தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட சாவகச்சேரி பிரதேசசபையின் தன்னிச்சையான நடவடிக்கைகள் மக்களுக்கான பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது, இதனை நிறுத்தக் கோரி சாவகச்சேரி மக்கள் இன்று 2012.01.05 ஆம் திகதி கடையடைப்புடன் கூடிய ஹர்த்தால் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
சாவகச்சேரி பிரதேசசபைத் தலைவர் தேவசகாயம்பிள்ளை வர்த்தகர்கள் மீது அதிகப்படியான வரிச் சுமைகளை ஏற்படுத்தி வருவதால் ஏற்படும் அசௌகரியங்கள் உட்பட ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான ஹர்த்தால் நடவடிக்கையை சாவகச்சேரி வர்த்தகர் சங்கத்தினர் மேற்கொண்டனர்.
இறுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன், சபையின் முரணான நடவடிக்கைக்காக பிரதேச மக்களிடம் மன்னிப்புக் கேட்டதுடன், வர்த்தகர் சங்கத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்ததைத் தொடர்ந்து நாளை வழமைபோன்று கடைகள் திறக்கப்படுமென வர்த்தகர் சங்கம் அறிவித்துள்ளது, இதே போன்று ஏனைய பணிகளும் நாளை இடம்பெறுமென அறிய முடிகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.