
போதிய உணவின்மையால் தெருக்களில் காணப்படும் பொலித்தீன் பைகளையும் இந்த மானினம் உணவென்று நினைத்து உண்பதையும் காணக் கூடியதாக உள்ளது, இப்படியான பொருத்தமற்ற சமிபாடடையாத பொருட்களை உண்ணுவதால் அருகிவரும் அழகிய மானினம் அழியக் கூடிய வாய்பே அதிகம்.
அருகி வரும் மானினம் தொடர்பாக சக பதிவர் தோழர் த.ஜீவராஜ் "ஜீவநதி" எனும் தளத்தில் அழகிய மானினத்தின் படங்களுடன் பதிவு செய்துள்ளார். அருகி வரும் மானினத்தைப் பாதுகாக்க வேண்டியது சகலரினதும் கடமையாகும்.
ஆயுதக் கலாசாரம் கோலோச்சிய எம் மண்ணில் அழகிய மானினம் பாதுகாக்கப்பட வேண்டியது கட்டாயத் தேவையாகும், காட்டை விட்டு தெருவுக்கு வனவிலங்குகள் வருவதற்குக் காரணம் அவற்றுக்கான உணவுகளும், சீதோஷ்ணநிலையும் கிடைக்காமையே ஆகும்.
திருமலையை ஒத்த அழகிய நகரான இந்தியாவின் ஏழுமலையான் குடி கொள்ளும் திருப்பதி மண்ணில் அருகி வரும் மானினங்களைப் பாதுகாக்க பாரிய முல்லை நிலப்பரப்பரப்பில் அழகிய சரணாலயம் அமைத்து, சுற்றிவர கம்பி வேலியிட்டு, உள்ளே அவற்றுக்குரிய உணவுகளையிட்டு பாதுகாத்து வருகின்றார்கள்.
இதே போன்று திருகோணமலை மாநகர சபையும் முன்வந்து சரணாலயம் அமைத்து அருகி வரும் அழகிய மானினங்களைப் பாதுக்க வேண்டியது அவசியமாகும், இதற்கு கிழக்கு மாகாணசபை தனது பூரண அதிகாரங்களை வழங்க வேண்டும்.
அருகி வரும் மானினத்தைப் பாதுகாப்பாரா கிழக்கு முதல்வர்?
நன்றி : http://geevanathy.blogspot.com/2009/05/blog-post_14.html
http://geevanathy.blogspot.com/2009/07/blog-post.html


என்ன ஈழவரே! விளையாடுகிறீரா? மனிசரே இந்தப்பாடு படும்போது மானாவது! யானையாவது!
பதிலளிநீக்குமன்னிக்கவும் முகுந்தன், காலத்துக்கேற்ற பதிவு இல்லை தான், என்றாலும் "கிழக்கின் உதயம்" என்கின்றார்களே ஆகையால் எழுதித் தான் பார்ப்போமே!
பதிலளிநீக்குஅத்துடன் சக பதிவரின் பதிவுக்கு வலுவூட்டவே இந்தப் பதிவு.
நன்றி முகுந்தன்.
ஈழவரே! எதற:கு மன்னிப்பு எல்லாம்? உங்கள் ஆதங்கம் - அன்பு எனக்குத் தெரியும். மானிடத்தை நேசிப்பவரல்லவா? பிற உயிர்கள் மீதும் அக்கறை இருக்க வேண்டும். நான் எப்போதும் உங்கள் பதிவுகளுக்கு முன்னுரிமை வழங்குபவன் அதனால்தான் அப்படி கருத்துரை இட்டேன். தவறிருந்தால் என்னைத்தான் நீங்கள் மன்னிக்க வேண்டும்!
பதிலளிநீக்கு