வியாழன், 17 மே, 2012

சரத் பொன்சேகாவுக்கு நாளை விடுதலை?


தமிழின அழிப்புக்கு முன்னின்றவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுக்கு உரியவருமான சரத் பொன்சேகா நாளை அல்லது நாளை மறுதினம் ஜனாதிபதியால் விடுதலை  செய்யப்படவுள்ளார்.

அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது எனும் நிபந்தனைக்கேற்பவே சரத் பொன்சேகா விடுதலையாக இருப்பதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

2012.05.16 ஆம் திகதி இரவு பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸின் வீட்டில் திருமதி அனோமா பொன்சேகாவுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பின் போது நாளை அல்லது நாளை மறுதினம் சரத் பொன்சேகா  விடுதலை செய்யப்படுவாரென ஜனாதிபதி கூறியதாக ஏஎப்பி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

வெள்ளி, 11 மே, 2012

ஈ பி ஆர் எல் எவ் (நாபா) துரைரெத்தினம் சுரேஸ் அணிக்கு தாவினார்!


ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பத்மநாபா பிரிவு கிழக்கு மாகாண சபை உறுப்பினரான இரா.துரைரெத்தினம் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சுரேஸ் அணியில் இணைந்து கொண்டுள்ளார்.

வியாழன், 10 மே, 2012

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் குளிர் காயும் தீய சக்திகளின் சுவரொட்டிகள்!


முள்ளிவாய்க்கால் அவலத்தின் பேரால் மீண்டும் தமிழ் மக்களை சிக்கலுக்குள் கொண்டு வர சில தீய சக்திகள் முயன்று வருகின்றனர், இதன் ஓரங்கமாக வவுனியா நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இத் தீய சக்திகளின் சுவரொட்டிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் "தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காக முன்னிற்கும் இயக்கம்" எனும் பெயரில் சுவரொட்டிகளும் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளன.

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

கோடரிக்காம்பான சிவாஜிலிங்கத்தின் கறுப்பு கொடி போராட்டம் - வீடியோ இணைப்பு


தந்தை செல்வாவின் நினைவு தினக் கூட்டம் நேற்று 2012.04.26 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது அங்கு உரையாற்ற வந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சருமான சொல்லின் செல்வர் செல்லையா ராஜதுரைக்கு கோடரிக்காம்பாகச் செயற்பட்டு வரும் சிவாஜிலிங்கம் எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடிப் போராட்டம் நடாத்தினார்.

ஞாயிறு, 29 ஜனவரி, 2012

இன்டபோல் சர்வதேச பொலிஸாரால் தேடப்படும் விடுதலைப் புலிகளின் நெடியவன்!


கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் ஶ்ரீலங்கா படையினரால் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடவும், போராட்டத்தின் பெயரால் மேலதிக பணத்தினை வசூலிப்பதனை நோக்கமாகக் கொண்டு பலர் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் எனக் கூறிக் கொள்கின்றார்கள், இந்தப் பட்டியலில் முன்னணியில் உள்ளவரும் நோர்வேயில் வசிப்பவருமான நெடியவன் எனப்படும் சிவபரன் பேரின்பநாயகம் இன்டபோல் எனப்படும் சர்வதேச பொலிசாரினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு தேடப்படுகின்றார்.

சனி, 28 ஜனவரி, 2012

தமிழ்வின் வெளியிட்ட போலிச் செய்திக்கு ஆப்பு!


அதிக வாடிக்கையாளர்களைச் சேர்த்துக் கொள்வதற்காக புதுப் புதுச் செய்திகளை முந்திக் கொண்டு இணையத்தளங்கள் தரவேற்றி வருகின்றன, இவை நவீன தொழினுட்பத்தின் வளர்ச்சி என்றால் மிகையில்லை, ஆனால் வருமானத்தை மாத்திரமே குறியாகக் கொண்ட "தமிழ்வின்" போன்ற சில இணையத்தளங்கள் போலியான செய்திகளை பிரசுரித்து மக்களை ஏமாற்றி வருகின்றன.

திங்கள், 23 ஜனவரி, 2012

கூட்டமைப்பு சம்பந்தனை பகிரங்க கலந்துரையாடலுக்கு அழைக்கின்றார் கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன்!


வடக்கு கிழக்கு இணைப்பு தவிர்ந்த மாகாணங்களுக்கான காணி, காவற்துறை அதிகாரங்கள் பற்றிப் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா சம்பந்தனை கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

போதைப் பொருள் கடத்திய மௌலவி!


