வியாழன், 14 மே, 2009

அம்பலத்துக்கு வரும் தமிழ் ஊடகங்களின் போலிப் பிரசாரம் !

ஸ்ரீலங்கா படைதரப்பு வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழிப்பதாகக் கூறி கனரக ஆயுத தளபாடங்களைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக படுகொலைகளை நடத்தி வருகின்றது.

இது தொடர்பாக சர்வதேச சமூகத்தின் பார்வையை வன்னித் தமிழர்கள் மீது திருப்பும் நோக்கிலும், யுத்தத்தில் சிக்கியுள்ள விடுதலைப் புலிகளைப் பாதுகாக்கவும் சர்வதேசமெங்கும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களில் பலர் உண்ணாவிரதம், பாதை மறிப்பு போன்ற போராட்டங்களிலும் அத்துடன் ஸ்ரீலங்காவுக்கு ஆதரவு கொடுக்கும் நாடுகளின் தூதரகங்களுக்கு நெருக்கடிகளைக் கொடுக்கும் வகையிலும் சில ஆர்ப்பாட்டங்களையும் மற்றும் தாக்குதல்களையும் நடத்தி வருகின்றனர்.

இந்த புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் இரண்டு மாதங்களாக நடைபெற்று வருவதால் மக்களின் எழுச்சி விகிதம் குறைவடைந்து போகின்றது, தினமும் குடும்பம் குடும்பமாக வந்து நின்று போராட்டம் செய்ய எல்லோராலும் முடியாது, இங்கு வாழும் மக்கள் வேலைக்குப் போகவில்லையென்றால், வங்கிக்குக் கட்டவேண்டிய வீட்டுக் கடனை எப்படி கட்டுவதென அடுத்த கணம் யோசிக்கத் தொடங்கி விடுவர், அதனால் நீண்ட கால போராட்ட அழைப்புகளைத் தவிர்த்தே வருகின்றனர்.

குறுகிய காலப் போராட்டங்களை ஏற்றுக் கொள்ளும் புலம்பெயர் தமிழ் மக்கள் நீண்டகாலப் போராட்டத்துக்கு வராமையை கண்ணுற்ற போராட்ட ஒருங்கமைப்பாளர்கள் புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் வன்னித் தமிழர்கள் தொடர்பான போராட்டங்களுக்கு தொடர்ச்சியாக வருகை தருமாறு ஊடகங்கள் வாயிலாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வன்னியில் ஸ்ரீலங்கா படையினரால் தினமும் கொல்லப்படும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போதெல்லாம் அதிர்ச்சிக்குள்ளாகி கவலைப்படும் இந்த மக்களைப் போராட்டத் தளத்துக்கு இலகுவாகக் கொண்டுவர போராட்ட ஒருங்கமைப்பாளர்களால் முடிந்தது, இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி கொல்லப்படும், காயப்படும் தமிழர்களின் எண்ணிக்கையும், போர்க்களப் படங்களையும் சற்று மிகைப்படுத்தி செய்திகளாக சில ஊடகங்கள் வாயிலாக இவ் ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்டும், பிரசாரம் செய்தும் வருகின்றனர்.

இதனை அறியாத புலம்பெயர் அப்பாவி மக்கள் இப் படங்களையும், செய்திகளையும் பார்த்து கவலையடைந்து வீட்டில் இருந்து அழுகின்றார்கள், இதனைச் சாதகமாகப் பயன்படுத்தும் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஊடகங்கள் வாயிலாக போலிப் படங்களையும் காண்பித்து வருகின்றனர்.

நேற்றைய செய்திகளில் வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ள தமிழ் இளைஞர்கள் காணாமல் போனதாகவும் அவர்களின் சடங்கள் பொலநறுவையில் குளிரூட்டப்பட்ட அறைகளில் அவயவங்கள் தோண்டப்பட்ட நிலையில் உள்ளதாகவும், பின் சடலங்கள் பாரவூர்திகளில் ஏற்றப்பட்டு மலையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு புதைக்கப்படுவதாகவும் இதனைக் கண்ட ஒரு பாதிரியார் தனது செல்லிடப்பேசியினால் புகைப்படம் எடுத்ததாகவும் குறிப்பிட்டு படங்களோடு செய்திகளை தமிழ்வின், அதிர்வு போன்ற விடுதலைப் புலிகளின் சார்பு இணையத் தளங்களில் செய்தி வெளிவந்தது, முன்பொரு தடவை அதிர்வு இணையத்தளத்தில் பிரசுரமான போலிச் செய்தியை களத்துமேடு பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதிலுள்ள படங்கள் இந்தியாவில் சடலப் பரிசோதனை நடக்கும் விதத்தினைக் காண்பிக்க தயாரிக்கப்பட்டதாகும், இதனை ஸ்ரீலங்காவில் நடப்பதாக உலகுக்குக் காட்ட இப் பொறுப்பற்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பது வேடிக்கையானதாகும்.
(படங்கள் அகோரமானவை)

