லை, ஆடிவா, ஆடிவா, ஆடிவா... எனும் பாடலுக்கு நடனத்தில் மெருகூட்ட, கலா மாஸ்டரும் அந்தப் பாடலுக்கேற்ப நடனமாடியது இனிமையாக இருந்தது, ஆனால் அந்தப் பாடல் வரிகளில் வரும் "இடையெனும் கொடியாட நடமாடி வா ..." எனும் சொற்தொடருக்குக் கலா மாஸ்டரின் உடல்வாகு பொருத்தமின்றி இருந்தாலும் கூட அந்த உடலைத் தூக்கி செவ்வனே நடனமாடியதற்காக "ஓ" போட வேண்டும்.

இந் நாட்டியப் போட்டி நிகழ்ச்சிக்கு "மானாட மயிலாட" எனும் தலைப்பை கலைஞர் கருணாநிதியே வைத்ததாக எல்லோரும் கூறிக் கொண்டாலும் கூட இங்கு ஆணும் பெண்ணும் ஜோடியாக இணைந்தல்லவா நடனமாடுகின்றனர், இங்கு குறிப்பிடப்படும் அழகிய தோகை மயில் ஆண் வர்க்கமாகையால், கலைஞர் குறிப்பிடும் மான் பெண் மானாக இருப்பதற்கான வாய்ப்பே அதிகம் !
























செவ்வாய், 14 ஜூலை, 2009

நாட்டைச் சீர்குலைக்கும் பாதாள உலகக் கும்பலும், முஸ்லிம் ஆயுதக் குழுக்களும் !

ஸ்ரீலங்காவின் தலைநகரையும் அதனோடு ஒட்டியுள்ள தென் பகுதியுமான சிங்களப் பகுதிகளில் பாதாள உலகக் கும்பலினால் பலத்த தொல்லைகள் ஏற்பட்டு வருவது சகலரும் அறிந்ததே! இந்தக் கும்பலில் பல்லினத்தவர்களும் அங்கம் வகிக்கின்றனராயினும், சிங்கள, முஸ்லிம் காடையர்களே இதில் அதிக சிரத்தையெடுத்து சமூகச் சீரழிவுகளை நடாத்தி வருகின்றனர்.

போதைப் பொருள் வியாபாரம் முதல் கப்பம் பெறல், ஆட்கடத்தல், பணத்துக்காகக் கொலை செய்தல், அடாவடித்தன தரகு வியாபாரம் போன்றன இவர்களால் செவ்வனே செய்யப்பட்டு வருகின்றது. வேலியே பயிரை மேய்வது போன்று நாட்டை நல்வழிப்படுத்தக் கூடிய அரசியல்வாதிகளும், சில பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தவர்களும் முன்னின்று செயற்படுவதனால் கட்டுப்படுத்துவது கடினமாகவே இருந்து வந்தது.

மக்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவர்களை முற்றாக ஒழித்துக் கட்டி, சுத்திகரிப்புச் செய்யுமாறு படையினருக்கு பணிப்புரை செய்துள்ள நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, படையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்த வேண்டாமென அரசியல்வாதிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளமை பாராட்டத்தக்கது.

அதில் ஒரு கட்டமாக இந்திய என்கவுண்டர் முறையில் சில சுத்திகரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது நல்ல விடயமாக இருந்த போதிலும், அப்பாவிகள் எவரும் இதில் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டியது அவசியமாகும்.

தென்பகுதியில் இருக்கும் இந்த அச்சுறுத்தல் போன்று கிழக்கு மாகாணத்திலும் முஸ்லிம் ஆயுதக் குழுவினரால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது, அஸ்ரப்பினால் தோற்றுவிக்கப்பட்ட முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் இன்னும் தங்களது அடாவடித்தனங்களை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன, இதனை கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் தூபமிட்டு வளர்த்துக் கொண்டே வருகின்றனர், இதனால் பிட்டும் தேங்காய்ப் பூவுமாக வாழ்ந்த தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள இனத்தவர்களிடையே விரிசல் ஏற்பட்டுக் கொண்டே வருகின்றனர்.

பாதுகாப்புத் தரப்பினர் சட்ட விரோத ஆயுதங்களை ஒப்படைக்குமாறு முஸ்லிம் ஆயுதக் குழுக்களுக்கு அறிவித்திருந்தும் இன்னும் பூரணமான ஆயுதக் களைவு ஏற்பட்டதாக அறிய முடியவில்லை, முஸ்லிம் தீவிரவாத ஆயுதக் குழுத் தலைவர்கள் இப்போது தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டு இருப்பதன் மர்மம் என்னவென்று அறிய முடியாமல் இருக்கின்றது.