போதையை எந்த மதமும் அங்கீகரிக்கவில்லை, இஸ்லாம் மதம் இறுக்கமான கட்டுப்பாடுகளின் ஊடாக போதைப் பொருள் பாவனையை முற்றாகவே தடை செய்துள்ளது, ஆனால் வேலியே பயிரை மேய்வது போல் இஸ்லாமிய மதப் போதகரான சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.சி.எம்.புஹாரி மௌலவி போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட போது சென்னை விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

சனி, 21 ஜனவரி, 2012

தற்கொலை செய்த விடுதலைப் புலிகள் தம்பதியினரின் மரண வாக்குமூலம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களாக இருந்து சுய வாழ்க்கைக்குத் திரும்பிய நிரஞ்சன் சங்கீதா காதல் தம்பதிகள் கடந்த 2012.01.16 ஆம் திகதி கொடிய வறுமைக்கு முகம் கொடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். நிரஞ்சன் விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் காலை இழந்ததுடன், காதலி சங்கீதாவைத் திருமணம் செய்து பால்ப்பண்ணை, முறிப்பு, முள்ளியவளை எனும் விலாசத்தில் வசித்து வந்தார்.

திங்கள், 16 ஜனவரி, 2012

யாழ். அரச செயலகத்தில் அநாகரிகமாக உரையாற்றிய ஶ்ரீதரன் பா.உ.


யாழ் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று 2012.01.16 ஆம் திகதி யாழ்ப்பாணம் அரசாங்க செயலகத்தில் நடைப்பெற்றது, உண்மையற்ற செய்திகள் ஊடகங்களில் வெளிவருவது தொடர்பாகவும், அறிக்கைகளை பொறுப்பற்று வழங்கக் கூடாதெனவும் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் கருத்துத் தெரிவித்தார்.

வெள்ளி, 13 ஜனவரி, 2012

ஶ்ரீ லங்காவில் பதிவுச் சான்றிதழ் பெற்ற இணையத் தளங்கள் விபரம்.


இலங்கைச் செய்திகளைத் தரவேற்றும் இணையத் தளங்கள் அனைத்தும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சில் பதிவு செய்து கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து முதன் முறையாக இன்று 2012.01.13 ஆம் திகதி 27 செய்தி இணையத் தளங்கள் ஶ்ரீ லங்காவின் முறையான பதிவுச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளன.

வியாழன், 12 ஜனவரி, 2012

ஶ்ரீலங்கா அமைச்சரவையில் பாரிய மாற்றம் பிரதமர் சமல்?


எதிர்வரும் 2012.01.17 ஆம் திகதி ஶ்ரீ லங்கா அமைச்சரவையில் பாரிய மாற்றம் கொண்டு வர ஆழும் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.  இவ் அமைச்சரவைக்கு பிரதமராக தற்போதைய சபாநாயகரும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான சமல் ராஜபக்ஷ நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செவ்வாய், 10 ஜனவரி, 2012

படத்தில் உள்ள சிறுவனைப் பற்றிய தகவல்கள் தேவை!


மன நலம் குன்றிய 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் அநாதரவாக நடமாடியதைத் தொடர்ந்து மட்டக்களப்பு நீதிமன்றத்தில் பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளார், சிறுவனால் தன்னைப் பற்றிய தகவல்களை வழங்க முடியாமல் இருப்பதால், இவர் மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் திணைக்கள பராமரிப்பில் உள்ளார், ஆகவே இவரைப் பற்றிய தகவல்களைத் தெரிந்தவர்கள் மட்டக்களப்பு சிறுவர் நன்னடத்தைப் பராமரிப்பு அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

இரா துரைரெத்தினத்தின் பிளவுபட்ட விடுதலைப் புலிகள்!


சுவிற்சர்லாந்து நாட்டில் இருந்து வெளிவரும் "தினக்கதிர்" எனும் புலிச்சார்பு இணைய பத்திரிகையின் ஆசிரியர் இரா துரைரெத்தினம் அவர்கள், தனது வரலாற்றில் நினைவு கொள்ளத்தக்க விடயங்களை தொடராக பதிவேற்றம் செய்து வருகின்றார், இராமசாமி துரைரெத்தினம் நேர்மையான ஊடகவியலாளரென சிலரால் கூறப்படுகின்ற போதிலும் விடுதலைப் புலிகளுக்கான வகுப்புவாத சிந்தனை கொண்ட இவர், பல தமிழர்கள் விடுதலைப் புலிகளால் சுட்டுச் சரிக்கப்பட்ட போதிலும் மற்றும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போதும் விடுதலைப் புலிகள் செய்தவை சரியானதென வியாக்கியானம் செய்ய முனைந்தவர் என்பது பல புத்திஜீவிகளின் கருத்தாகும், இதனால் துரைரெத்தினம் பற்றிய மாற்றுக் கருத்துக்களும் பரவலாக உள்ளன.

