2012 ஆம் ஆண்டை வரவேற்பதற்காக கொழும்பு காலிமுகத் திடலுக்கு முன்னால் உள்ள ரமாடா நட்சத்திர விடுதியில் ஏற்பாடாகியிருந்த களியாட்ட நிகழ்வில் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கேணல் கருணா அம்மான் பிரத்தியேக செயலாளருடன் கலந்து சிறப்பித்தார். ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதித் தலைவரும், மீள் குடியேற்ற பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் நிகழ்வில் இசைக்கேற்ப யுவதிகளுடன் குத்தாட்டத்தில் ஈடுபட்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது என கூடவே கலந்து கொண்ட அதிதி ஒருவர் தெரிவித்தார்.
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களில் பலர் இன்னமும் மீள் குடியேற்றம் செய்யப்படாமல் கண்ணீருடன் அகதிகளாக புத்தாண்டை வரவேற்கும் போது இவர்களுக்காக போராடப் புறப்பட்டேன் எனக் கூறிக் கொள்ளும் முன்னாள் கேணலும், தற்போதைய பிரதியமைச்சருமான கருணா எனும் முரளிதரன் இம் மக்களின் வேதனைகளை மறந்து குத்தாட்டத்தில் ஈடுபட்டிருப்பது வேதனையானது.
மேலதிக படங்களுக்கு : SLFP Vice President in action



.jpg)
.jpg)

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.