அரசியல்வாதிகளின் திட்டமிடல்களினால் முன்பும் இதே போன்று முஸ்லிம் ஆயுதக் குழுத் தலைவர்கள் தலைமறைவாக இருப்பது போன்று தகவல்கள் வெளியாகி பாதுகாப்புத் தரப்பினர்களின் தேடுதல்களுக்கு ஆப்பு வைக்கப்பட்டது, அதே போன்று இப்போதும் பாதுகாப்பு தரப்பு எடுத்து வரும் முயற்சிகளை நசுக்குவதற்காகவே, முஸ்லிம் ஆயுதக் குழுவினர்களின் தலைவர்கள் ஓடி விட்டார்கள் எனப் போலிப் பிரச்சாரம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மூதூர், கிண்ணியா, வாழைச்சேனை, காத்தான்குடி, கல்முனை, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, இறக்காமம் போன்ற பகுதிகள் முஸ்லிம் தீவிரவாதிகளின் ஆயுதத் தளங்களாகும், இங்குள்ள சில பள்ளிவாசல்கள் சம்மேளனங்களும், முஸ்லிம் வர்த்தகர்களுமே முஸ்லிம் ஆயுதக் குழுக்களை ஊக்குவித்து வருகின்றனர், இந்த முஸ்லிம் ஆயுதக் குழுக்களினால் இப்பகுதிகளில் வாழும் தமிழ், சிங்கள மக்கள் பாதிக்கப்பட்டே வருகின்றனர், 1990 ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த பல தமிழ் மக்கள் இந்த முஸ்லிம் ஆயுதக் குழுக்களினால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு தங்களது சொந்த கிராமங்களில் இருந்தே துரத்தப்பட்டு, சொத்துக்கள் அழிக்கப்பட்டு, உடமைகளும் அபகரிக்கப்பட்டு இருந்தன.

இப்படியான சம்பவங்கள் இனிமேலும் ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில், முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்படுவதுடன், அதற்கு உடந்தையானவர்களும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியது அவசியத் தேவையாகும்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீவிரமாகச் செயற்பட்டு முஸ்லிம் ஆயுதக் குழுக்களினதும், பாதாள உலகக் கும்பல்களினதும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டியது கட்டாயமாகும்.

முஸ்லிம் ஆயுதக் குழுக்களில் ஒன்றான ஜிகாத் முன்பு வெளியிட்ட துண்டுப்பிரசுரம்

திங்கள், 13 ஜூலை, 2009

மீண்டும் புலூடா விட்டுள்ள தமிழ்வின்

கடந்த 2009.07.11 ஆம் திகதி சனிக்கிழமை மெனிக்பாம் அகதி முகாமுக்கு இளையோர்களின் செயற்திட்டம் தொடர்பான விடயங்களை முன்னெடுக்கச் சென்றிருந்த நாமல் ராஜபக்ஷ அங்குள்ள மக்களினால் சேறடிப்புக்கு உள்ளானதாக புகைப்படங்களை ஆதாரப்படுத்தி தமிழ்வின் செய்தி வெளியிட்டு இருந்தது.

இந்தச் செய்தி ஆதாரமற்றது என்பதை நிரூபிக்க பல ஆதாரங்கள் இருந்தும் கூட "பூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடிப்பது போல" தனது பொய் பரப்புரைகளைத் தொடர்ந்து செய்து வருகின்றது, தமிழ்வின்னின் பொய்ச் செய்திகளை முன்பும் களத்துமேடு தோலுரித்துக் காட்டியிருந்தது.

"இளைஞர்களுக்கு நாளை" அமைப்பின் தலைவரும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனுமான நாமல் ராஜபக்ஷ மக்களைச் சந்திக்கச் செல்லும் போது இராணுவ பாதுகாப்புடன் செல்வது தான் வழக்கம், இப்படியான பாதுகாப்புடன் பின்னியுள்ள நாமல் வன்னி யுத்தத்தில் இருந்து மீண்ட விடுதலைப் புலிகளின் அரசியலுடன் இறுக்கமாகி இருந்த இம் மக்களைப் பார்க்கப் போகும் போது பாதுகாப்பின்றிச் சென்றிருக்க வாய்ப்பே இல்லை, தமிழ்வின் பிரசுரித்துள்ள படத்தில் எந்தப் பாதுகாப்பு படையினரும் இல்லை, அப்படியானால் வன்னி மக்களை முட் கம்பி வேலிக்குள் அடைத்து வைத்துள்ள ஸ்ரீலங்கா இராணுவம் தமிழர்களைச் சுதந்திரமாக நடமாட விட்டுள்ளது, அங்கு இராணுவ கெடுபிடிகள் இல்லையென்று தமிழ்வின் மறைமுகமாகக் கூற முற்படுகின்றது.

