யாழ்.மாநகரசபை, வவுனியா நகரசபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன, இதில் ஈபிடிபி சார்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற்று மேயரை தன்னகத்தே வசப்படுத்திக் கொண்டது.
வவுனியா நகரசபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிகப்படியான ஆசனங்களைப் பெற்று நகரசபைத் தலைமைத்துவத்தைக் கைப்பற்றியுள்ளது, ஐனநாயக மக்கள் முன்னணி இன்னும் மேலதிகமாக 144 வாக்குகளைப் பெற்றிருப்பின் நகரசபைத் தலைமைத்துவம் புளொட் வசமாகியிருக்கும்.
எது எப்படி இருப்பினும் இதுவரை 22 பாராளுமன்ற ஆசனங்களை தன்னகத்தே கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு நன்மை பயக்கும் எவ்வித சேவைகளும் இன்று வரை செய்யவில்லை, மாறாக சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாஸிச நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஈழப் போராளிகளெனும் அங்கீகாரம் தேடும் முயற்சியிலேயே ஈடுபட்டு வந்தது.
விடுதலைப்புலிகளினால் வன்னியில் தடுத்து வைக்கப்பட்டு யுத்தக் கவசங்களாகப் பாவிக்கப்பட்ட பல இலட்ச அப்பாவி மக்களை விடுதலைப் புலிகளெனவும், புலிகளை நேசிப்பவர்களெனவும் சர்வதேசரீதியில் பொய்ப் பிரசாரம் செய்து சமுதாயத்தில் ஊனமுற்றவர்களாகவும், வன்னி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியவர்களை அகதி முகாமில் முடக்குவதற்கும் காரணமாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு மீண்டும் வவுனியா நகர மட்டத்தில் ஆட்சியதிகாரம் வழங்க மக்கள் முனைந்திருப்பது தீக்குள் விரலை வைப்பதற்கு ஒப்பானது.
இன்னும் எத்தனை ஆயிரம் மக்களைப் பலி எடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் காத்திருக்கின்றார்களோ தெரியாது, அதற்கான அங்கீகாரத்தினை வவுனியா மக்கள் கொடுத்துள்ளார்கள், இனி வரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் சந்தற்பவாதக் கொள்கையினால் தமிழினம் பூண்டோடு அழிக்கப்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகம் உள்ளன.
மக்களின் பிரதிநிதிகளென தொடர் பிரசாரம் செய்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் யாழ்ப்பாணத்தில் தூக்கியெறியப்பட்டு இரண்டாமிடத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர், விடுதலைப் புலிகளின் ஆசீர்வாதத்துடனும், அவர்களின் கள்ள வாக்குகளாலும் பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கிராமங்களுக்கே உரித்தான உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி கொள்ள முடியாமல் தள்ளாடி நிற்பது வெளிச்சமாகின்றது.
தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி எனும் நாமத்துடன் செயற்பட்டு வரும் "கடிதம் புகழ்"
வீரசிங்கம் ஆனந்தசங்கரி நடந்து முடிந்த தேர்தலில் அவமானத்தைச் சந்தித்துள்ளார், வவுனியா நகரசபைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை நழுவவிட்டதுடன், யாழ்ப்பாண மாநகர சபையில் தன்னைச் சார்ந்தவர்களுக்கே ஆட்சியதிகாரம் கிடைக்குமெனக் கனவு கண்டிருந்தார், பிற்போக்குத்தனமும், சுயநலமும் இவருடனே குடிகொண்டிருப்பதனால் உள்ளூராட்சித் தேர்தலிலேயே இவரது கூட்டுக் கட்சி தோல்வியைத் தழுவிக் கொண்டுள்ளது, இதில் வீ.ஆனந்தசங்கரிக்குக் கிடைத்த விருப்பு வாக்குக்கள் 424 மாத்திரமே, இந்த இலட்சணத்தில் அரசியல்வாதியெனும் நாமத்துடன் இன்னும் தமிழர்களை ஏமாற்றத் தான் வேண்டுமா!
எத்தனை பேர் வாக்களித்தார்கள்?
பதிலளிநீக்கு/விடுதலைப்புலிகளினால் வன்னியில் தடுத்து வைக்கப்பட்டு யுத்தக் கவசங்களாகப் பாவிக்கப்பட்ட பல இலட்ச அப்பாவி மக்களை விடுதலைப் புலிகளெனவும், புலிகளை நேசிப்பவர்களெனவும் சர்வதேசரீதியில் பொய்ப் பிரசாரம் செய்து சமுதாயத்தில் ஊனமுற்றவர்களாகவும், வன்னி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியவர்களை அகதி முகாமில் முடக்குவதற்கும் காரணமாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு மீண்டும் வவுனியா நகர மட்டத்தில் ஆட்சியதிகாரம் வழங்க மக்கள் முனைந்திருப்பது தீக்குள் விரலை வைப்பதற்கு ஒப்பானது./
சூப்பர் ஆர்குயூமெண்ட் சார்.
16% பேருதான் வாக்கே அளிச்சாங்களாமே
வருகைக்கு நன்றி வி.விக்னேஷ்.
பதிலளிநீக்கு