சனி, 7 ஜனவரி, 2012

உலகம் அழிவை நோக்கி - மாயன் கலண்டர்!

எதிர்வரும் 2012.12.21 ஆம் திகதி காலை மணி 11:11 அளவில் மாயன் நாள்காட்டி தனது நீண்ட காலத்துப் பயணத்தினை முடித்துக் கொள்கின்றது, இதன் மூலம் மக்களிடம் பரவலான பல கருத்துக்கள் நிலவி வருகின்றன, அவற்றில் முதன்மையானது 2012 டிசம்பர் 21 காலை 11 மணி 11 நிமிடம் 11 விநாடியுடன் உலகம் அழிவை நெருங்குகின்றது என்பதாகும்.

வெள்ளி, 6 ஜனவரி, 2012

லண்டனில் உலா வரும் தமிழீழம் பேரூந்து - காணொளி


பிரித்தானியாவின் வடமேற்கு லண்டன் பகுதியின் கிங்ஸ்பிறி பகுதியூடாக தமிழீழம் என எழுதப்பட்ட பயிற்றுநர் பேரூந்து சேவையில் உள்ளது.  ஈழ வரைபடம், கார்த்திகைப் பூ, விடுதலைப் புலிகளின் பாயும் புலி இலச்சனை, பிரித்தானிய தேசியக் கொடி மற்றும் "நான் பெரிது நீ பெரிதென்று வாழாமல் நாடு பெரிது, தமிழ் பெரிது, தமிழ் மானம் பெரிதென்று வாழ்" எனும் வாசகமும் பேரூந்தின் முகப்பின் மேல்க் கண்ணாடியில் பொறிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக் கழக நினைவுச் சிலை சேதம் - மாணவர்கள் எதிர்ப்பு ஊர்வலம் (படங்களுடன்)

கொழும்பு ஶ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக் கழகத்தில் அமைந்திருந்த நினைவுச் சிலையினை அண்மையில் அரச படையினர் சேதமாக்கி இருந்தனர்,  இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக் கழக மாணவர்கள் கடந்த புதன்கிழமை 2012.01.04 ஆம் திகதி நீதி கோரி பாரிய எதிர்ப்பு ஊர்வலத்தினை நடாத்தினர்.

வியாழன், 5 ஜனவரி, 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக யாழ்.சாவகச்சேரியில் ஹர்த்தால்!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட சாவகச்சேரி பிரதேசசபையின் தன்னிச்சையான நடவடிக்கைகள் மக்களுக்கான பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது, இதனை நிறுத்தக் கோரி சாவகச்சேரி மக்கள் இன்று 2012.01.05 ஆம் திகதி கடையடைப்புடன் கூடிய ஹர்த்தால் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

புதன், 4 ஜனவரி, 2012

புத்தாண்டு வரவேற்பில் பிரதியமைச்சர் கருணா அம்மான் காதலியுடன் குத்தாட்டம் - படங்களுடன்!


2012 ஆம் ஆண்டை வரவேற்பதற்காக கொழும்பு காலிமுகத் திடலுக்கு முன்னால் உள்ள ரமாடா நட்சத்திர விடுதியில் ஏற்பாடாகியிருந்த களியாட்ட நிகழ்வில் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கேணல் கருணா அம்மான் பிரத்தியேக செயலாளருடன் கலந்து சிறப்பித்தார்.  ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதித் தலைவரும், மீள் குடியேற்ற பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் நிகழ்வில் இசைக்கேற்ப யுவதிகளுடன் குத்தாட்டத்தில் ஈடுபட்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது என கூடவே கலந்து கொண்ட அதிதி ஒருவர் தெரிவித்தார்.

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

இன்று முதல் இலங்கைக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கான இலத்திரனியல் விசா!


சிங்கபூர், மாலைதீவு நீங்கலாக ஏனைய நாடுகளில் இருந்து இலங்கைக்கு இடைத் தங்கல் மற்றும் குறுகிய கால பயணம் மேற்கொள்வோர் இன்றில் இருந்து (2012.01.01) இணையம் வழியான கட்டணம் செலுத்திய இலத்திரனியல் விசாவினைப் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----