தமிழ்வின் பிரசுரித்துள்ள படத்தில் மக்கள் கூட்டத்துக்குள் நின்றிருக்கும் நாமல் மட்டும் சேறடிப்புக்குள்ளான நிலையில் சிக்கியிருப்பதாக பொய்யான படத்தை தயாரித்து வெளியிட்டமை சிரிப்புக்கு இடமானது, அந்த படத்தைக் கிராபிக்ஸ் செய்தவர்கள், அப் படத்தில் நாமலுக்கு அருகில் நிற்பவர்களுக்கும் சிறிது சேற்றைப் பூசி இருக்கலாமே!, மக்கள் கூட்டத்தினுள் இருக்கும் நாமலுக்கு மட்டும் சேறு படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது?

ஒளிப்படக் கருவியினால் பதிவாகியுள்ள திகதியை மாற்ற முடியாமல் இன்னும் பல திகதிகளை இட்டு படத்தில் மாற்றங்களைச் செய்ய முனைந்தது வேடிக்கையாக உள்ளது, பல திகதிகளை ஒளிப்படக் கருவி ஒரே நேரத்தில் பதிவு செய்வதில்லை, இது ஒன்றே போதும் தமிழ்வின் பிரசுரித்துள்ள படம் போலியானது என்பதற்கு!

நாமல் சேறடிக்கப்பட்டதாக வர்ணிக்கப்பட்டுள்ள படத்தில் அவரை சுற்றி நிற்கும் அனைவரும் சிரித்த முகத்துடன் நிற்பது எந்த அளவு தூரத்துக்குச் சாத்தியமாகும், அப்படியானால் ஸ்ரீலங்காவில் ஜனநாயகம் நிலவுகின்றது என்று அர்த்தமல்லவா?

இத்தனைக்கும் மேலாக "தாக்குதல்கள் சம்பவங்களை அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் ஒளிப்பதிவு மற்றும் புகைப்படங்களை எடுத்திருந்த போதும் அவற்றை நாமல் ராஜபக்ச பறித்து அழித்துள்ளார். இதனால் பல ஊடங்களில் தாக்குதல்கள் தொடர்பான பதிவுகள் வெளிவரவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது" எனும் செய்தியை தமிழ்வின் கூடவே பதிவு செய்துள்ளது, இதிலிருந்து தமிழ்வின் பிரசுரித்துள்ள செய்தி போலியானது என்பதை வாசகர்கள் நன்கு புரிந்திருப்பார்கள், ஏனெனில் அந்த படத்தில் நாமலுக்கு முன்னாலுள்ள நபர் செல்லிடப்பேசியினால் சிரித்த படி புகைப்படம் எடுத்துக் கொண்டி இருக்கும் காட்சி உள்ளது.

ஆகவே தமிழ்வின் பிரசுரிதுள்ள செய்தி உண்மையானால் இலங்கையில் எந்த மக்களுக்கும் இப்போது பிரச்சனை ஏதும் இல்லை, முழுமையான ஜனநாயகம் நிலவுகின்றது என்பது அர்த்தம். இல்லை இலங்கையில் தமிழர்களுக்கு சுதந்திரம் இல்லை என கருத்துக் கூற முற்படின் தமிழ்வின் சொல்லியுள்ள செய்தி அப்பட்டமான பொய்ச் செய்தி என்பதுடன் மீண்டும் தமிழ்வின் புலூடா விட்டுள்ளது என்பது உறுதியாகின்றது.

தமிழ்வின் செய்தி

மெனிக்பாம் அகதி முகாமுக்கு பயணம் செய்த ஜனாதிபதியின் மூத்தமகன் மீது சேறடிப்பு மற்றும் கல்வீச்சு தாக்குதல்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 யூலை 2009, 05:04.03 AM GMT +05:30 ]
வவுனியா அகதிகள் முகாமுக்கு பயணம் செய்த மகிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச மீது பொதுமக்கள் சேறடிப்பு மற்றும் கல்வீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

நேற்று சனிக்கிழமை வவுனியா மெனிக்பாம் அகதிகள் முகாமுக்கு ஊடகவியலாளர்களுடன் சென்ற நாமல் ராஜபக்ச மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இளையோர்களின் செயற்திட்டம் குறித்த விடயங்களை முன்னெடுப்பதற்காகவே அங்கு சென்றிருந்தார்.