இது தொடர்பாக ஏற்கனவே பிரசுரமான செய்திகள்:

1. அதிர்வு, தமிழ்வின் செய்தி
பொலநறுவையில் மாபெரும் குளிரூட்டப்பட்ட பிரேத அறை: திடுக்கிடும் தகவல்

பொலநறுவை மாவட்டம் குருநாகல் பகுதியில் மாபெரும் குளிரூட்டப்பட்ட பிரேத அறை ஒன்று இருப்பதாக நேரில் பார்த்த பாதிரியார் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இத் திடுக்கிடும் தகவலை தந்திருப்பது ஒரு கத்தோலிக்க பாதிரியார். பாதுகாப்புக் கருதி அவர் பெயர், விபரங்கள் எதனையும் நாம் பிரசுரிக்கவில்லை. இங்கு வவுனியா, புதுக்குடியிருப்பு மற்றும் கிளிநொச்சியில் கைதாகி காணமற்போகும் இளைஞர்களை கொண்று அவர்களின் உடல் உறுப்புக்களை (இருதயம், ஈரல், சிறுநீரகம் மற்றும் கண்கள்) என்பன எடுக்கப்பட்ட பின்னர் குளிரூட்டப்பட்ட செயற்கை சவச்சாலை அறைக்கு அனுப்பப்படுவதாக தெரிவித்த பாதிரியார், அவை பின்னர் மலையகம் செல்லும் பார ஊர்திகளில் ஏற்றப்படுவதாகவும், மலையக்த்தில் உள்ள சிங்கள கிராமங்களில் அவ் உடல்கள் புதைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். சிங்கள இராணுவ உயர் அதிகாரி ஒருவரின் பிள்ளைக்கு ஞானஸ்தானம் செய்யச் சென்ற பாதிரியார் அங்கு நின்ற வேளை அவ் உயர் அதிகாரியின் உறவினர் ஒருவர் பாம்புக்கடிக்கு உள்ளானதால் ஏற்பட்ட பரபரப்பில் உயர் அதிகாரி அவ்விடத்தில் இருந்து சென்றுவிட்டதாகவும், அதனால் அயல் அட்டையில் நடந்த இக் கொடூரக் காட்சிகளை அவர் தற்செயலாக பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தனக்கு தின்பண்டம் கொண்டுவந்த அதிகாரியின் சீருடையில் இரத்தக்கறை காணப்பட்டதையடுத்து, சந்தேகமடைந்த அவர் மறைந்திருந்து பலவிடயங்களை பார்த்ததாகவும் வாசலில் இருந்த உடலங்களை தமது கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுத்ததாகவும் கூறியுள்ளார்.


2.
23 March 2004
AHRC-LT-01-2004

A letter by the Asian Human Rights Commission -- AHRC

The Horrendous Practices during Forensic Examinations in India


To
Mr. A. P. J. Abdul Kalam
President of India
New Delhi

Dear Sir

The Asian Human Rights Commission is concerned about the horrendous practices during forensic examinations at the government hospitals in the state of West Bengal, India.

At the Srirampur Government Hospital of Hoogly District, West Bengal, Mr. Ratan Dom conducts the autopsies (if one can call it an autopsy). Even though Dr. Gaffar is the forensic surgeon responsible for the examination of the bodies, in practice Mr. Ratan conducts the autopsy.

According to reliable information received Mr. Ratan is a government employee appointed for carrying corpses in the mortuary. He conducts the 'postmortem examination' with crude instruments like rusted knifes and hammer.

After the 'postmortem examination', the bodies are left without even suturing the incisions. The bodies are kept on open floor without any protection and they are left to rot in the open humid environment and it is common that body parts are eaten away by rats and dogs. The relatives of the deceased are to pay 'extra incentives' to Dr. Gaffar and to Mr. Ratan if they were to conduct a proper autopsy. It doesn't mean that even if the 'incentives' were paid the autopsy would be conducted in scientific manner in terms with the legal procedures respecting the etiquettes. It only guarantees suturing of the body after the postmortem examination. The attached photographs show how the bodies are handled in this particular hospital. Information reviles that this is not the only hospital in which dead bodies are handled in such fashion. It is the general practice in all government hospitals.

The very inhuman nature in which the bodies are handled and left to rot is an indicator of human values in the state and how far they are enforced and respected. It is also a pointer to the depth of exploitation, torture, neglect and corruption. It also indicates how much priority is given by the state for prevention of crime and protection of rights within the state. It is also clear indicator of the resources earmarked for prevention of crime and administration of justice in a 'welfare state'.

