இலங்கை வலைப் பதிவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கை வலைப் பதிவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

நிறைவெய்திய இலங்கைப் பதிவர் சந்திப்பு! - இணையவழி ஒளிபரப்பினூடான தேடல்.

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு இனிதே நடந்தேறியது, வந்திருந்த ஆர்வலர்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர், இந் நிகழ்வை சர்வதேசமே இணைய வழியாகப் பார்த்தும் கருத்துத் தெரிவிக்கக் கூடிய வகையிலும் ஒழுங்கு செய்யப்பட்டமை ஓர் வரப்பிரசாதமாகும்.

தொழிநுட்ப வளர்ச்சியினால் சர்வதேசமெங்கும் பரந்து வாழும் தமிழ் வலைப் பதிவர்கள் இந்த நேரடி நிகழ்வை முறையாகப் பயன் படுத்தியிருப்பார்கள், ஆனால் இதில் கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டிய பதிவர்கள் தேவையில்லாமல் அரட்டையில் இறங்கியதே வேதனையாக இருந்தது.

கொழும்பு தமிழ் சங்கத்தில் இலங்கை வலைப் பதிவர் சந்திப்பை பலத்த வேலைப்பளுவுக்கும் மத்தியில் நிகழ்த்திக் கொண்டிருந்த தோழர்கள் நேரடி இணையத்தின் வழியான கருத்துத் தெரிவிக்கும் பகுதிக்கும் ஓடோடி வந்து வலைப் பதிவர்களின் அரட்டைக்கும் பொறுமையாகப் பதிலளித்துக் கொண்டிருந்தது சிறப்பாக அமைந்திருந்தது.

நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்ட வலைப் பதிவர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்ட போதிலும் அதனை இணைய வழி நேரடி நிகழ்வில் கேட்க முடியாமல் இருந்தது, காரணம் சத்தம் குறைவாகவும், தெளிவின்மையாகவும் இருந்தமையே, அது தொழிநுட்பக் கோளாறாக கொள்ளத் தக்கதே!

இளைய பதிவர் ஒருவரின் அறிமுகம் எல்லோரையும் திகைப்புக்கு உள்ளாக்கியது, அதிகம் கருத்துத் தெரிவிக்கா விட்டாலும் தந்தையினாலேயே இந்த பாதைக்குள் நுழைந்தாக குறிப்பிட்டது அருமை.

கலந்துரையாடலில் "யாழ்தேவி திரட்டி" பற்றிய விமர்சனம் சூடு பிடித்தது, பலரும் பல கருத்தினைத் தெரிவித்தனர், யாழ்தேவி எனும் நாமம் பொருத்தமற்றது என்பதுவே பலரது ஆதங்கமாக இருந்தது, இதில் பிரதேசவாதம் தொக்கி நிற்பதாக சிலரும், சின்னமாக பொருத்தமற்ற விதத்தில் புகையிரதம் இதில் இணைக்கப்பட்டிருப்பதாக சிலரும் விமர்சனம் செய்தனர். அதன் நிர்வாகத்தினரும் அதனை ஏற்றுக் கொண்டமை சந்திப்புக்குக் கிடைத்த சிறப்பம்சத்தில் ஒன்றாகும்.

அடுத்த சந்திப்பு பற்றியதாகவும், ஏற்பாட்டுக் குழுவினரின் நிர்வாகப் பொறுப்புக்கள் பற்றி பேசப்பட்ட போதிலும் முடிவெதுவும் எட்டப்படவில்லை. இறுதியில் சஞ்சிகையொன்றும் வினியோகிக்கப்பட்டு இனிதே நிறைவெய்தியது.

படங்களை நேரடியாக பங்கெடுத்த வலைப் பதிவர்களில் பதிவுகளில் காணாலாம்.
1. ஆதிரை
2. வந்தியத்தேவன்

பிந்திய இணைப்பு
3. மதுவதனன் மௌ

சனி, 22 ஆகஸ்ட், 2009

இலங்கை வலைப் பதிவர் சந்திப்பும் நிகழ்ச்சி நிரலும்!

நாளை காலை கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் "இலங்கைப் பதிவர் சந்திப்பு" கோலாகலமாக நிகழவிருக்கின்றது.

நிகழ்ச்சி நிரல்:
* அறிமுகவுரை
* பதிவர்கள் அறிமுகம்
* வலைப்பதிவு ஒரு முன்னோட்டம்
* திரட்டிகள்
* சிறப்பு அதிதி உரை
* இடைவேளை
* வலைப்பதிவு தொழில்நுட்பங்கள்
* வலைப்பதிவும் சட்டமும்
* பதிவுலக அனுபவங்கள்
* எதிர்காலத் திட்டங்கள்
* கலந்துரையாடல்
* நன்றியுரை

தயாராகியுள்ள நிகழ்ச்சி நிரலுக்கேற்ப உரிய நேரத்திலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாகிவிடுமென நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர். நிகழ்ச்சியின் பெறுபேறுகளைக் கொண்ட படங்களை நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் உடனுக்குடன் தரவேற்றம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு - 2009

இலங்கை வலைப் பதிவாளர்களை இணைக்கும் நோக்கில் எதிர்வரும் 2009.08.23 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை மணி 9 க்கு கொழும்பு தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் இலங்கைப் பதிவர் ஏற்பாட்டுக் குழுவினர் சார்பாக முதலாவது சந்திப்பினை நடாத்துவதற்கு பதிவுலகத் தோழர்கள் லோஷன், புல்லட், வந்தி மற்றும் ஆதிரை போன்றோர் முன் வந்திருப்பது பாராட்டுக்குரியதாகும்.

* இலங்கைத் தமிழ் வலைப் பதிவாளர்களிடம் அறிமுகத்தையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல்.

* புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்

* இலங்கைப் பதிவாளர்களின் திறமைகளை இணையத்தைவிட்டு வெளிக்கொணர முயற்சி செய்தல்.

* பதிவாளர்களிடையேயான கருத்துரைகள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல்.

* பதிவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அல்லது தொழில்நுட்ப சந்தேகங்களுக்கான வழிமுறைகளை ஆராய்தல்.

இதுபோன்ற நிகழ்ச்சி நிரலுக்கேற்ப இலங்கையர் வலைப் பதிவை சர்வதேச தரத்துக்கு நிகராகக் கொணர இலங்கைப் வலைப் பதிவர் அனைவரும் இந் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஆதரவினைக் கொடுக்க வேண்டியது கட்டாயத் தேவையாகும்.

நடைபெறவிருக்கும் இலங்கை வலைப் பதிவர் சந்திப்பு இனிதே நடந்தேற "களத்துமேடு" வாழ்த்துகின்றது.


More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----