
இலங்கை வலைப் பதிவாளர்களை இணைக்கும் நோக்கில் எதிர்வரும் 2009.08.23 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை மணி 9 க்கு கொழும்பு தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் இலங்கைப் பதிவர் ஏற்பாட்டுக் குழுவினர் சார்பாக முதலாவது சந்திப்பினை நடாத்துவதற்கு பதிவுலகத் தோழர்கள் லோஷன், புல்லட், வந்தி மற்றும் ஆதிரை போன்றோர் முன் வந்திருப்பது பாராட்டுக்குரியதாகும்.
* இலங்கைத் தமிழ் வலைப் பதிவாளர்களிடம் அறிமுகத்தையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல்.
* புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்
* இலங்கைப் பதிவாளர்களின் திறமைகளை இணையத்தைவிட்டு வெளிக்கொணர முயற்சி செய்தல்.
* பதிவாளர்களிடையேயான கருத்துரைகள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல்.
* பதிவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அல்லது தொழில்நுட்ப சந்தேகங்களுக்கான வழிமுறைகளை ஆராய்தல்.

இதுபோன்ற நிகழ்ச்சி நிரலுக்கேற்ப இலங்கையர் வலைப் பதிவை சர்வதேச தரத்துக்கு நிகராகக் கொணர இலங்கைப் வலைப் பதிவர் அனைவரும் இந் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஆதரவினைக் கொடுக்க வேண்டியது கட்டாயத் தேவையாகும்.
நடைபெறவிருக்கும் இலங்கை வலைப் பதிவர் சந்திப்பு இனிதே நடந்தேற "களத்துமேடு" வாழ்த்துகின்றது.

i am seeing your blog after a long time...keep writing
பதிலளிநீக்குஅடிக்கடி வருகை தரவும் இசக்கி.
பதிலளிநீக்கு