Torture is a crime and is one of the most heinous crimes against humanity. Callousness in handling dead bodies as mentioned above and exploitation of death is also a crime that comes under the ambit of the term 'torture' according to the UN Convention against Torture. India has abstained from ratifying the convention on the ruse that the domestic legislations within the country are adequate to prevent torture in the country. However the above facts paints a different picture.

The purpose of forensic examination is not only to find out the cause of death but is also a process which helps to do justice to the deceased and her/his family. In cases of suspicious death where the result of an autopsy is vital, one can imagine how far the purpose of justice is served in conditions as are prevailing at Srirampur Government Hospital.

Even if forensic examinations are held in proper manner the records are handled by police officers on deputation to courts. The unchallenged access to case records by the police officers on deputation to courts is yet another serious hindrance to delivery of justice in the state of West Bengal. This must end.

AHRC is aware that the Government of India is planning to restructure its criminal legislations in tune with the notorious Malimath Committee Recommendations. At this juncture it is pertinent to note the response from the Calcutta High Court signed by Mr. Nure Alam Chowdhury, J., Mr. Debi Prasad Sengupta, J., and Mr. Narayan Chandra, J. to the committee's questionnaire.

Question. "7.6. Do you agree with the fact that Prosecution should place greater reliance on forensic evidence?"

Answer. "No. Too much of reliance on forensic evidence may lead to disaster. Man falters -- sometimes machines falters dangerously, leaving no scope for rectification. But for detection of the criminals and not the crime forensic evidence may be used." *

In the light of the existing facts, one may even wonder what is left to rely upon? It is a pity that the suggestions by the judges were more concerned of taking away the basic ingredients of rule of law like the right to silence and presumption of innocence. The judges also recommended that Article 20(3) of the Constitution of India should be amended, as it was considered as a stumbling block in criminal cases.

Where gross violations of basic human values happen in such proportions within the state and when the courts, government and other arms of the state ignore such violations and further permit it to continue no justice what so ever could be achieved.

Any attempt to restructure the legislations without addressing the basic facts and correcting inherent errors due to improper implementation of existing laws would only result in catering the interests of a government which foster the idea of building a police state.

AHRC urge the state government and the court

* To urge the Government of India to ratify the Convention against Torture and to adoption the convention at the domestic level thorough implementation of appropriate laws.
* To take immediate actions to conduct an impartial inquiry into the incident mentioned above and to put an end to the practice of callousness, exploitation and torture as carried out by Dr. Gaffar and Mr. Ratan.
* To take appropriate steps without any delay so that the Government Hospitals in the state are provided with enough resources to procure adequate equipments and personnel for proper discharge of their duties.
* To immediately end the practice of deployment of police officers in criminal courts in the state of West Bengal and to replace them with civilian officers.

Mr. Basil Fernando
Executive Director
AHRC



Two photographs from the Srirampur Government Hospital, Hooghly, West Bengal. URL to the photographs:
http://www.ahrchk.net/statements/images/ltr-01-2004/image1.jpg
http://www.ahrchk.net/statements/images/ltr-01-2004/image2.jpg


CC.

1. The Chief Justice, Supreme Court of India
2. The Chief Justice, Calcutta High Court, Calcutta
3. The Chairperson, National Human Rights Commission, New Delhi
4. The Chairperson, State Human Rights Commission, West Bengal
5. The Home Minister, Government of India
6. The Home Minister, Government of West Bengal.

* Endnote. The reference to the detection of criminals indicates the positive attitude of the judges for polygraph test, which is another suggestive question in the questionnaire. Polygraph test is considered to be one of the most unreliable test for detection of crime due to its inaccuracy, whereas forensic examination in laboratory conditions is time tested and accepted in all jurisdictions worldwide.

3. http://www.ahrchk.net/statements/mainfile.php/2004statement/797/
4. http://www.ahrchk.net/ua/mainfile.php/2006/1809/
5. http://www.internationalreporter.com/News-3489/Rats-eat-away-newborn%E2%80%99s-eye-and-scratches-the-face.html
6. http://escapefromindia.wordpress.com/2008/04/17/shocking_images_from_india/

6 கருத்துகள்:

  1. இரண்டு கேணல்களும் 6 பிராந்திய தளபதிகளும் அரசபடைகளால் பிடிக்கப்பட்டதோடு புலிகளின் கப்பல்களின் உரிமையாளர், பாடகர் சாந்தன் உட்பட பலர் இராணுவத்திடம் பிடிபட்டதாகவும் பிரபாகரனின் கதையை ராஜபக்சே ஜோடானில் இருந்து திரும்பியவுடன் மக்களுக்கு அறிவிக்க இருப்பதாகவும் இங்குள்ள இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
    தம்பையா சபாரட்ணம்
    நாலாம் கட்டை
    அளம்பில் முல்லைத்தீவு

    பதிலளிநீக்கு
  2. களத்துமேட்டுக்கு வந்து பின்னூட்டமிட்டுச் சென்ற ஸ்ரீலங்கனுக்கு நன்றி.