தாக்குதல்கள் சம்பவங்களை அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் ஒளிப்பதிவு மற்றும் புகைப்படங்களை எடுத்திருந்த போதும் அவற்றை நாமல் ராஜபக்ச பறித்து அழித்துள்ளார். இதனால் பல ஊடங்களில் தாக்குதல்கள் தொடர்பான பதிவுகள் வெளிவரவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.





ஞாயிறு, 12 ஜூலை, 2009

யாழ்தேவி இணையத்துக்கு நன்றி

பல்லாயிரம் பதிவர்கள் மத்தியில் "களத்துமேடு" தனக்கே உரித்தான பாணியில் "ஊடகப் புதினங்களின் திறனாய்வுக் களம்" எனும் கருப் பொருளில் பதிவுகளைச் செய்து வருவது பதிவர்கள் அறிந்ததே!

அந்த வகையில் பதிவுலகில் தடம் பதித்துள்ள என்னையையும் ஒரு பதிவராகக் கருதி "யாழ்தேவி" இணையத் தளத்தில் நட்சேத்திரப் பதிவர் அந்தஸ்த்து கொடுத்துள்ளமைக்கு நன்றியறிதலைத் தெரிவிப்பதில் மகிழ்வு கொள்கின்றேன்.

யாழ்தேவி இணையத்தின் பணி தொடர களத்துமேட்டின் வாழ்த்துக்கள்.

வியாழன், 2 ஜூலை, 2009

ஆழும் கட்சிக்குள் நுழைய ஒத்திகை பார்க்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ஸ்ரீலங்காவின் அபிவிருத்தி மற்றும் சமூக நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று சர்வ கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமொன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

கூடவிருக்கும் சர்வகட்சிக் குழுக் கூட்டத்திற்கு ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கவிருக்கின்றன, குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சிபாரிசுவில் தெரிவாகி பாராளுமன்றம் சென்று சர்வகட்சிக் குழுக் கூட்டங்களுக்கு கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், விடுதலைப் புலிகள் இயக்கம் வலுவிழந்த பின்னரான இந்த நேரத்தில் ஜனாதிபதியினுடான சர்வகட்சிக் குழுக் கூட்டத்துக்கு வர சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இன்றைய சர்வகட்சிக் குழுவின் முதலாவது கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பாராளுமன்ற உறுப்பினர் திரு.என். சிறீகாந்தா தலைமையில் திரு.த.கனகசபை, திரு.கே.துரைரட்ணசிங்கம், திரு.வினோ நோகதாரலிங்கம், திரு.கிஷோர் சிவநாதன் ஆகியோரைக் கொண்ட குழு கலந்து கொள்ளவுள்ளதாகவும், அத்துடன் எதிர்வரும் காலங்களில் நடைபெறவிருக்கும் இந்த சர்வ கட்சிக் குழுக் கூட்டத்திலும் தாம் கலந்துகொள்ளவுள்ளதாகவும் திரு.பா.அரியநேந்திரன் (பா.உ) உறுதிப்படுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா அரசாங்க கட்சியுடனான சந்திப்புக்களை விடுதலைப் புலிகளின் அரசியற் செயலர்களான மறைந்த திரு.சு.ப.தமிழ்ச்செல்வன், பா.நடேசன் ஆகியோரின் கோரிக்கைக்கு ஏற்ப தவிர்த்து வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர், இப்போது சொந்த அறிவின் அடிப்படையில் கலந்து கொள்ள முன்வந்துள்ளதமையானது சிறப்பம்சமாகும்.

பாராளுமன்ற உறுப்பினர் திரு. கிஷோர் சிவநாதன் காட்டிய வழியில் இன்னும் பல தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் உள் நுழைய இருப்பதாகவும், அதற்கான இரகசிய பேச்சுக்கள் திரை மறைவில் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன, அதற்கான முதற்கட்ட ஒத்திகையே இந்த கூட்டத்திற்கான சமூகமளித்தலாகும்.

எது எப்படி இருப்பினும் எமது நலிந்த மக்களுக்கு உபத்திரமின்றி இனிமேலாவது கிடைத்திருக்கும் பாராளுமன்ற ஆசனம் எனும் பெரிய பதவியினைக் கொண்டு தங்களால் முடியுமான உதவிகளைச் செய்வார்கள் என அறிய முடிகின்றது, இச் சந்தற்பத்தையும் தவற விடுவார்களாயின் எதிர்வரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செல்லாக் காசாகி விடுவர் என்பது குறிப்பிடத்தக்கது, இப்போதே கருத்தியல்ரீதியாகப் பிரிந்துள்ள இக் கூட்டமைப்பினர் நிரந்தரமாகவே பல கூறுகளாகப் பிரிந்து இருந்த இடமே தெரியாமல் போவதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----