    நீங்கள் குறிப்பிட்டுள்ள புள்ளி விபரங்கள் உறுதிப்படுத்தப்படாத தகவல்களே !
    இருந்தும் பாடகர் சாந்தன் போன்றவர்கள் அவர்களுக்குரித்தான தனித் திறமைகள் மூலம் உள்வாங்கப்பட்டவர்களேயன்றி போராடச் சென்றவர்களல்ல.

    பதிலளிநீக்கு
  3. இலங்கை அரசானது மனித அன்பும் அனைத்து மக்களையும் நேசிக்கும் ஒரு அரசு அல்ல பேராசன் மாக்ஸ் சொன்னது போல அது ஒரு அரச இயந்திரம்.அரச இயந்திரத்துக்கான எல்லா வடிவங்களையும் அது கொண்டுள்ளது.கிரிசாந்தி கொலை போல இன்னொரு கொலையைகூட செய்ய தயங்காது., மக்கள்புரட்சியினை அரியாத தமிழர் கூட்டம், இன்னும் இன்னும் மக்கள் சாக வேண்டும் அது தான் புரட்சி என்கிற தவறான வரட்சி வசதி வாய்புக்குள்
    சிக்கி விடுமுறக்குள் நாடு பார்க்கும் கூட்டம் அதை என்னென்று சொல்ல்வது.சொன்னால் துரோகி பட்டம் வேறு.அந்த படம் தொடர்பான முழு விபரம் இங்கே உள்ளது.http://escapefromindia.wordpress.com/2008/04/17/shocking_images_from_india/

    பதிலளிநீக்கு
  4. இலங்கை அரசானது மனித அன்பும் அனைத்து மக்களையும் நேசிக்கும் ஒரு அரசு அல்ல பேராசன் மாக்ஸ் சொன்னது போல அது ஒரு அரச இயந்திரம்.அரச இயந்திரத்துக்கான எல்லா வடிவங்களையும் அது கொண்டுள்ளது.கிரிசாந்தி கொலை போல இன்னொரு கொலையைகூட செய்ய தயங்காது., மக்கள்புரட்சியினை அரியாத தமிழர் கூட்டம், இன்னும் இன்னும் மக்கள் சாக வேண்டும் அது தான் புரட்சி என்கிற தவறான வரட்சி வசதி வாய்புக்குள்
    சிக்கி விடுமுறக்குள் நாடு பார்க்கும் கூட்டம் அதை என்னென்று சொல்ல்வது.சொன்னால் துரோகி பட்டம் வேறு.அந்த படம் தொடர்பான முழு விபரம் இங்கே உள்ளது.http://escapefromindia.wordpress.com/2008/04/17/shocking_images_from_india/

    பதிலளிநீக்கு
  5. நன்றி தோழர் அப்புச்சி,

    "அம்பலத்துக்கு வரும் தமிழ் ஊடகங்களின் போலிப் பிரசாரம்" எண்டு தலைப்பிட்டதும், செய்தி சூடு பிடித்தது ஆனால் கருத்து தெரிவிப்பவர்களும் மௌனித்து விட்டார்கள், ஏன் இந்த மௌனத்துக்கான காரணம், ஏற்றுக் கொள்ள மறுக்கின்றதா உள்ளம், அல்லது எதற்காக இந்த சடலப் பரிசோதனை எனும் நினைப்பா ?

    உண்மையைப் பேசியோர்களை துரோகிகளென நாமமிட்டு துரத்தியது முதல் சுட்டுத் தள்ளியது வரை இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது, இதனால் கிடைத்த பலாபலன் என்ன?

    இன்று இனத்தையே தொலைத்து விட்டு சுடலையைக் காவல் செய்கின்றோம், இதற்காகவா இவ்வளவு உயிர்ப்பலிகளை காவு கொண்டது.

    நீங்கள் காட்டிள்ள சுட்டி ஏற்கனவே இந்தச் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது அப்புச்சி.

    மக்களில் மரணத்தில் தான் தாயகம் பிறக்குமெனில் எதற்காக அந்த சுடுகாட்டுத் தாயகம், மக்களுக்காகப் போராட்டம் என்பது போய் போராட்டத்துக்காகவே மக்கள் எனும் வரட்டுப் பிடிவாதம் எதற்காக !

    நன்றி அப்புச்சி.

    பதிலளிநீக்கு
  6. ஈழவா! உங்களுடன் எப்படி நான் (தொலைபேசியில்) தொடர்பு கொள்வது?

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----